மேலை நாடுகளின் நிறவெறிக் கொள்கையும் இந்தியாவின் உயர்ஜாதி பிராமணவாதமும்.!
இந்தியாவில் 5 %-க்கும் குறைவுதான் பிராமணர்கள். இவர்கள் 95% இந்தியக் குடிமக்களை ஆட்சி செய்து வருகின்றனர்.
தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர்கள் 15% தான். இவர்கள் 85% கறுப்பர்களை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் இந்தியா அடிக்கடி நிறவெறிக் கொள்கையை அதாவது கறுப்பர்களை வெள்ளையர்கள் ஆட்சி செய்யும் அநீதியை அடிக்கடி குறை கூறுவதுண்டு.
அதே அநீதியை இந்தியாவில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அவர்களைக் குறைகூற எந்தத் தகுதியுமில்லை. இதை ஏனோ உணர்ந்து கொள்ளத் தவறி விட்டனர்.
ஜனநாயகம், மதச்சார்பிண்மை ஆகியவற்றைப் பற்றி வாய்நிறையப் பேசுகின்றோம்.
அதேபோல் சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனப் பீற்றிக் கொள்கின்றோம்.
ஆனால் இந்த நாட்டில் பெரும்பான்மையாக வாழும் ஒரு சமுதாயத்தை தீண்டத்தகாதவர்களாகவும், பார்க்கத்தகாதவர்களாகவும் ஆக்கி வைத்திருக்கின்றோம்.
உண்மை நிலை இப்படி இருக்க, சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகம் இவற்றைப் பற்றிப் பேசிட நமக்கு என்ன தகுதி இருக்கின்றது.?
இந்தியாவின் உண்மையான குடிகளே! இந்த ஆதிக்கவாதிகளை அப்புறப்படுத்த அணி திரளுங்கள்.
மக்கள் தொடர்பு கருவிகள் யார் பிடியில்.?
இன்று இந்த நாட்டில் வெளிவரும் நாளிதழ்கள், மாத, வார, இதழ்கள் இவற்றில் யார் முழுமையான ஆதிக்கம், செலுத்துகின்றார்கள்.? இவற்றில் 81 சதவீதம் பிராமணர்கள் பிடியில் தான்.
இன்று நாட்டில் வெளிவரும் செய்திகளை மக்களுக்குச் சொல்லிடும் பத்திரிக்கைகள் இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா இவை அனைத்தும் பிராமணர்களின் ஆதிக்கத்தில் இருப்பவை.
இவற்றில் பணியாற்றுபவர்களும் பிராமணர்கள் தாம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் 93 சதவீதம் பிராமணர்கள்.
ஹிந்து 97 சதவீதம் பிராமணர்கள்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா 73 சதவீதம் பிராமணர்கள். இவர்கள் (பிராமணர்கள்) வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் தங்கள் ஆதிக்கத்தை முழுமையாக நிலைநாட்டி விட்டார்கள்.
பணமும் - வளமும் - பிராமணர்களும்
மனுஸ்மிர்தி விதி VII 133 இப்படிச் சொல்லுகின்றது. 'பிராமணர்களை வரிவிதிப்பிற்கு உட்படுத்தக் கூடாது. அவர்களை அரசுத்துறை செலவில் பராமரிக்க வேண்டும்.' சூத்திரர்கள் என்ற கீழ்ஜாதி ஹிந்துக்கள் பற்றி மனுஸ்மிர்தி இப்படிக் கூறுகின்றது. 'விதி எண்: X - 129-ல், செல்வத்தைச் சேர்த்துக் கொள்வது சூத்திரர்களுக்கு ஆகாது. அவர்களுக்கு அதற்குரிய திறமைகள் இருந்தாலும சரியே.! சூத்திரன் செல்வத்தை சேர்த்துக் கொள்வது என்பது பிராமணனுக்கு வேதனையைத் தரும். இன்னும் பிராமணன் பலத்தை பிரயோகித்துச் சூத்திரனுடைய செல்வத்தை அபகரித்துக் கொள்ளலாம்.!'
