Thursday, 25 February 2016

ஆரியர்களின் பெண் போகம்.. -அம்பேத்கர்



“ஆரியர்கள், பலரும் காணும் வகையிலும், வெட்ட வெளிகளிலும் பெண்களோடு கூடுவதைப் பற்றிக் கவலைப்படாதவர்கள். வாமதேவ்ய விரதம் என்னும் ஒரு சமயச் சடங்கினை யாக பூமியில் ரிஷிகள் நடத்தும்போது அந்த வழியாகப் போகும் பெண்ணொருத்தி தன் விருப்பத்தைத் தெரிவித்தால் அவளது விருப்பத்தை நிறைவேற்ற அந்த யாக பூமியிலேயே ரிஷிகள் அவளோடு கூடுவர். இத்தகைய நிகழ்ச்சிகள் பலவற்றைக் கூறலாம்.

பராசர முனிவர் சத்தியவதியோடும், திர்கதாபையுடனும் இத்தகைய உறவு கொண்டவர். அயோனி என்ற சொல்வழக்கின் மூலம் இத்தகைய பழக்கம் நிலவியதை அறியலாம். அயோனி என்னும் சொல்லுக்குக் களங்கமற்று, தூய்மையாகக் கருவுறுதல் என்று பொருள்.

ஆயின் அந்தச் சொல்லுக்கு ஆரம்ப காலத்தில் நிலவிய பொருள் வேறானது. யோனி என்னும் சொல்லின் மூல அர்த்தம் வீடு என்பது. அயோனி என்பது வீட்டுக்கு வெளியே அதாவது வெட்ட வெளியில் கருவுறுவதைக் குறிக்கிறது. சீதையும் துரோபதையும் இப்படிப்பட்ட அயோனிஜிகளேயாதலால், இந்தப் பழக்கத்தில் தவறேதும் இருப்பதாகக் கொள்ளவில்லை என்றாகிறது. இத்தகைய வழக்கத்தை எதிர்த்துக் சாஸ்திர நூல்களில் தடை விதித்திருப்பதால் இந்த வழக்கம் பரவலாக இருந்ததை அறியலாம்.

தம் மனைவியரைச் சிறிது காலத்திற்கு அயலாருக்கு வாடகைக்கு விடும் வழக்கமும் ஆரியரிடையே இருந்து வந்தது. மாதவியின் கதையை இதற்கு எடுத்துக் காட்டாகக் கூறலாம். யயாதி மன்னன் தன்மகள் மாதவியைக் குரு காலவருக்குத் தானமாக அளித்தான். காலவமுனிவரோ மாதவியைக் குறிப்பிட்ட காலங்களுக்கு மூன்று மன்னர்களுக்கு அளித்தார். பின்னர் அவளை விசுவாமித்திரருக்கு மணமுடித்து வைத்தார். ஒரு மகனைப் பெற்றெடுக்கும் வரை மாதவி அவருடன் இருந்தாள். பின்னர் காலவ முனிவர் அவளை அழைத்துச் சென்று மீண்டும் அவளுடைய தந்தை யயாதிக்கே அளித்தார்.

இவ்வாறு மகளிரை மாற்றாருக்குக் குறிப்பிட்ட காலத்திற்கு அளிக்கும் வழக்கத்தைப் போலவே சிறந்த ஆடவர் மூலம் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளும் பழக்கமும் ஆரியரிடையே இருந்தது. குடும்பம் என்பது அவர்களிடையே பிள்ளைகளைப் பெருக்குவது என்றே இருந்தது. ஆரியர்களிடையே வலிமையிலும் அந்தஸ்திலும் உயர்ந்தவர்களாக விளங்கிய பிரிவினர் தேவர்கள் எனப்பட்டனர்.சிறந்தபிள்ளைகள் பிறக்க வேண்டுமென்பதற்காக இந்தத் தேவர்களோடு கூடுவதற்குத்தம் மகளிரை ஆரியர் அனுமதித்தனர்.

ஆரியப்பெண்களை இவ்வாறு முதலில் சுகிப்பது தங்களுடைய உரிமை எனத் தேவர்கள் கருதிய வழக்கம் பரவலாக இருந்தது.இத்தகைய வகையில்தேவர்கள் ஒரு பெண்ணைச் சுகித்த பின், அவதானம் என்னும் விலையை அளித்து அவர்களிடமிருந்து மீட்ட பின்பே ஆரிய மகளிர் திருமணம் செய்துகொள்ள முடியும். முதலில் தேவர்கள் சுகித்த பெண்ணை மீட்பது பற்றி அஸ்வல்யான் கிரஹ்ய சூத்திரத்தில் விவரமாகக் கூறப்பட்டுள்ளது. இந்து திருமணங்களில் நடத்தும் லஜஹோமமும் இந்த வழக்கத்தின் எச்சத்தையே நினைவுட்டுகின்றது. அவதான் கொடையும், லஜ ஹோமம் வளர்த்தலும் இவ்வாறு திருமணப் பெண்ணைத் தேவர்களின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கு அளிக்கப்படும் விலையேயன்றி வேறல்ல.

இந்து திருமணங்களில் இடம் பெற்றுள்ள சப்தபதி சடங்கும், அந்தச் சடங்கினைச் செய்யாமல் நிகழ்த்தப்படும் திருமணம் சட்டப்படியானதாகாது என்னும் அளவுக்கு அவசியமான சடங்காகக் கொள்வதும் தேவர்கள் மகளிரைத் திருமணத்திற்கு முன் சுகிக்கும் உரிமையோடு தொடர்புடையது. சப்தபதி என்பது மணமகள் மணமகனுடன் ஏழு அடியெடுத்து வைத்து நடத்தல் என்னும் சடங்காகும். இதற்கு அவசியமென்ன? தேவர்கள் அந்தப் பெண்ணை விடுவிப்பதற்குத் தமக்கு அளிக்கப்படும் நஷ்ட ஈடு போதுமானதல்ல என்று கருதினால், அந்தப் பெண் ஏழாவது அடியெடுத்து வைப்பதற்குள் தன் உரிமையை நிலை நாட்டிக் கொள்ளலாம் என்பதையே இது குறிக்கிறது. மணப் பெண் ஏழாவது அடியெடுத்து வைத்த பின்பு அவள் விடுதலை பெறுகின்றாள். அதன் பின்பே மணமகன் அவளைத் தன் மனைவியாக்கிக் கொள்ள முடியும்; தேவர்களின் தொல்லையோ, தடைகளோ இல்லாமல் அவர்கள் கணவன், மனைவியராக வாழமுடியும்.

பெண்களின் கற்பு சம்பந்தமான’ விதிகளேதும் அச்சமயம் இருக்கவில்லை. திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரு பெண் எவருடனாவது கூடிப் பிள்ளைகளும் பெற்றுக் கொள்ளலாம். கன்யா என்னும் சொல்லின் வேர்ச்சொல்லுக்குக்குரிய பொருளே இதற்குச் சான்றாகிறது. கன்யா என்னும் சொல்லின் வேர்ச் சொல்லான கம் என்பது ஒரு பெண் தன்னை எந்த ஆடவனுக்கும் உரியவளாக்கும் சுதந்திரமுடையவள் என்னும் பொருளுடையது. எனவே பெண்கள் முறையான திருமணத்திற்கு முன்பு எந்த ஆடவனுடனும் கூடிப் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டனர் என்பதற்குக் குந்தியும், மச்சியகந்தியும் சான்றாக உள்ளனர். பாண்டுவைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன் குந்தி பலருடன் கூடிப் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டாள். மச்சியகந்தி பீஷ்மரின் தந்தையான சந்தனுவை மணப்பதற்குமுன் பராசரனுடன் கலவி செய்தவள்.”

[டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும் – நூல் தொகுப்பு 7,
பகுதி 1 பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்,
இயல் 2 பண்டைய அமைப்பு முறை: ஆரிய சமூகத்தின் நிலை,
பக்கம் 13 – 14]

[] [] [] 

Sunday, 21 February 2016

கண்ணையா குமார் முழக்கம்.! தீப்பொறி பறக்கும் முழு உரை -கலி. பூங்குன்றன்





பார்ப்பனீயத்திலிருந்து விடுதலை
மனுதர்மத்திலிருந்து விடுதலை..
மனுதர்ம ஆட்சியிலிருந்து விடுதலை..
சங்பரிவார அடிமைகளிடமிருந்து விடுதலை..
காவி குண்டர்களிடமிருந்து விடுதலை..
நிலப்பிரபுத்துவ ஆட்சியிலிருந்து விடுதலை..
கார்ப்ரேட்டுகளிடமிருந்து விடுதலை..

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தலைவர் தேசத் துரோகக் குற்றம் புனையப்பட்டு சிறையிலிருக்கும் கண்ணையா குமார் முழக்கம்! தீப்பொறி பறக்கும் முழு உரை கீழே....


யார் தேசத் துரோகி?


“ஜாதியின் கலாச்சாரத்தை, மனு நீதியை பார்ப்பனீயத்தை அழித்தொழிக்கக் கிளம்பி விட்டோம்!’’


காவிகள்தான் இந்தியாவின் தேசியக்கொடியை எரித்தவர்கள். ஆங்கிலேயரிடம் மன்னிப்புக் கேட்ட சாவர்க்கரின் சீடர்கள் அவர்கள். அரியானாவில் கட்டார் தலைமையிலான பாஜக அரசு பகத்சிங் பெயரைத் தாங்கியிருந்த விமான நிலையத்திற்கு ஒரு சங்பரிவாரைச் சேர்ந்த நபரின் பெயரைச் சூட்டியுள்ளது.


எங்களுக்கு தேசபக்தி சான்றிதழை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தர வேண்டியதில்லை என்றே சொல்லுகிறேன். இவர்கள் நம்மைத் தேசியவாதிகள் என்று அங்கீகரிக்கத் தேவையில்லை. நாம் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த தேசத்தை மனதார நேசிக்கிறோம். இந்த நாட்டின் எண்பது சத விகித ஏழைகளுக்காக நாம் போராடுகிறோம். இதுவே எங்களைப் பொறுத்த வரை தேசத்தை வழிபடுவது ஆகும்.


மனுவின்மீது நம்பிக்கை இல்லை


நாங்கள் அண்ணல் அம்பேத்கர் மீது முழுப்பற்று வைத்திருக்கிறோம். எங்களுக்கு அரசமைப்புச் சட்டத்தின் மீது அளவில்லாத நம்பிக்கையுள்ளது. இதை நாங்கள் சொல்வதன் பொருள் அரசமைப்புச் சட்டத்தை யார் எதிர்த்தாலும், அது சங்பரிவார்களாக இருந்தாலும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.


எங்களுக்கு இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் மட்டுமே நம்பிக்கையுள்ளது. டில்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகமான ஜந் தேவாலனிலும், நாக்பூரிலும் சொல்லித் தரப்படும் மனுவின் சட்டத்தின் மீது எங்களுக்குத் துளியும் மதிப்பில்லை. இந்த தேசத்தின் ஜாதியமைப்பின் மீது எங்களுக்கு எந்தப் பற்றுமில்லை.


ஜாதியமைப்பால் ஏற்பட்ட கடும் அநீதியைச் சீர் செய்வதற்கான நிவாரண நடவடிக்கைகள் குறித்து அரசமைப்புச் சட்டமும், அண்ணல் அம்பேத்கரும் பேசுகிறார்கள். அதே அண்ணல் அம்பேத்கர் தூக்குத் தண்டனையை நீக்க குரல் கொடுக்கிறார். அவரே கருத்துரிமை குறித்தும் பேசுகிறார். நம்முடைய அரசமைப்புச் சட்டத்தை, நம்முடைய உரிமையை உயர்த்திப் பிடிக்க நாம் விரும்புகிறோம்.


நமக்கு எதிராகத் தங்களின் ஊடக நண்பர்களோடு இணைந்துகொண்டு பொய்ப் பிரச் சாரத்தை நிகழ்த்தி வருகிறார்கள். நாம் கல்வி உதவித் தொகைக்காகப் போராடுவோம் என்று சொல்கிறார்கள். ஸ்ம்ருதி இரானி கல்வி உதவித் தொகையை நிறுத்துவார். இவர்கள் போராடுவதாகச் சொல்வார்கள். நல்ல வேடிக்கை. இந்த அரசு, உயர் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை 17 சதவிகிதம் குறைத்துள்ளது.


நமக்கு விடுதிகள் கடந்த நான்கு ஆண்டுகளாகக் கட்டப்படவில்லை. WIFI இணைப்பு தரப்படவில்லை. BHEL நிறுவனம் நம்முடைய பயணத்துக்குப் பரிசளித்த பேருந்துக்குப் பெட்ரோல் போட கூடப் பல்கலை நிர்வாகத்திடம் காசில்லை. சினிமா சூப்பர் ஸ்டார் போல, 'நாங்கள் விடுதிகளைக் கட்டிக் கொடுப்போம், WIFI இணைப்புத் தருவோம், உதவித்தொகை கிடைப்பதை உறுதி செய்வோம்' என்று -ABVP யினர் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள்.


வெறி பிடித்த ஏபிவிபியே நேர்முகமாக விவாதிக்கத் தயாரா?’’


இவர்களின் உண்மையான சொரூபம், நாட்டின் அடிப்படை பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க அழைத்தால் அம்பலமாகி விடும். நாம் மாணவர்களாகப் பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆகியோரின் உரிமைகள் சார்ந்த பிரச்சனைகளை எழுப்புகிறோம் என்பதைப் பெருமையோடு பதிவு செய்கிறேன்.


ஆகவேதான் அவர்களின் சுப்ரமணிய சாமி, இங்கே ஜிஹாதிகள் வாழ்வதாக, நாம் வன்முறையைப் பரப்புவதாகச் சொல்கிறார்.


JNU வின் சார்பாக நான், ஆர்.எஸ். எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களை நோக்கி சவால் விடுகிறேன். வன்முறையைப் பற்றி நேருக்கு நேர் விவாதம் புரிவோம். வெறிபிடித்த முழக்கங்கள் குறித்துக் கேள்விகள் கேட்போம். ரத்தத்தில் திலகமிட வேண்டும் என்றும், துப்பாக்கிக் குண்டுகளில் ஆரத்தி எடுப்போம் என்றும் ஏன் முழக்கமிடுகிறார்கள் என்று அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.


யாருடைய ரத்தம் சிந்த வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்? ஆங்கிலேயரோடு கைகோர்த்துக் கொண்டு விடுதலைப் போராட்ட வீரர்களைச் சுட்டார்கள், ஏழைகள் பசிக்கு சோறு கேட்ட பொழுது அவர்களைத் துப்பாக்கிக் குண்டுகளால் மவுனமாக்கினார்கள். பசியுற்றவர்கள் உரிமைகளைக் கேட்ட பொழுது ஆயுதங்களால் அவர்களை அமைதிப்படுத்த முயன்றார்கள். முஸ்லீம்கள் மீது அவர்களின் குண்டுகள் பாய்ந்தன. பெண்கள் சம உரிமை கேட்ட பொழுது துப்பாக்கிக் குண்டுகளால் சல்லடையாக்கினார்கள்.


தொழிலாளியும், அம்பானியும் சமமானவர்களே!


அய்ந்து விரல்களும் ஒன்றாக இருக்க முடியாது என்கிறார்கள். சீதையைப் பின்பற்றிப் பெண்கள் அக்னிப் பரீட்சை மேற்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். இந்த நாட்டின் ஜனநாயகம் எல்லாருக்கும் சம உரிமைகள் தருகிறது. மாணவன், தொழிலாளி, ஏழை. பணக் காரன், அம்பானி, அதானி எல்லாரும் சம உரிமை கொண்டவர்களே! 'பெண்களுக்குச் சமஉரிமை வேண்டும்' என நாங்கள் குரல் கொடுத்தால், இந்தியக் கலாச்சாரத்தைச் சீரழிப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள்.


“என் தாயை இழிவாகப் பேசுகிறீர்களே உங்கள் பாரதமாதாவில் என் தாய்க்கு இடமில்லையா?’’


என்னுடைய அலைப்பேசியை நீங்கள் பாருங்கள். என் தாய், தங்கையைப் பற்றி நாக்கூசும் வசைகளை வீசுகிறார்கள். எந்தப் பாரதத்தாயை பற்றி அவர்கள் பேசுகிறார்கள்.? அதில் என்னுடைய தாய்க்கு இடமில்லை என்றால் உங்களின் பாரத மாதா பற்றிய கருத்தாக்கம் எனக்கு ஏற்புடையது இல்லை.


அங்கன்வாடியில் மாதம் 3000 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்து என்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றும் என்னுடைய அம்மாவை இவர்கள் வசைபாடுகிறார்கள். ஏழைகளின் தாய்களை, தலித் விவசாயிகளைப் பாரதத் தாயின் அங்கமாகப் பார்க்காததை நினைத்து அவமானப்படுகிறேன்.


நான் இந்தத் தேசத்தின் தந்தைமாரை, தாய்மார்களை, சகோதரிகளை, ஏழை விவசாயிகளை, தலித்துகளை, பழங்குடி யினரை, தொழிலாளிகளைப் போற்றுவேன். அவர்களுக்குத் தைரியம் இருந்தால் 'இன்குலாப் ஜிந்தாபாத்' என்றோ, 'பகத் சிங் ஜிந்தாபாத்', 'சுகதேவ் ஜிந்தா பாத்', 'அஸ்பஹூல்லா கான் ஜிந்தாபாத்' 'பாபாசாகேப் அம்பேத்கர் ஜிந்தாபாத்' என்றோ முழங்க முடியுமா? என்று சவால் விடுகிறேன்.


அண்ணல் அம்பேத்கரின் 125-ஆம் ஆண்டு பிறந்த நாளை விமர்சையாகக் கொண்டாடும் நாடகத்தை அவர்கள் அரங்கேற்றுகிறார்கள். அவர்களுக்கு வீரம் இருந்தால், அம்பேத்கர் எழுப்பிய கேள்விகளை அவர்களும் எழுப்ப வேண்டும். இந்தியாவின் மிகப்பெரிய சிக்கல்களில் ஜாதி முக்கியமானது. ஜாதி அமைப்பைப் பற்றிப் பேசுங்கள்,


ஒவ்வொரு துறையிலும், தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று பேசுங்கள். இந்தக் கேள்விகளை நீங்கள் எழுப்பினால் உங்களுக்கு இந்தத் தேசத்தின் மீது பக்தி இருக்கிறது என நான் நம்புகிறேன். இந்த தேசம் அப்பொழுதும் எப்பொழுதும் உங்களுடையதாக ஆகாது. ஒரு தேசம் அதன் மக்களால் ஆனது, உங்களின் தேசத்தில் ஏழைகள், பசித்த மக்கள் ஆகியோருக்கு இடமில்லை. அப்படிப்பட்ட ஒன்று தேசமே இல்லை.


நேற்று ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் மிக மோசமான காலத்தில் இருக்கிறோம் என்றேன். பாசிசம் நாட்டைப் பிடித்துக் கொண்டே வருகிறது. ஊடகமும் அதிலிருந்து தப்பிக்கப் போவதில்லை. ஊடகம் எப்படிப் பேசவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் இருந்து கதைகள் அனுப்பப்படுகின்றன. காங்கிரஸ் நெருக்கடி நிலை நிலவிய காலத்தில் செய்த அதே வேலையை இப்பொழுது இவர்கள் செய்கிறார்கள்.


“அய்தராபாத்தில் நடந்ததை டில்லியில் நடக்க விடோம்!’’


சில ஊடக நண்பர்கள் நம்முடைய பல்கலைக் கழகம் மக்களின் வரிப்பணத்தில், மானியத்தில் இயங்குவதைச் சுட்டிக் காட்டினார்கள். அது உண்மையே. நான் ஒரே ஒரு கேள்வியை எழுப்ப விரும்புகிறேன்: 'எதற்காகப் பல்கலைக் கழகங்கள்?' ஒரு சமூகத்தின் கூட்டு மனசாட்சியைத் தயவு தாட்சண்யமில்லாமல் பகுப்பாய்வு செய்யப் பல்கலைக்கழகங்கள் அவசியமானவை.


தங்களின் கடமையிலிருந்து பல்கலைக்கழகங்கள் தவறினால் ஒரு தேசம் உயிர்த்திருக்காது. ஒரு தேசம் ஏழைகளுக்காக இயங்கவில்லை என்றால் அது பணக்காரர்களின் சுரண்டல், கொள்ளைக்காரர்களின் வேட்டைக்காடாக மாறிவிடும்.

மக்களின் கலாச்சாரம், நம்பிக்கைகள், உரிமைகள் ஆகியவற்றை உள்வாங்காமல் ஒரு தேசம் உருவாக முடியாது.