பஞ்சவனிஷ் பிரஹமான் 3-1/11 இப்படிக் கூறுகின்றது.
'சூத்திரன் செல்வத்தை சேர்த்துக் கொண்டாலும் அவன் எப்போதும் ஓர் அடிமையாகவே இருப்பான். அவனுடைய தலையாய பணி உயர்ஜாதியனரின் கால்களை கழுவுவதாகும்.!'
துளசிதாஸ், இவர் ஒரு பிராமணன். இவர் தன்னுடைய நூலில் - அதாவது இராமாயணத்தில் பின்வருமாறு எழுதுகின்றார்.
'சூத்திரன் ஒருவன் கற்றவனாகவும், நல்லொழுக்கமுள்ளவனாகவும் இருந்தாலும் அவனுக்கு எந்த மதிப்புமில்லை.!'
ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய போது எல்லா தொழிற்சாலைகளையும் பிராமணர்களே எடுத்துக் கொண்டார்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் இன்று நாட்டிலுள்ள 60 சதவீதம் தொழில்களின் மேல் ஏகபோக ஆதிக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.
60 சதவிகிதம் ஆலைகளை அடக்கியாளும் இவர்கள் நாட்டின் மொத்த குடிமக்களுடன் 5 சதவீதம் தான் என்பதை மறக்கலாகாது.
இதேபோல் இந்த 5 சதவிகிதத்தினர் தான் நாட்டின் உயர்ப் பதவிகளில் 60 சதவிகிதம் பதவிகளை வகிக்கின்றனர்.
இதோ இந்தப் புள்ளி விபரத்தைப் பாருங்கள். இந்த இந்தியா இன்றும் யார் கைகளில் சிச்கித் தவித்துக் கொண்டிருக்கின்றது என்ற உண்மை புலப்படும்.
1 நாடாளுமன்றத்தின் மக்கள் சபையில் - 45%
2 நாடாளுமன்றத்தின் மேல் சபையில் - 36%
3 கவர்னர்கள் - L.G. 50%
4 கவர்னர்களின் செயலாளர்கள் - 54%
5 மத்திய அமைச்சரவையின் செயலாளர்கள் - 53%
6 மத்திய அமைச்சரவையின் தலைமை செயலாளர்கள் - 54%
7 அமைச்சர்களின் தனிச் செயலாளர்கள் - 70%
8 நீதிபதிகளின் தனிச் செயலாளர்கள் - 62%
9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் - 51%
10 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் - 56%
11 உயர்நீதிமன்ற நீதிபதிகள் - கூடுதல் நீதிபதிகள் - 50%
12 இந்தியாவின் பிரதிநிதிகளாக வெளிநாட்டுத் தூதுவர்கள் - 41%
13 பொது நிறுவனங்களில் தலைமை பொறுப்பாளர்கள் (மத்திய அரசின் கீழ் இயங்குபவை) - 57%
14 மாநில அரசுகளின் கீழ் இயங்கும் அரசின் பொது நிறுவனங்களின் முதன்மைப் பொறுப்பாளர்கள் - 82%
ஆதாரம் : Voice of the Weak, Oct, 1989)
ஏனைய நிறுவனங்களில்.!
வங்கிகள் - 57%
விமானத் துறை - 61%
IAS அதிகாரிகள் (மாவட்ட ஆட்சியாளர் போன்ற பொறுப்பில் இருப்பவர்கள்) - 72%
IPS காவல்துறையின் உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் - 61%
வானொலி மற்றும் தொலைக்காட்சியில் பணியாற்றுபவர்கள் - 83%
CBI மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள், சுங்கவரி அதிகாரிகள் ஆகியவற்றில் பணியாற்றுபவர்கள் - 72%
இது தான் இந்த நாட்டில் கிடைக்கும் வேலை வாய்ப்புகளின் நிலை.