நாம் பகத்சிங்கின், அண்ணல் அம்பேத்கரின் கனவுகளுக்கு ஆதரவாக, உறுதியாக நிற்கிறோம். சம உரிமைக்காக, அனைவரும் தன்மானத்தோடு வாழ்வதற்கு ஆதரவாக நாம் நிற்கிறோம். இந்த உரிமைகளின் போராட்டத்துக்காக ரோஹித் வெமுலா உயிர்விட நேர்ந்தது. சங்பரிவாரத்தினரிடம் நேராகச் சொல்கிறோம், 'உங்கள் அரசால் அவமானம்!'. ரோஹித் வெமுலாவுக்கு என்னென்ன அநீதிகளைச் செய்தீர்களோ அது எதையும் நீங்கள் செய்ய முடியாது. ரோஹித்தின் தியாகத்தை நாங்கள் மறக்கமாட்டோம். நாங்கள் கருத்துரிமைக்குத் தோள் கொடுப்போம்.


பாகிஸ்தான், வங்கதேசத்தை விடுத்து மற்ற எல்லா நாட்டு ஏழைகள், பாட்டாளிகள் ஆகியோரின் ஒற்றுமைக்கு அறைகூவல் விடுக்கிறோம். உலகின் மனிதநேயத்தை, இந்திய மனித நேயத்தை நாங்கள் துதிக்கிறோம். நாங்கள் மனிதத்துக்கு எதிரானவர்களை அடையாளம் காட்டியுள்ளோம்.


இதுவே நம் முன்னால் உள்ள மிகப் பெரிய பிரச்சினை. சாதியத்தின் உண்மை முகத்தை, மனுவின் முகத்தை, பார்ப்பனீயம், முதலாளித்துவம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள உறவை வெளிப்படுத்தி உள்ளோம். இந்த அயோக்கியத்தனமான முகங்களைத் தோலுரிக்க வேண்டும். நாம் உண்மையான விடுதலையை அடையவேண்டும். அந்த விடுதலை அரசமைப்புச் சட்டத்தின் மூலம், நாடாளுமன்றத்தின் மூலமே சாத்தியம். அதை நாம் அடைந்தே தீருவோம்.


தலித்துகளை ஒடுக்குவதும் வன்முறைதான்!


நம்முடைய எல்லா முரண்பாடுகளையும் தாண்டி நம்முடைய கருத்துரிமையை, நம்முடைய அரசமைப்புச் சட்டத்தை, இந்தத் தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றைக் காக்க வேண்டும் நண்பர்களே என வேண்டிக் கொள்கிறேன். நம்முடைய தேசத்தைப் பிளவுபடுத்தும் இந்தச் சக்திகளை, தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் இவற்றுக்கு எதிராக அணிதிரண்டு நாம் உறுதியோடு போராடவேண்டும்.


என்னுடைய உரையை முடிக்கும் முன்னால் ஒரு இறுதி வினா. யார் இந்த கசாப்? யார் இந்த அப்சல் குரு? இந்த கேள்விகளைப் பல்கலைக் கழகங்களில் எழுப்பா விட்டால் பல்கலைகளின் இருப்பில் பொருளில்லை. நீதியை, வன்முறையை நாம் வரையறுக்காவிட்டால், எப்படி வன்முறையை நாம் எதிர்கொள்வது? வன் முறை என்பது ஒருவரைக் கொல்வது மட்டுமில்லை, தலித்துகளுக்கு வழங்கப்பட்ட சட்ட ரீதியான உரிமைகளை மறுக்கும் நிர்வாகம் நிகழ்த்துவதும் வன்முறையே ஆகும்.


இது நிறுவனமயமாக்கப்பட்ட வன்முறையாகும். நீதியைப்பற்றி அவர்கள் பேசுகிறார்கள். எது நீதி என்பதை யார் தீர்மானிப்பது.? பிராமணியம் தலித்துகளைக் கோயில்களுக்குள் விடவில்லை. அதுவே அன்றைய நீதி. அதனை நாம் கேள்வி கேட்டோம். இன்றைக்கு , ஆர்.எஸ்.எஸ். பாஜக ஆகியோரின் நீதி, சுதந்திரம் நம்மை உள்ளடக்கிய நீதி இல்லை என்பதால் அதனைக் கேள்வி கேட்கிறோம்.


ஒவ்வொரு மனிதனுக்கும் சட்ட ரீதியான உரிமைகள் உறுதி செய்யப்படும் பொழுது நாங்கள் உங்களின் விடுதலையை ஏற்கிறோம். எல்லாருக்கும் சம உரிமை வாய்க்கும் நாளில் அவர்களின் நீதியை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.


நண்பர்களே, இது ஒரு மோசமான சூழல். மாணவர் கூட்டமைப்பு எப்பொழுதும் வன்முறையை, எந்த ஒரு தீவிரவாதியையும், எந்தத் தீவிரவாத செயலையும், இந்தியாவுக்கு எதிரான எந்த செயலையும் ஆதரித்தது இல்லை. பெயர் தெரியாதவர்களால் எழுப்பப்பட்ட 'பாகிஸ்தான் வாழ்க!' என்கிற முழக்கத்தை நம்முடைய மாணவர் அமைப்பு கடுமையாகக் கண்டிக்கிறது.


ABVP ஆட்களைப் பற்றி ஒரு உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். அவர்களுக்காக நான் கவலை கொள்கிறேன். FTIIல் கஜேந்திர சவுகானை கொண்டுவந்ததைப் போல எல்லா நிறுவனங்களிலும் தங்களின் ஆட்களைக் கொண்டு நிரப்பலாம் என்று அவர்கள் குதிக்கிறார்கள். சவுகானை போன்றவர்கள் அதிகாரத்தில் இருந்தால் தங்களுக்கு எங்கும் வேலை கிடைக்கும் என்று கனவு காணுகிறார்கள்.


வேலை கிடைத்ததும் இந்தத் தேசபக்தி, பாரதமாதா ஆகியவற்றை அப்படியே மறந்துவிடுவார்கள். அவர்கள் எப்பொழுதும் மதிக்காத மூவர்ண்ணக் கொடியைப் பற்றி என்ன சொல்வது? இப்படியே போனால் தங்களுடைய காவிக் கொடியை கூட அவர்கள் மறக்க நேரிடும்.


எப்படிப்பட்ட தேசபக்தியை அவர்கள் விரும்புகிறார்கள் என அறிய விரும்புகிறேன். தன்னுடைய தொழிலாளிகளிடம் ஒழுங்காக நடந்து கொள்ளாத முதலாளி, விவசாயக் கூலிகளை மரியாதையோடு நடத்தாத நிலச்சுவான்தார், அதிகச் சம்பளம் பெறும் ஊடக தலைமை அதிகாரி, தன்னுடைய நிருபர்களுக்கு மிகக்குறைவான ஊதியத்தைத் தருவார் என்றால் இவையெல்லாம் எப்படித் தேசபக்தி ஆகும்?


அவர்களின் தேசபக்தி இந்திய -_ பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியோடு முடிவுற்று விடுகிறது. அதற்குப் பிறகு சாலையில் இறங்கி வம்பு செய்வார்கள். ஒரு டஜன் பழத்தை நாற்பது ரூபாய்க்கு விற்கும் ஏழையைக் கொள்ளையடிப்பதாகச் சொல்லி, முப்பது ரூபாய்க்கு, ஒரு டஜன் பழத்தைக் கேட்பார்கள்.


'நீங்கள்தான் உண்மையான கொள்ளையர்கள்' என அந்த வியாபாரி சொன்னால், உடனே அந்த ஏழையைத் தேசத் துரோகி என்று அறிவித்து விடுவார்கள். வசதிகள், பணம் ஆகியவற்றோடு தேசபக்தி துவங்கி முடிந்துவிடுகிறது. உண்மையிலேயே தேசபக்திதான் இவர்களைச் செலுத்துகிறதா என்று கேட்டேன். 'என்ன செய்வது தோழா..?


ஏற்கெனவே இரண்டு ஆண்டு ஆட்சி முடிந்துவிட்டது. இருக்கிற மூன்று ஆண்டுகளில் என்னென்ன செய்ய முடியுமோ அவற்றைச் செய்துமுடிக்க வேண்டும்' என்று சொல்கிறார்கள்.


அவர்களிடம் அந்தச் சில நபர்களும், தாங்கள் 'பாகிஸ்தான் ஜிந்தா பாத்' என்று முழக்கம் போடவில்லை எனச் சொல்வதாகவும், அவர்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்றும் தெளிவுபடுத்துங்கள். அவர்கள், 'ஏன் முதலில் கூட்டத்துக்கு அனுமதி தரப்பட்டு, பின்னர் அது மறுக்கப்பட்டு ஜனநாயக உரிமை மீது தாக்குதல் நடத்தப்பட்டது?' என்றே கேட்கிறார்கள் எனத் தெரிவியுங்கள்.


ஒரு ஜனநாயகப் போராட்டம் நடை பெறுகிறது என்றால், அதில் உறுதியாக அந்தச் சிலபேர் நிற்பதாக அவர்களுக்குச் சொல்லுங்கள். அவர்களுக்கு இவை எதுவும், எப்பொழுதும் புரியப்போவதில்லை. ஆனால், குறுகிய கால அழைப்பில் இங்கே பெருமளவில் கூடிய நீங்கள் பிரச்சனையைப் புரிந்து கொண்டுள்ளீர்கள் என நம்புகிறேன்.


நீங்கள் வளாகம் முழுக்கச் சென்று ABVP தேசத்தையும் -JNUவையும் பிளவு படுத்துகிறது. அதை நடக்க விட மாட்டோம். இதை மாணவர்களிடம் சொல்லுங்கள்.


ஜெய் பீம்! செவ்வணக்கம்!

இந்தியில் இருந்து நேரடியாக

தமிழில் மொழி பெயர்ப்பு:

சரவணா ராசேந்திரன்


நமது எதிரிகள் யார்? யார்?


நாம் சுரண்டலின் கலாச்சாரத்தை, ஜாதியின் கலாச்சாரத்தை, மனுநீதி, பார்ப்பனீயம் ஆகியவற்றின் கலாச்சாரத்தை அழித்தொழிக்க விழைகிறோம். எது கலாச்சாரம் என்பது இன்னமும் உறுதியாக வரையறுக்கப்படவில்லை. மக்கள் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசினால், அவர்களுக்குக் கோபம் வருகிறது.