அரசு இயந்திரத்தை இயக்கிடும் அத்தனை பதவிகளும், அரசு உதவியுடன் நடக்கும் நிறுவனங்களை நிர்வகிக்கும் முக்கியப் பொறுப்புகளும் பிராமணர் கையில் - இப்படி, அரசின் கஜானா முழுவதும் ஒரு சாராருக்கே சம்பளம் சலுகை என்று வழங்கப்பட்டு விடுகின்றது.
இந்த நிலை மாற வேண்டும். அரசுத் துறையில் கிடைக்கும் வேலை வாய்ப்பு வசதிகள் ஏனைய மக்களுக்கும கிடைத்திட வேண்டும் என்பதை
பரி
ந்
துரைப்பதே மண்டல (குழு) கமிஷன் அறிக்கை.
பரிந்துரை:
இந்தியாவை முழுமையாகத் தின்று ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கும் பிராமண ஏகாதிபத்தியம், இந்த மண்டல் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதில் அத்தனை முட்டுக்கட்டைகளை போட்டு வருகின்றது. இந்தியா சுதந்திரம் அடைந்து இன்றுவரை இந்தியாவை பிராமணர்கள் தான் பிரதமர் பதவியிலிருந்து ஆண்டு வருகின்றனர். வி.பி சிங் மட்டும் தான் இதில் பிராமணர் அல்லாதவர்.
ஹிந்துக்களே, இந்த நிலைமை இன்றே அகற்றிட முன்வராவிட்டால்,
உங்கள் குழந்தைகள், குழந்தைகளின் குழந்தைகள், இப்படி உங்கள் சந்ததியினர் அனைவரும் இந்த ஆரிய வந்தேரிகளால் அடிமைப்படுத்தப்பட்டு விடுவார்கள்.
கல்வி மக்களின் பிறப்புரிமை.
இந்திய அரசியல் நிர்ணயச்சட்டம் எல்லோருக்கும் சம வாய்ப்புகள் வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தினாலும், இன்று வரை உயர்கல்விகள், விஞ்ஞான பொறியியல், மருத்துவக் கல்விகள் ஒரு சாராருக்கு மட்டுமே கிடைத்துக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் மட்டுந்தான் கடவுளின் பெயரால் வேதத்தின் பெயரால் ஒரு இனத்திற்கு கல்வி மறுக்கப்படுகின்றது.
இந்தியாவின் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை 100க்கு 30 பேர் தான்.
ஆனால் பிராமணர்கள் மட்டும் 100க்கு 100 பேரும் கல்வி கற்று விடுகின்றனர்.
அரசின் உதவியின் கீழ் அமெரிக்காவிலிருக்கும் அல்லது அமெரிக்காவில் கல்வி கற்கும் டாக்டர்களில் 67 சதம் பேர் பிராமணர்கள்.
இந்தியாவின் செலவில் கல்வி கற்றுத் தேறிய இவர்கள் இந்தியாவில் மருத்துவ உதவி கிடைக்காமல் கதறும் ஏழை, எளிய மக்களுக்கு சேவை செய்து வாழ்வதை விடுத்து அமெரிக்கா முதலான மேலை நாடுகளில் சென்று சம்பாதித்துக் குவிக்கின்றனர்.
சட்டத்தைக் கற்று வழக்கறிஞராக இருப்பவர்கள் 53 சதம் பிராமணர்கள்.
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களில் 51 சதம் பிராமணர்கள்.
இதெல்லாம் எப்படி அவர்களில் சாதிக்க முடிகின்றது.? அவர்களிடத்தில் நாம் தான் ஏனைய இனங்களுக்கெல்லாம் எஜமானர்கள் என்ற அகங்காரம் குடி கொண்டிருக்கிறது. எதையும் ஏனைய இனங்களிடமிருந்து அபகரித்துக் கொள்ளும் உரிமை இருக்கின்றது என்பன போன்ற ஆணவங்களின் செயல் வடிவம் தான் மேலே சொன்ன சாதனைகள்.
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களே.! இந்த அநீதிகளுக்கெதிராக போராட வேண்டாமா.? நமது எதிர்கால சந்ததிகளை இந்த அடிமைத்தளைகளிலிருந்து விடுவித்திட வேண்டாமா.? எனவே உங்கள் நெடுந்தூக்கம் கலைந்து விழிமின்.! எழுமின்.!!