அண்ணல் அம்பேத்கர், காரல் மார்க்ஸ் என இருவரையும் வணங்கி, அவர்களைப் பற்றிப் பேசுவது அவர்களை உசுப்பேற்றுகிறது. மக்கள் அஸ்பஹூல்லாகான் எனும் தீரமிகுந்த விடுதலைப் போராட்ட வீரரைப் பற்றிப் பேசினால் கொதிக்கிறார்கள். இவற்றைப் பொறுக்கமுடியாமல் சதி செய்கிறார்கள்.


அவர்கள் ஆங்கிலேயருக்குச் சேவகம் புரிந்த கீழானவர்கள். என் மீது அவதூறு வழக்கு பதியும்படி அவர்களுக்குச் சவால் விடுகிறேன். நாட்டை அடிமைப்படுத்திக் கொடுமை செய்த ஆங்கிலேயருடன் கூட்டுச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்., வரலாற்றை வசதியாக மறைத்துவிட்டு, இப்பொழுது தேசபக்தி சான்றிதழ் விநியோகத்தில் ஈடுபடுகிறார்கள்.


நாங்கள் குடிமக்களா - நாய்களா?


நான் உங்களிடம் ஒன்றைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் நண்பர்களே. அது யிழிஹி நிர்வாகம் பற்றியதாகும். கிஙிக்ஷிறி தற்போது எழுப்பிய முழக்கங்களைக் கவனித்தீர்களா? அவர்கள் நம்மைக் 'கம்யூனிஸ்ட் நாய்கள்',' அப்சல் குருவின் நாய்கள்', 'ஜிஹாதிகளின் பிள்ளைகள்' என்று அழைக்கிறார்கள்.


நமக்கு அரசமைப்புச் சட்டம், குடிமகன் என்கிற உரிமையை உறுதியளித்திருக்கும்பொழுது நம்முடைய பெற்றோரை நாய்கள் என அழைப்பது நம்முடைய அரசமைப்புச் சட்ட உரிமை மீதான தாக்குதல் இல்லையா? இதை - நிர்வாகம் அரசு, ஆகியோரிடம் கேட்க விரும்புகிறேன். நிர்வாகம், யாருக்காக, யாருடன் இணைந்து கொண்டு, எதன் அடிப்படையில் இயங்குகிறது என்று அறிய விரும்புகிறோம்.


முதலில் கூட்டத்துக்கு அனுமதி தந்த பல்கலை. நிர்வாகம், நாக்பூரில் இருந்து அழைப்பு வந்ததும் அலறி அடித்துக் கொண்டு அனுமதியை ரத்து செய்கிறது. முதலில் உதவித்தொகை அறிவித்துவிட்டு, பின்னர் அதனை ரத்து செய்வார்கள். இதுதான் ஆர்.எஸ்.எஸ்., நம் நாட்டை நடத்த விரும்பும் முறையாகும்.


‘ஓம் கொடி ஏந்தி வருவார்கள்’ - எச்சரிக்கை!


நான் அவர்களைக் கேட்கிறேன். நாளைக்குத் தொடர் வண்டியில் நீங்கள் பயணிக்கிற பொழுது, கிஙிக்ஷிறிஅய் சேர்ந்த நபர்கள் மாட்டுக் கறியை யாரேனும் வைத்திருக்கிறார்களா என்று சோதனை செய்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அப்பொழுது நீங்க -யிழிஹிவைச் சேர்ந்தவர் எனத் தெரிந்ததும் உங்களைத் தேசத்துரோகி என்று சொல்லி வெட்டிப் போட்டால் என்னாகும்? இந்த ஆபத்தை நீங்கள் உணர்கிறீர்களா எனக் கவலையோடு கேட்கிறேன்.


அந்த ஆபத்தை உணர்ந்திருப்பதால்தான் ‪#‎யிழிஹிஷிலீutபீஷீஷ்ஸீ‬முழக்கத்தை எதிர்ப்பதாகச் சொல்கிறார்கள். தாங்கள் உருவாக்கிய பதற்றமான சூழலின் இறுதியில், தாங்கள் யிழிஹிவில்தான் கல்வி கற்க வேண்டும் என்று உணர்கிறார்கள். அதனால் யிழிஹிவின் சக தோழர்களே மார்ச்சில் தேர்தல் வருகிறது. அப்பொழுது ஓம் சின்னம் பொறிக்கப்பட்ட கொடிகளை ஏந்திக் கொண்டு ஆட்கள் வாக்கு கேட்க வருவார்கள்.


அவர்களிடம் கேளுங்கள்: 'நாங்கள் ஜிஹாதிகள், தீவிரவாதிகள், தேசத்துரோகிகள், எங்கள் வாக்குகளைப் பெற்றால் நீங்களும் தேசத் துரோகிகள் ஆகிவிட மாட்டீர்களா?' எனக் கேள்வி கேளுங்கள். அப்பொழுது அவர்கள், 'உங்களில் சிலர் மட்டுமே அப்படிப்பட்டவர்கள்' என்பார்கள். பின் ஏன் இதை ஊடகங்களிடம் அவர்கள் சொல்லக்கூடாது என்றும், அவர்களின் துணை வேந்தர், பதிவாளரும் ஏன் அதை ஊடகங்களிடம் சொல்லவில்லை என்றும் எதிர் கேள்வி கேளுங்கள்.

-கலி. பூங்குன்றன்
[] [] []

நரேந்திர மோடி இனி ஒரு பியூர் பிராமின். -செ.நிருபன் சக்ரவர்த்தி.





“நரேந்திரமோடிக்கு எல்லாவிதமான பிராமண ஒழுக்கமும் இருக்கிறது . அதனால் அவரை எனக்குள்ள பிராமண அந்தஸ்தை வைத்து அவரை ஒரு பிராமணராக மாற்றி தரம் உயர்த்த போகிறேன் “ என சுப்பிரமணிய சுவாமி போட்ட நுண் அரசியல் தந்திரத்தைதான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

அதுசரி, எப்படி ஒருவரை பிராமணராக மாற்றுவது.? அதற்காக தான் சாதி மாற்ற சடங்குகள் இருகிறதே.! அந்த சடங்கில் 101 பிராமணர்களை வைத்து யாகம் நடத்தி, அந்த யாகத்தில் பிராமணராக மாற துடிக்கும் தாழ்ந்தசாதி மனிதன் தங்கத்தால் செய்யப்பட்ட பசு உருவ சிலையின் கருவறையில் உள்ளே சென்றுபிறகு, சிறிது நேரம் கழித்து வெளியே வந்துவிட்டால், அவர் பிராமணர். இந்த சடங்குக்கு பெயர் ஹிரண்ய கர்ப்பம் அதாவது தமிழில் தங்க கருவறை. இந்த சடங்கு முடித்ததும், அந்த தங்க பசு சிலையை உருக்கி அந்த தங்கத்தை யாகம் செய்த பிராமணர்களுக்கு பங்கு பிரித்து தந்துவிட வேண்டும் .

தாழ்ந்தசாதியாக தலீத்களை நடத்தகூடாது என சமத்துவம் எண்ணம் கொண்ட பாரதியார், ஒரு தலீத் மனிதனுக்கு பூணூல் அனுவித்து பிராமணனாக தரம் உயர்த்தினார். பாரதி செய்தது சமத்துவ வேண்டிதான். இவரை போல இராமானுஜர்,அக்காலத்திலேயே ஒரு பெரும் கூட்டத்தை பிராமணர்களாக மாற்றி “திருகுலத்தார்“ என்ற அடையாத்தை உருவாக்கினார். இதுபோல இன்னும் பல வரலாற்று சம்பவங்களும் உண்டு .

வெளிப்படையாக இதை பார்போருக்கு, ஒரு தாழ்ந்தவரை உயர்வாக மாற்றும் யாகம் செய்தால் ஒரு உயர்ந்த மரியாதை கிடைத்துவிடும். இதனால் சாதிய கொடுமை இருக்காதே என்ற வெள்ளை போர்வை பறந்தாலும், போர்வைக்கு பின்னால் இருக்கும் கருநிற அழுக்கு என்னெவெனில், உலகில் “பிராமணம்“ தான் உயர்வான பிறப்பு என்ற அடையாளம், முத்திரையாக குத்தப்படுகிறது. இதனால் சாதி முறையும் சரி என அங்கீகரிக்கப் பட்டுவிடும்.

இந்த மாதிரியான கருத்தை அழுத்தமாக பதித்து, சுப்பிரமணிய சாமி, அவரின் பாஜக கட்சியில் உள்ள பிராமணர் அல்லாத தொண்டர்களை பார்த்து “நீங்கள் கவலை பட வேண்டாம், நீங்களும் ஒரு பிராமணராகலாம். அதற்கு நரேந்திர மோடி போல ஒரு அதிகாரம் படைத்த பிரதமர் பதவிக்கு வந்துவிட்டால் அல்லது ஏதாவது விஞ்ஞான கண்டுபிடிப்பை கண்டறிந்து உலக அளவில் புகழ்பெற்றுவிட்டால், உலக பணக்காரனாக நீங்கள்(தலீத்தாக இருந்தாலும்) உயர்ந்துவிட்டால், சுருங்க சொன்னால், பிராமணர்களுக்கு லாபம் கிடக்கும் வகையில் ஒருவர் நடந்து கொண்டால், அவர் எந்த சாதியாக இருந்தாலும் அவருக்கு பிராமண ஒழுக்கம் வந்துவிட்டதாக அர்த்தம் என்ற மறைமுக எண்ணத்தை பாஜக தொண்டர்களுக்கு அழுத்தமாக பதிய வைக்கிறார்.

மருத்துவர் இராமதாஸ் சொன்னது போல, ஜீன்ஸ் பேன்ட் அணிந்து வன்னிய பெண்களை தலீத் இளையோர்கள் மயக்குகிறார்கள் என்ற பகுத்தறிவற்ற மேம்போக்கு பார்வையாக இந்த பிராமண மோகத்தையும் ஒப்பிடலாம். ஜீன்ஸ் உடை எப்படி மிக உயர்வான நாகரீக உடையாக பார்க்கப்படுகிறதோ, அதே பார்வையை தான் சுப்பிரமணிய சுவாமி “பிராமணம்” என்ற பிறப்பே ஒரு வரம் என்ற உணர்வை உளவியல் ரீதியில் திணிக்கிறார்.
 
நிஜத்தில் ஜீன்ஸ் சுரங்க தொழிலாளர்கள் பயன்படுத்திய உடை என்பதும், பிராமணம் என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் அவர்களின் லாபத்துக்காக உருவாக்கிய மாயை என்ற உண்மையை அறியாத பாஜக தொண்டர்கள், இவர்களின் பிறப்பை ஜாதிய ரீதியில் ஒரு வட்டமிட்டு, பிராமணர்களை விட இவர்களை தாழ்வானவர்கள் என்ற அடிமை உணர்வோடும், இவர்களை விட தலீத்கள் தாழ்வானவர்கள் என்ற மந்தப்புத்தி உணர்வோடு இருப்போருக்கு சுப்பிரமணியசாமி செய்கிற பிராமண அரசியல் இவர்களுக்கு எப்போதும் புரியாது.

மனித பிறப்பை விஞ்ஞான ரீதயில் பார்க்க தவறி, உலக இயல்பை அறியாமல் ஒரு இந்துவ கிணற்று தவளையாக வாழ்ந்துவரும் பாஜக தொண்டர்களின் பார்வையில் பிராமணம் என்பது உயர்பிறப்புதான், இவர்கள் பிராமணருக்கு தொண்டு செய்து பிரமணராக மாற துடிப்போர் என நாம் எடுத்துகொள்ளலாம். அதாவது சாதி விரும்பிகள். பிறரை அடிமையாக்க துடிக்கும் கயவ புத்தி உடையவர்கள் என எடுத்துக்கொள்ளலாம்.

மனைவியின் சமையலை குறைச்சொல்விட்டு பக்கத்துவீ ட்டு சமையலை புகழும் கணவனுக்கு, அவனது மனைவி, அவள் சமைத்ததை மறைத்து பக்கத்துக்கு வீட்டில் வாங்கிவந்ததாக சொல்லி கொடுத்தாளாம். அவனும் பக்கத்துக்கு வீட்டு சமையல் ருசியோ ருசி என்றானாம். இந்த கதைதான் பிராமண அடிமையாக பாஜகவில் இருக்கும் ஆதிக்கசாதியினரின் நிலைபாடு.


நன்றி:
https://www.facebook.com/photo.php?fbid=803311549813886&set=a.104635826348132.7847.100004051444169&type=3&theater 



[] [] [] 

Saturday, 20 February 2016

மாட்டுக்கறி சாப்பிடுவதும் மகிஷாசுரனை வணங்குவதும் தேசத்துரோகம். !




மாட்டுக்கறி சாப்பிடுவதும் மகிஷாசுரனை வணங்குவதும் தேசத்துரோகம் !

----------------------------------------------------------------


"டில்லி போலிஸ் இரண்டு ஆண்டுகளாகவே ஜேஎன்யு மாணவர்களை வேவு பார்த்து வந்தது. அவர்கள் மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள், துர்க்கையை வணங்குவதற்கு பதிலாக மகிஷாசுரனை வணங்குகிறார்கள், எனவே அவர்கள் தேசத்துரோகிகள் என்று அது அறிக்கை சமர்ப்பித்துள்ளது" என்கிறது இந்து ஏடு. 


மோடி அரசின் போலிசிற்கு எதுவெல்லாம் "தேசத் துரோகங்கள்"
என்பது தெரிந்து போனதா.? இந்துமதத்தில் பல தெய்வங்களுக்கு இடமுண்டு, அது பெரிதும் நெகிழ்ச்சியுடையது என்று ஒருபுறம் சொல்லப்படுகிறது. மறுபுறம் பிராமணியவாதிகள் வணங்கும் தெய்வங்களைத்தான் சகலரும் வணங்க வேண்டும், அவற்றுக்கு மாற்றான தெய்வங்களை 
வணங்கக் கூடாது எனப்படுகிறது. இது என்ன கொடுமை? 


ஆர்எஸ்எஸ் பரிவாரம் நெகிழ்ச்சியான இந்துமதத்திற்காக நிற்பவர்கள் அல்ல, மாறாக கறாரான பிராமணிய மதத்தை நிலைநிறுத்தப் பார்ப்பவர்கள் எனும் நியாயமான குற்றச்சாட்டுக்கு இது மற்றுமொரு வலுவான ஆதாரம்.!


-தோழர் அருணன் கதிரேசன். [18.2.2016] 

நன்றி:

https://www.facebook.com/arunan.kathiresan/posts/659911967482963


[] [] [] 

இவர்களா இந்துக்களின் எதிரிகள் ?





இவர்களா இந்துக்களின் எதிரிகள் ?

இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் மிக அதிகமாக இருப்பது கிறிஸ்தவர்களிடம், அடுத்து மிக அதிகமாக இருப்பது முஸ்லிம்களிடம் என்கிறது "தேசிய மாதிரி கணக்கெடுப்பு 
நிறுவனம்". (டி ஒ ஐ ஏடு)

மதரீதியான இந்த ஆய்வின் முடிவு, சிறுபான்மை மக்களுக்கு இங்கு நியாயம் கிடைக்கவில்லை என்பதற்கு ஓர் ஆதாரம்.

ஆனால், ஆர் எஸ் எஸ்-பா ஜ க பரிவாரம், இந்த மக்களை இந்து மக்களின் எதிரிகளாகச் சித்தரித்து வருகிறது. தமது உரிமைகளைப் பறிகொடுத்து நிற்பவர்கள் பிறரின் எதிரிகளாக எப்படி ஆவார்கள்?

இந்து வெகுமக்கள் உள்ளிட்ட அனைத்து இந்திய மக்களின் மெய்யான எதிரிகள் அதானி -அம்பானி போன்ற பெரு முதலாளிகளும், "பிராமணியம்" எனும் சாதிய-ஆணாதிக்க கட்டமைப்பை காக்க முயலும் சநாதனிகளும்தான்.

அவர்களைக் காப்பாற்றவே பொய்யான எதிரிகளைக் 
கட்டமைக்கிறது அந்தப் பரிவாரம்.

எச்சரிக்கை ... எச்சரிக்கை.


-தோழர் அருணன் கதிரேசன் [21.2.2016]

நன்றி:

https://www.facebook.com/arunan.kathiresan/posts/661022244038602 



[] [] []

2002 குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை நிகழ்த்தியது பா.ஜ.க – படேல் இன தலைவர்கள்




Sunday, February 21st, 2016 5:59 AM Wafiq Sha


குஜராத்தில் பா.ஜ.க விற்கும் படேல் சமூகத்தினருக்கும் உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டு வருகின்றது. குஜராத் பா.ஜ.க.வின் தீவிர ஆதரவாளர்களான படேல் சமூகத்தின் தலைவர்கள் பலர் பா.ஜ.க விற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

படித்தார் சமிதி என்கிற படேல் இன மக்கள் அமைப்பின் தலைவரான ராகுல் தேசாய் மற்றும் லால்பாய் படேல் ஆகியோர் சமீபத்தில் பா.ஜ.கவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பா.ஜ.க குறித்து ராகுல் தேசாய் கூறியதாவது, “பா.ஜ.க அடிப்படையிலேயே ஒரு மதவாத கட்சி. அது முஸ்லிம்கள் மீதான அச்சத்தினை மக்கள் மத்தியில் பல ஆண்டுகளாக விதைத்து வருகின்றது” என்று கூறியுள்ளார். மேலும் குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை குறித்து கூறிய அவர் “2002 இல் கோத்ரா ரயில் எரிப்பு மட்டும் நிகழ்ந்திராவிட்டால் மோடி குஜாத்தில் முதல்வராக தேர்ந்தேடுக்கப்பட்டிருக்கவே மாட்டார்” என்று கூறியுள்ளார்.

“இந்துக்கள் மனதில் இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் இல்லையென்றால் முஸ்லிம்கள் நம்மை கொன்று விடுவார்கள் என்ற என்னத்தை விதைக்க அவர்கள் அதனை செய்தார்கள்” என்று தேசாய் கூறியுள்ளார். மேலும், “அந்த ரயிலை (சபர்மதி எக்ஸ்பிரஸ் ஐ) எரித்தவர்கள் முஸ்லீம்களா இல்லையா என்று எனக்கு தெரியாது, ஆனால் குஜராத் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஜெயிப்பதற்காக முன்கூட்டியே போடப்பட்ட திட்டம் தான் இந்த ரயில் எரிப்பு என்று எனக்கு தெரியும்” என்று கூறியுள்ளார்.”

“மக்கள் மனதில் மதவாத சிந்தனைகள் விதைக்கப்பட்டு விட்டால் அதை அகற்றுவது மிகக்கடினம் என்று கூறிய அவர் “பா.ஜ.கவின் பிரச்சாரத்தினால் நாங்கள் அனைவரும் மதவாத சிந்தனைகளையே சிந்திக்க பழகிவிட்டோம், தற்பொழுது நான் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறேன்” என்று கூறியுள்ளார். “இன்றும் மக்கள் முஸ்லிம்கள் தங்களுக்கு எதிராக கலவரத்தை நடத்திவிடுவார்கள் என்று எண்ணிக்கொண்டு இருகின்றனர், ஆனால் உண்மையில் அவர்கள் செய்யவில்லை என்றாலும் பா.ஜ.க அதனை செய்துவிடும்” என்று கூறியுள்ளார்.

இதே போன்று படேல் சமூகத்தின் மற்றொரு தலைவரான லால்ஜிபாய் படேல் கூறுகையில் “கண்டிப்பாக கோத்ரா மற்றும் 2002 கலவரங்கள் பா.ஜ.க வினால் நடத்தப்பட்டவை. அப்போது எங்களுக்கு அது தெரியவில்லை, இப்போது தெரிகின்றது” என்று அவர் கூறியுள்ளார். ” சென்ற முறை அவர்கள் முஸ்லிம்களை குறிவைத்தனர், இந்த முறை படேல் சமூகத்தினரை துன்புறுத்துகின்றனர். இது போன்ற அரசியல் தான் நக்சல்களை உண்டாக்குகிறது” என்று கூறியுள்ளார். வருகிற தேர்தலில் படேல் சமூகத்தினர் பா.ஜ.க. வை முன்பு ஆதரித்தது போன்று ஆதரிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


-------------------------------------------------------------------


2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குஜராத்தின் கோத்ரா ரயில்நிலையத்தில் ஒரு கும்பல் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலை எரித்தது. இதில் அதில் பயணம் செய்த 59 பேர் உயிரிழந்தனர். இந்த ரயில் எரிப்பை நிகழ்த்தியதாக 31 முஸ்லிம்கள் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த ரயில் எரிப்பை தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட மதக்கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டும், முஸ்லிம் பெண்கள் மானபங்கப் படுத்தப்பட்டும் கொல்லப்பட்டனர்.