ராமா.! ராமா.!! -பிராமணீயத்தின் குருபக்தி.!
பிராமணர்கள் ஏனைய இந்தியர்கள் பின்பற்றிடும் மதங்களையும், மார்க்கங்களையும் விமர்சிக்கின்றார்கள்.
அதே நேரத்தில் தங்களது மதத்தை, அதில் புனிதமாகப் போற்றப்படும் நூல்களை அறிவுக்கண்ணோடு பார்க்க மறுக்கின்றனர்.
அமெரிக்காவைச் சார்ந்த அறிஞர் சார்லஸ் என்பவர் ஹிந்து அல்லது பிராமணர் என்பதை இப்படி விரித்துரைக்கின்றார்.
'ஹிந்து என்பதை வரையறுத்துக் கூறிவிடுவது மிகவும் எளிது. ஹிந்து என்பவன் கடவுளின் பெயரால் சொல்லப்படுகின்ற எதையும் கண்ணை மூடிக்கொண்டு நம்புவான். அதன் ஆதாரங்களைப் பற்றியோ உண்மையைப் பற்றியோ ஒரு போதும் கவலைப்பட மாட்டான்.!'
பிராமணர்கள் சொல்லுகின்றார்கள்:
கடவுள் இராம அவதாரம் எடுத்து, அதாவது மனிதனாகப் பிறந்து, பூமிக்கு வந்தான். காரணம் அவன் மனிதர்களின் கஷ்ட நஷ்டங்களைப் புரிந்து கொள்ள விரும்பினான்.
இராமன் உண்மையிலேயே கடவுளாக இருந்தால் அவன் மனிதர்களின் கஷ்ட-நஷ்டங்களை அவதாரம் எடுக்காமலே அறிந்திட இயலாதா.?
கழுதை, பாச்சான், பல்லி இவற்றின் துன்பதுயரங்களை அறிந்திட கடவுள் கழுதையாகவும், பாச்சானாகவும் பல்லியாகவும் அவதாரம் எடுத்துத் தான் வரவேண்டுமா.?
தன்னால் படைக்கப்பட்டவைகளின் பரிதாபத்தைப் படைத்தவனால் புரிந்திட இயலாதா.?
இந்தக் கடவுள் இராமன் தான் இராமாயணம் என்ற கற்பனைக் காவியத்தின் கதாநாயகன்.
இந்தக் காவியத்தை படைத்தவர், எழுத்தாளர் - கவி வால்மீகி.
இந்தக் காவிய நாயகன் இராமன், தசரதன் என்பவரின் மகன். தசரதன் பனாரஸ் என்ற மாநிலத்தின் அரசன்.
கடவுள் இராமனின் தகப்பனார் மன்னன் தசரதனுக்கு மூன்று மனைவிமார்கள்.
கவுசல்யா, கைகேயி, சுமித்ரா என்பவை அவர்களின் பெயர்கள்.
இந்த மூன்று மனைவிமார்களைத் தவிர பலநூறு வைப்பாட்டிகளும் இருந்தனர். கடவுள் இராமனின் தந்தை அரசன் தசரதனுக்கு இந்த இராமாயணத்தின்படி கடவுள் இராமன் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை தன்னுடைய மனைவி சீதையைக் காப்பாற்றுவதிலேயே செலவு செய்ய வேண்டியதாயிற்று. தேவி சீதையோ இராவணன் என்ற வீரனிடம் சிக்கிக் கொண்டிருந்தாள்.
மனைவி மாற்றானிடம் மாட்டிக் கொண்டிருக்கும் போது கூட கடவுள் இராமன் எந்தக் குறையுமின்றி வாழ்க்கையை சொட்டு விடாமல் சுவைத்து கொண்டிருந்தான்.
சுக்ரீவனிடம் - கடவுள் இராமன்
கடவுள் இராமன் நாடு துறந்து காடு புகுகின்றான் தன் மனைவியோடு.