நன்றி:

http://www.puthiyavidial.com/2002-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF/


[] [] []

மான்-புலி உருவகக் கதை




மிகுந்த தாகத்துடன் வந்த மான் ஒன்று, தடாகத்தில் நீர் அருந்திக் கொண்டிருந்தது..

அப்பொழுது அங்கே வந்த புலி.. 

''எல்லோரும் நீர் அருந்துகிற தடாகத்தை ஏன் அசுத்தம் செய்கிறாய்..?'' என்று கோபத்துடன் கேட்டது..


"ஐயா, நான் அசுத்தம் ஒன்றும் செய்யவில்லையே..! எனக்கும் தாகம் மேலிட்டதால் நீர் அருந்திக் கொண்டு இருக்கிறேன்..!" என்று பணிவுடன் மான் சொன்னது.

புலி அந்த விளக்கத்தை ஏற்காமல், ''இல்லை..நீ இந்த தடாகத்தை அசுத்தம் செய்து விட்டாய்.. அதனால் இந்த காட்டிற்கே துரோகம் இழைத்து விட்டாய்..! ஆகவே அந்த மாபெரும் குற்றம் புரிந்த உனக்கு சட்டப்படி மரண தண்டனை விதிக்கிறேன்..!"

-என்று கூறி விட்டு..அதனை அடித்துக் கொன்று தின்றது. 

 

பார்ப்பன இந்துத்துவா, என்னடா தம்பி சொல்றான்..? - ஒரு கலந்துரையாடல்






பார்ப்பன இந்துத்துவா, என்னடா தம்பி சொல்றான்..?


'துலுக்கனெல்லாம் பாகிஸ்தானுக்கு ஓடு..!' என்கிறான்.


சரி, அனுப்பிச்சிடுவோம். அப்புறம் என்ன சொல்றான்.?


'கிறித்துவனெல்லாம் ஒன்று இந்துவா மதம் மாறுணும்.. இல்லேனா வாட்டிகனுக்கு ஓடணும்..!' என்கிறான்.


சரி. அவனையும் ஒருத்தன் விடாம வாட்டிகனுக்கு அனுப்பிடுவோம். அப்புறம் என்ன சொல்றான்..?


கம்யுனிஸ்ட்டுகளும், செக்குலரிசம் பேசுபவர்களும், நாத்திகர்களும் நாட்டை விட்டு வெளியே போகச் சொல்றான்.. அல்லது அவரவர் வீட்டிலேயே புதைக்கப் படுவார்கள்.. என்கிறான்..


சரிடா, அவங்களையும் நாட்டை விட்டு துரத்திடுவோம்.. அப்புறம் என்ன சொல்றான்.?


பார்ப்பானை பூலோக தெய்வமா மதிக்கச் சொல்ற வர்ணாசிரமத்தை ஏற்காதவன்..செத்தொழிய வேண்டுமென்கிறான்..


சரி.. அவன்களையும் கொன்று புதைச்சிடுவோம்.. அப்புறம் என்ன சொல்றான்..?


என்னத்தை சொல்றது..? தென்கலையா.. வடகலையா..? சிவனா..விஸ்ணுவா..? U நாமமா.. Y நாமமா..? என்று பாப்பானெல்லாம் ஒருத்தனை ஒருத்தன் அடிச்சிக்கிறான்.. ஒருத்தன் கோவிலை இன்னொருத்தன் இடிச்சிக்கிறான்.. வெட்டிக்கிறான்.. குத்திக்கிறான்.. ஒரே இரத்த வெள்ளம்.. ஒரே புகை மண்டலம்..


சரிடா.. சரிடா.. இப்போ நாட்டுல பார்ப்பானும், பார்ப்பன அடிமைகள் மட்டும் தானே இருக்கானுங்க..

அமெரிக்காகாரன் கிட்டே சொல்லி.. விலையுயர்ந்த அணுகுண்டை, பார்ப்பான் 'பொச்சிலேயே' வந்து போட சொல்லுடா.. ஜோலி முடிஞ்சிடும்..!

போலி தேசபக்தர்கள்.!



போலி தேசபக்தர்கள் ஜாக்கிரதை..


[ஆனானப் பட்ட காந்திக்கே அந்த கதி..!!!]

ஆம், நான் ஒரு தேசதுரோகி.! -ராஜ்தீப் சர் தேசாய் [மூத்தப் பத்திரிக்கையாளர்]





ஆம் நான் ஒரு தேசதுரோகி

ராஜ்தீப் சர்தேசாய் இந்தியாவில் பலராலும் அறியப்பட்ட மூத்த பத்திரிக்கையாளர். “நன் ஒரு தேச துரோகி” என்று தனது பிளாக்கில் இவர் எழுதியது பெரும் விவாதத்திற்குள்ளானது…

1990களில் நம் நாட்டின் ஆட்சியமைப்பு எப்படி இருந்தது என்றால் மத சார்பற்ற, பொய்யான மதசார்பற்ற என்கிற நிலைமை இருந்தது. ஆனால் இப்போது வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் ‘தேசப்பற்று, தேசத்துரோகம்’ என்கிற நயவஞ்சகத்தன்மையுடன் இருக்கிறது. முன்பு என்னை சமூகவளைதளங்களில் தேசதுரோகி என சொல்லும் போது நான் கோபப்பட்டேன். ஆனால் இப்போது நடக்கும் ஆட்சியில் தேசபக்தி சான்றிதழ் தாராளமாக கிடைக்கிறது. இது என்னை “நான் ஒரு தேச துரோகி” என கத்த வைக்கிறது.

ஆம் நான் ஒரு தேசதுரோகி. ஏனென்றால் நான் அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 19-ன் படி பேச்சு சுதந்திரம் இருக்கிறது என்பதை நம்புகிறேன். அதில் 2 விதிமுறைகள் உள்ளது.

1) வன்முறையை தூண்டும் பேச்சு கூடாது
2) வெறுப்பு பேச்சு கூடாது என்பதே.

இதில் வெறுப்பு பேச்சு எது என்பது விவாதத்திற்கு உட்படுத்த வேண்டியது. உதாரணத்திற்கு ‘ராமஜென்மபூமி இயக்கம் வெளிப்படையாக ஹிந்டுராஷ்ட்டிரம் கேட்டது. இதை நாம் எப்படி பார்க்கிறோம்? சட்டத்தை மீறியதாகவா? அல்லது அல்லது சட்டத்தை மதிப்பதாகவா? அல்லது பிற சமூகத்தினரிடையே வெறுப்பை ஏற்ப்படுத்துவதாகவா.?
பஞ்சாபில் தனி காலிஸ்தான் கேட்பவர்களின் “ராஜ் கரேகா கல்சா” (Pure will rool) என்கிற வாசகம் தேசத்துரோகமா இல்லையா…?

ஆம் நான் ஒரு தேசதுரோகி

பார்லிமெண்டை தாக்குதல் நடத்தியதால் தண்டனைக்குள்ளான அப்சல் குருவுக்கு சார்பாக JNU மாணவர்களின் கோஷத்தை நான் தேச துரோகமாக பார்க்கவில்லை. ஒரு வீடியோவில் அப்சல் குருவின் தியாகத்தை பாராட்டி கத்தும் பலர் உண்மையில் மாணவர்கள்தானா…? நம்ப முடியலையே…!
இப்படி போராடுபவர்களை அரசுக்கு எதிரானவர்கள் என சொன்னார்கள். அதனால் இது மாணவர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க போதுமானதா? அல்லது இவர்களெல்லாம் சுதந்திர காஷ்மீர் அனுதாபிகளா? இல்லை இவர்களை ஜிகாதிகள் என சொல்லி முத்திரைகுத்திவிடலாமா?

ஆம் நான் ஒரு தேசதுரோகி

இந்த பன்மைமுக நாட்டில் காஷ்மீர் போராட்ட மாணவனுடனும் பேச வேண்டும், வடகிழக்கு போராட்ட மாணவனுடனும் பேசவேண்டும். அவ்வாறு பேசப்படுவதை நான் நம்புகிறேன். காஸ்மீர் மாணவன் சொல்வதையும், இம்பாலில் உள்ள மாணவன் சொல்வதையும் நான் கேப்பேன். என்னைப்பொறுத்தவரையில் அந்த காஷ்மீர் மாணவனும், இம்பால் மாணவனும், புனே FTI மாணவனும், டெல்லி JNU மாணவனும் ஒன்றே.

சட்டத்தை மீறுதலையும், வன்முறையைத்தூண்டுவதையும், தீவிரவாதத்தை வளர்ப்பதையும் செய்பவர்கள் மீது நீங்கள் வழக்கு போடலாம். ஆனால் கருத்து வேறுபாடு உள்ளவர்களின் போராட்டங்களை கவனமாகத்தான் கையாள வேண்டும். கருத்து வேறுபாடும் கருத்து சுதந்திரத்திற்கு சமமானதே. கருத்து வேறுபாடுள்ளவர்கள் எல்லா இடங்களிலும் இருப்பார்கள்.

ஆம் நான் ஒரு தேசதுரோகி

இந்த தேசியவாதத்தில் இரட்டை நாக்குடையவர்களை நான் நம்புவதில்லை. ஏனென்றால் அப்சல் குருவை ஆதரிப்பதை தேசதுரோகம் என்றால், அப்சல் குருவுக்கு ஆதரவான கட்சியுடன் காஷ்மீரின் PDP யுடன் கூட்டணி வைப்பதையும் தேச துரோகமாக கருதலாம். PDP அப்சல் குருவின் தூக்கினை எதிர்த்தது. இப்பொழுதும் காஷ்மீரில் இருக்கும் ஒரு இளைஞன் அப்சல் குருவிற்கு இளைக்கப்பட்டது அநீதியான தண்டனை என நினைத்தால், அதை விவாதத்திர்க்குதான் உட்படுத்த வேண்டுமே தவிர அந்த இளைஞனை ஜிகாதியாக்கலாமா? அவனது கருத்து உங்களுக்கு முரண்பாடானது என்றால் ஜிகாதி என முத்திரை குத்திவிடலாமா?

மொத்த இந்தியாவும் ஜனவரி 30ஐ காந்தி இறந்த நாளாக துக்கம் அனுஷ்டிக்கும் போது, ஹிந்து மகாசபையினர் மட்டும் கோட்சேவை கொண்டாடுகிறார்கள். அப்படிஎன்றால் ஹிந்து மகா சபா தேசத்திற்கு எதிரான அமைப்பா? சாக்ஷி மகராஜ் கோட்சேவை கொண்டாடுவது தேசத்திற்கு எதிரான செயலாக ஆகாதா? அப்படியென்றால் தேசியவாதம் என்பது ஆட்சிக்கு ஆட்சி மாறுபடுமா?

ஆம் நான் ஒரு தேசதுரோகி

நான் காலையில் காயத்திரி மந்திரம் சொல்லிக்கொண்டு எழுந்திரிக்கும் போது பெருமைப்படுகிறேன் நான் ஒரு ஹிந்து என்று. நான் மாட்டுக்கறி சாப்பிடுவேன். ஆனால் அது பி.ஜே.பி முக்தர் நக்வியை பொறுத்தவரை அது தேச துரோக செயல். என்னை பாகிஸ்தானுக்கு அனுப்ப போதுமான செயல். இந்த நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமையை நான் நம்புகிறேன். எனக்கு ரம்ஜானின் விருந்தும், கோவாவில் கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கிடைக்கும் பன்றி கறியும் பிடிக்கும், தீபாவளி பலகாரங்களும் பிடிக்கும். இங்கே எதை சாப்பிட வேண்டும் என்கிற உரிமை ஒவ்வொரு மனிதனையும் சார்ந்தது. அதை விட்டுகொடுக்க நான் தயாரில்லை.

நான் ஒரு தேச துரோகி

அன்று பாரத் மாதாகி ஜே என கோஷம் போட்டுகொண்டே பெண் பத்திரிக்கயாளரை தாக்கினர் சில வழக்கறிஞர்கள். அதை காவல்துறையும் வேடிக்கை பார்த்தது. அவர்கள்தான் போலி தேச பக்தர்கள். எல்லையில் இருக்கும் இராணுவவீரனை நினைத்து நான் பெருமைப்படுகிறேன், நான் ஓரின சேர்க்கயாளர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்பேன். தூக்குத்தண்டனையை எதிர்க்கிறேன். ஜாதி வன்முறையை, மத வன்முறையை, பாலின வன்முறையை நான் எதிர்க்கிறேன். இந்த வன்முறைகளை ஒருபோதும் ஏற்றுகொள்ள மாட்டேன். உறுத்தக்கூடிய உண்மைகளை பொதுவெளியில் சொல்ல நான் அஞ்ச மாட்டேன் அது என்னை தேசதுரோகி என முத்திரை குத்தினாலும்.

நான் ஒரு தேசத்துரோகி

கடந்தவாரம் டெல்லி ஜிம்கானா விரிவுரையாளர்கள் கூட்டத்தில் நான் சொன்னது ‘பேச்சு சுதந்திரத்தில் உங்களின் எதிர் கருத்து உள்ளவர்களையும் சேர்க்க வேண்டும், அது வன்முறையை தூண்டாத வரை” என் சொன்னதற்கு ஒரு ஓய்வு பெற்ற ராணுவஅதிகாரி “நீ ஒரு தேச துரோகி, உன்னை இங்கேயே கொல்லவேண்டும்” என கத்தினார்.

அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஒரே தேசம், ஒரே மதம், ஒரே மொழி என்கிற கலாச்சார தேசியவாத கொள்கையை பன்முக சமூகத்தில் திணிக்க யாருக்கும் உரிமையில்லை. யாராவது என்னை தேசத்துரோகி என சொன்னால் அமெரிக்க குத்து சண்டை வீரர் ‘முகம்மது அலியை’ நினைத்துகொள்வேன். அவரையும் தேசதுரோகி என சொன்ன அரசே பின்னர் அவரிடம் மன்னிப்பு கேட்டது. இங்கிருக்கும் சிலரும் என்னிடம் அதே போல மன்னிப்பு கேட்பார்கள்.

ராஜ்தீப் சர்தேசாய்- பிளாக்கிலிருந்து
தமிழில்: இப்போது.காம்

Thursday, 18 February 2016

காந்தி ஏன் கொல்லப்பட்டார்? -ஜி. ராமகிருஷ்ணன்





65 ஆண்டுகள் ஆகின்றன. இதே நாள்… 1948 ஜனவரி 30. மாலை நேரப் பிரார்த்தனைக்காக வந்துகொண்டிருந்தபோது தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு தொண்டன்போல் வந்த நாதுராம் கோட்சே, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரைச் சுட்டுக் கொன்றான். காட்டுத்தீபோலப் பரவியது அந்தச் செய்தி: “காந்திஜியைச் சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள்…”

சரியாக தகவல் அறிந்து முதலில் படேல் வந்தார்; சற்று நேரத்திலேயே நேரு ஓடிவந்தார். கவர்னர் ஜெனரல் மவுன்ட்பேட்டன் வந்தபோது கூட்டத்திலிருந்த ஒருவர் கத்தினார்: “காந்தியை ஒரு முஸ்லிம் கொன்றுவிட்டான்.” அதிர்ந்து திரும்பிய மவுன்ட்பேட்டன் பதிலுக்குக் கத்தினார்: “நீ என்ன முட்டாளா? காந்திஜியைக் கொன்றவன் ஒரு இந்து!”

உண்மையில், அந்தச் செய்தியை முதலில் கேட்ட பலருக்கும் கூடுதலாக ஒரு தகவல் ஒட்டிக்கொண்டே சென்றடைந்தது: “காந்திஜியைச் சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள், காந்தியைச் சுட்டது ஒரு முஸ்லிம்…”

இந்திய வரலாற்றில் காந்தியின் மரணம் பல உயிர்களைப் பலிவாங்கும் ரத்தக்களரியாக உருமாறாமல் தடுக்கப்பட நேருவும் படேலும் மவுன்ட்பேட்டனும் துரிதமாகச் செயல்பட்டதும் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். உயிர்பெறத் தொடங்கியபோதே அந்த வதந்தியை அணைத்தனர் மூவரும்: “காந்திஜியை சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றது ஒரு இந்து…”

பெருங்கலவரத்துக்கான முன்னோட்டம்

யோசித்துப்பாருங்கள்… காந்தி கொல்லப்பட்ட தகவலே அறிவிக்கப்படாதபோது, காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்ற வதந்தி எப்படி ஒட்டிக்கொண்டு பறந்திருக்கும்?

அதற்குப் பின் ஒரு பெரிய சதி இருந்தது. குரூர நோக்கம் இருந்தது. இந்து முஸ்லிம் கலவரங்கள் எப்போது எங்கு மூளும் என்று தெரியாத காலகட்டம் அது. தேசப் பிரிவினையோடு உலகின் மோசமான படுகொலைக் களத்தையும் இந்தியா எதிர்கொண்டிருந்த காலகட்டம்.

அப்படியான சூழலில், காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்று வதந்தியைப் பரப்பினால் என்ன நடக்கும்? நாடே ரத்தக்களரியாகும். முஸ்லிம்கள் வேட்டையாடப்படுவார்கள். அதன் வாயிலாக இனி இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே வாழ முடியும் என்ற சூழலை உருவாக்க முடியும். இப்படி ஒரு விரிவான திட்டம் இருந்தது. காந்தி உடலிலிருந்து வழியும் ரத்தம் உறையும் முன்பே கொலைப் பழி முஸ்லிம்களை நோக்கித் திசைதிருப்பப்பட்டதன் நோக்கம் இதுதான்.

ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஏன் காந்திமீது ஆத்திரம்?

நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்தியா-பாகிஸ்தான் என்ற பிரிவினை முடிவானது. நாடு பிளக்கப்படுவதை காந்திஜி விரும்பவில்லை. தனது செல்வாக்கு முழுவதையும் பயன்படுத்திப் பிரிவினையைத் தடுக்க முயன்றார். எனினும் பிரிவினை தவிர்க்க முடியாததாகிவிட்டது. பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கான நாடு என்றானபோது, இந்தியா இந்துக்களுக்கான நாடாக வேண்டும் என்று இந்துத்துவவாதிகள் வாதிட்டனர். அதற்காக எந்த விலையைக் கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். ஆனால், காந்தி மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார்: இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகவே அமையும்.

மேலும், மதக் கலவரங்கள் மூலம் மக்கள் மனத்தில் மதவெறியைத் தூண்டி, முஸ்லிம்களை இந்தியாவை விட்டே துரத்தும் திட்டத்தையும் கூடுமானவரை காந்தி முறியடித்தார்; தொடர்ந்து முறியடிக்கப் போராடினார். காலங்காலமாக அந்தந்தப் பகுதிகளில் வாழ்ந்தவர்களே கலவர நாட்களில் வெளியே வர அஞ்சி வீட்டில் முடங்கிக் கிடந்த நாட்களில், ஆயுதப் படையினரே சிறு பிரிவுகளாகச் சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று தயங்கிக் கூட்டம் கூட்டமாகச் சென்ற நாட்களில், கலவர இடங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் சென்றார். பிரார்த்தனைக் கூட்டங்களிலும் மக்கள் சந்திப்புகளிலும் “மத மோதல்கள் வேண்டாம், மனிதனை மனிதன் வேட்டை யாடக் கூடாது” என்று மன்றாடினார்.

கல்கத்தாவில் காந்திஜியின் தலையீட்டைக் கண்ட இந்தியாவின் கடைசி வைசிராயும் முதல் கவர்னர் ஜெனரலுமான மவுன்ட்பேட்டன் உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்: “ஒரு முழு ராணுவப் படையாலும் சமாளிக்க முடியாத கல்கத்தாவின் கலவரச் சூழலைத் தனியொரு மனிதரான காந்தி என்ற ஒரு அமைதிப்படை வீரர் சாதித்துக் காட்டியுள்ளார். இது ஓர் அற்புதமான செயல்.”

அந்த அற்புதமான செயல்தான் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளுக்கு ஆத்திரம் பெருகக் காரணமாக இருந்தது. அந்த ஆத்திரத்தின் விளைநிலம்தான் கோட்சே!

என் உயிர் போகட்டும்!

காந்தி 1.9.1947 அன்று பத்திரிகையாளர்களை அழைத்தார். கல்கத்தாவின் பல பகுதிகளில் கலவரம் ஓய்ந்தபாடில்லை என்று மிகுந்த வேதனையோடு குறிப்பிட்ட அவர், இரவு 8.15 மணி அளவில் தன்னுடைய உண்ணாவிரதத்தைத் தொடங்க இருப்பதை அறிவித்தார். காலவரையறையற்ற உண்ணாவிரதம் அது. கல்கத்தாவில் அமைதி திரும்பினால் மட்டுமே உண்ணாவிரதத்தை முடிப்பேன் என்று திட்டவட்டமாக அறிவித்தார் காந்தி. பதறிப்போனார்கள் யாவரும்.