சுக்ரீவன் மான் வேடம் பூண்டு தோற்றந் தந்து கடவுள் இராமனை ஏமாற்றி விடுகின்றான்.
கடவுள் இராமனால் சாதாரண சுக்ரீவன் பூண்டிருந்த மாறுவேடத்தைக் கூட கண்டு கொள்ள இயலவில்லை.!
மனைவியை மீட்க மன்றாடிய கடவுள்
இராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப் பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கையேந்தி மனைவிப் பிச்சை கேட்டான்.
குரங்குக் கடவுள் ஹனுமான் மனிதக் கடவுள் இராமனின் மனைவியை மீட்டுத்தரும் மகத்தான சாதனையைச் சாதித்திட இசைகின்றான். ஆனால் ஒரு நிபந்தனையை விதிக்கின்றான்.
தான் மனைவியை மீட்டுத்தரும் இந்தச் சாதனையைத் துவங்குமுன் கடவுள் இராமன், குரங்குக் கடவுள் ஹனுமானின் சகோதரனை கொலை செய்திட உதவி செய்திட வேண்டும்.
இப்படி சகோதர கொலையை கைமாறாகக் கேட்கின்றான் ஒரு கடவுள் இன்னொரு கடவுளிடம்.
கடலுக்குக் குறுக்கே பாலங்கட்டி கடலைக் கடந்து தனது சொந்த மனைவியை மீட்க கடவுள் இராமணனுக்கு 12 ஆண்டுகள் ஆயின.
ஆனால் இந்தக் கடவுளின் மனைவியை கடத்தி செல்ல தீயவன் இராவணனுக்கு ஒரே நாள் தான் தேவைப்பட்டது. சொல்லுங்கள் இதில் யார் ஆற்றல் மிக்கவன்?
கடவுள் இராமனா? தீயவன் இராவணனா?
ஹனுமான் மலைகளைத் தூக்கிக் கொண்டு பறந்து சென்றிடும் ஆற்றல் நிறைந்தவன் எனப் பேசப்படுகின்றது. இது உண்மையானால் அவன் இராமனையே தூக்கிக் கொண்டு லங்காபுரத்திற்குப் பறந்திருக்கலாம். இதன் மூலம் அவர்கள் சீதையை வெகு சீக்கரமாகவே மீட்டிருக்கலாம்.
இந்த 12 ஆண்டுகளாக இராவணன் சீதையை என்னென்ன செய்தான் என்பதை யாரறிவார்கள். ஒரு தீயவன் தீயனவற்றைத் தான் செய்திருப்பான்.
ஹனுமான் இராமனுக்கு உதவி செய்வதற்கு முன்னால் இராமனைக் கொண்டு தனது சசோதரனை கொலை செய்தான். பின்னால் இருந்து அம்பெய்துதான் ஹனுமானின் உடன் பிறப்பை வீழ்த்தினான் இராமன்.
இராமன் உண்மையிலேயே கடவுளாக இருந்தால் இந்த அற்பச் செயலைச் செய்திருப்பானா?
இறைச்சியுண்ட கடவுள் இராமன்
இராமன் வனவாசம் போக வெண்டும் என்ற நிலைவந்த போது
இராமன் மெத்த வருத்தத்தோடு தன் தாயாரிடம் சொன்னான்.
"அம்மா நான் இராஜாங்கத்தையும் பரிபாலனத்தையம் இழக்க வெண்டும். மன்னர்களுக்கே உரித்தான எல்லா சுகங்களையும் இழக்க வேண்டும். சுவை மிகுந்த இறைச்சி உணவுகளையும் இழக்க வேண்டும். (அயோத்தியா காண்டம் 20, 26, 94 ஆகிய அத்தியாயங்கள்)
(தொடரும்)
"இந்துக்களே! விழிமின்! எழுமின்!'' -5
SOURCE:
http://www.dalitstan.org/books/awake/index.html
http://kirukku.blogspot.in/2005/04/7.html
No comments:
Post a Comment