மூதறிஞர் ராஜாஜி காந்தியைச் சந்தித்தார். “குண்டர் களுக்கு எதிராக நீங்கள் உண்ணாவிரதம் இருப்பதா?” என்று கேட்டார். “குண்டர்களை உருவாக்குவதே நாம்தான். நம்முடைய அனுதாபமும் மறைமுக ஆதரவும் இல்லாமல் அவர்கள் நீடிக்க முடியாது. குண்டர்களுக்குப் பின்னால் இருக்கும் இதயங்களைத் தொட விரும்புகிறேன்” என்றார் காந்தி. “சிறிது காலம் பொறுக்கக் கூடாதா?” என்றார் ராஜாஜி.

“காலங்கடந்துவிடும். முஸ்லிம்களை அபாயகரமான நிலையில் விட்டுவிடக் கூடாது. எனது உண்ணாவிரதம் ஏதாவது பயனளிக்க வேண்டுமென்றால், அது அவர்களுக்குத் துன்பம் நேராமல் தடுப்பதற்கானதாக இருக்க வேண்டும். நான் கல்கத்தாவின் நிலைமையைச் சமாளித்துவிட்டால், பஞ்சாப் நிலைமையையும் சமாளிக்க முடியும். நான் இப்போது தோல்வியடைந்தால், காட்டுத்தீ பல இடங்களுக்கும் பரவும்” என்றார் காந்தி.

“ஒருவேளை நீங்கள் இறந்துவிட்டால், காட்டுத்தீ மிகவும் மோசமான முறையில் பரவும்” என்றார் ராஜாஜி.

காந்தி உறுதியான குரலில் சொன்னார்: “நல்ல வேளையாக அதனைப் பார்க்க உயிருடன் இருக்க மாட்டேன். நான் என்னால் இயன்றதைச் செய்து முடித்தவனாக இருப்பேன்.”

தன்னுடைய வார்த்தைகளுக்கு இறுதிவரை உண்மையாக இருந்தார் காந்தி.

தனியாள் திட்டமா கொலை?

காந்தியைப் பொறுத்தவரை இந்தியா அனைத்து மக்களுக்குமான நாடு. அதில் எந்தச் சமரசத்துக்கும் இடம் இல்லை. அதுதான் அவருடைய கொலைக்கு வழிகோலியது. காந்தியைக் கொல்வது என்பது நாதுராம் கோட்சே என்ற தனிமனிதனின் திட்டமல்ல. அது ஒரு கூட்டத்தின் பெருந்திட்டத்தின் ஒரு பகுதி. இந்த நாட்டை இந்துமயமாக்குவதுதான் அந்தப் பெருந்திட்டம். மதக் கலவரங்களைத் தூண்டிவிடுவதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது அந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான செயல்திட்டம். மக்களையே ஆயுததாரிகளாக்கும் எளிமையான ஒரு உத்தி. இந்துத்துவவாதிகளின் அந்தப் பெருந்திட்டத்தின் நீட்சியையே காந்தி கொலையில் தொடங்கி பாபர் மசூதி இடிப்பு, மும்பை கலவரங்கள், குஜராத் படுகொலை என்று சமீபத்திய முசாபர்நகர் கலவரம் வரை பார்க்கிறோம்.

இந்த நாட்டுக்கு காந்தி என்றும் தேவைப்படுகிறார். முக்கியமாக, இந்த நாடு பாசிஸத்தை நோக்கி நகர்த்தப் படும் முயற்சியில் எப்போதெல்லாம் சிக்குகிறதோ அப்போதெல்லாம்தான் அதிகம் தேவைப்படுகிறார். இந்துத் துவத்தின் நிறைவேறாத அந்தப் பெருந்திட்டத்துக்கான செயல்திட்டம் இப்போது மோடி என்ற ரூபத்தில் வருகிறது. இந்தச் சூழலில்தான் “இந்தியாவில் சிறுபான்மையினராகிய ஒருவர், அதாவது அந்த மதநம்பிக்கை பரவியுள்ள அளவு காரணமாகச் சிறுபான்மையினராக உள்ள ஒருவர், அதன் காரணமாகவே தாம் சிறியவராக இருப்பதாக உணருமாறு ஆக்கப்படுகிறார் என்றால், இந்த இந்தியா நான் கனவு கண்ட இந்தியா அல்ல” என்ற காந்தியின் தேவை நமக்கு மேலும் அதிகமாகிறது. இந்த நாட்டின் மகத்தான விழுமியமான மதச்சார்பின்மையின் உன்னதத்தை வார்த்தைகளால் அல்ல; செயல்களால் நாம் உணர்த்த வேண்டிய தருணம் இது!

ஜி. ராமகிருஷ்ணன், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர், தொடர்புக்கு: grcpim@gmail.com

நன்றி:

 

காந்தியின் கொலையில் சாவர்க்கரின் பங்கு - 2


இதுவரை வெளிவராத உண்மைகள்


ஏ.ஜி. நூரானி


மொரார்ஜியின் மௌனம், ஒரு நீதிபதியின் தடை!


மெரார்ஜி மிகத் தாமதமாக தன் கருத்தைத் தெரிவித்தார். காந்தி படுகொலை வழக்கில் அவர் ஆதாரங்களைத் தந்தார். அரசுத் தரப்பு வழக்கறிஞர் சி.கே.தஃப்தாரி என்பவர் நீதிபதி அத்மா சரணுக்கு அளித்த மனுவின் உள்ளடக்கச் செய்தியை 1948ம் ஆண்டு செப்டம்பர் 1 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் வெளியிட்டது. அதில் சாவர்க்கர் சம்பந்தப்பட்ட செய்தி உள்ள பகுதியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது:

“கண்ணியத்திற்குரிய மொரார்ஜி தேசாய் அவர்களைக் குறுக்கு விசாரணை செய்தபொழுது, குற்றவாளி எண் 7ன் (வி.டி. சாவர்க்கர்) வழக்கறிஞர் கீழ்க்கண்ட கேள்வியைக் கேட்டார்: “சாவர்க்கரின் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற பேரா. ஜெய்னின் கூற்று போக, உங்களுக்கு சாவர்க்கர் குறித்து வேறு ஏதேனும் தகவல் தெரியுமா?”

“மொரார்ஜி இதற்கு இவ்வாறு பதிலளித்தார்: “நான் முழு உண்மைகளையும் சொல்லட்டுமா? நான் பதிலளிக்கத் தயாராகவே வந்திருக்கிறேன்.சாவர்க்கர்தான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும்?”

குற்றவாளி எண் 7ன் (வி.டி. சாவர்க்கரின்) வழக்கறிஞர் தான் கேட்ட கேள்வியைப் பின்வாங்கிக் கொள்வதாக அறிவித்தார். அரசுத் தரப்பு வழக்கறிஞர் இந்தக் கேள்வி, பதில், சாவர்க்கரின் வழக்கறிஞரின் கூற்று இவையனைத்தையும் நீதிமன்றத்தில் பதிவு செய்ய அனுமதிக்கும்படி நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் நீதிபதி அவ்வாறு பதிவு செய்வதற்கு அனுமதி தர மறுத்துவிட்டார்.”

இப்படி நீதிபதி போட்ட தடையை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.ஏப்ரல் 8, 1948 அன்று பாம்பே சட்டசபையில் மொரார்ஜி வெளிப்படையாக இவ்வாறு சொன்னார்: “சாவர்க்கரின் கடந்த கால சேவைகள் அனைத்தும் இந்தத் தீய சேவையின் மூலம் அழிந்துவிட்டது.”

அனைத்துக் கொலைகளிலும் முக்கிய குற்றவாளிக்கெதிரான வழக்கில் அவருடன் கூட சென்று, அந்தக் குற்றத்துக்கு உடந்தையாக இருந்து, பிறகு குற்றவாளிக்கு எதிராகச் சான்று கூற அனுமதிக்கப்பட்ட ஒருவரின்(அப்ரூவராக மாறியவரின்) வாக்குமூலம் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறும்.

காந்திப் படுகொலை வழக்கில் அது நடந்தது டிகாம்பர் பாட்கே என்ற அப்ரூவரால். இந்த வழக்குக்குத் தீர்ப்பளித்த நீதிபதி ஆத்மா சரண் தனது தீர்ப்பில் டிகாம்பர் பாட்கேவின் வாக்குமூலத்தை மிகத் துல்லியமாக அலசுகிறார்.

“டிகாம்பர் பாட்கே என்ற அப்ரூவரிடம் விசாரணையும், குறுக்கு விசாரணையும் 20.07.1948 முதல் 30.07.1948 வரை நடைபெற்றது. அவர் ஏழு நாட்கள் குறுக்கு விசாரணை மட்டும் செய்யப்பட்டார். ஆதலால் அவரது ஆதாரம் கொடுக்கும் விதம், அவரது அந்தஸ்து அனைத்தையும் அறிய முடிந்தது. அவர் அவரது தரப்பு உண்மைகள் அனைத்தையும் சுற்றி வளைக்காமல் நேரடியாக விவரித்தார். அவர் எந்தவொரு குறுக்கு விசாரணைக் கேள்விக்கும் நழுவலாக பதில் சொல்லவில்லை. அல்லது அந்தக் கேள்வியிலிருந்து தப்பிக்க முயலவில்லை. இவ்வளவு நீண்ட நெடிய சம்பவத்தை பிசிறில்லாமல் துல்லியமாகச் சொல்வது வேறு யாருக்கும் சாத்தியப்பட்டிருக்காது. இவ்வளவு நீண்ட விஷயங்களை எவராலும் மனனம் செய்யமுடியாது.

“அப்ரூவர் அவரது ஆதாரத்தில் சொல்லும்பொழுது, 20.01.1948 அன்று மெரினா ஹோட்டலில் வைத்து அவர்கள் வெடிப்பஞ்சுகளுக்கு பிரைமர் பொருத்தியதாகவும், கையெறி குண்டுகளுக்கு வெடிக்கருவி பொருத்தியதாகவும், சதித்திட்டம் குறித்து கலந்தாலோசித்ததாகவும், அவர்களிடையே சில “விஷயங்களை” பரிமாறிக்கொண்டதாகவும் கூறுகிறார்.ஆனால் இதற்கு நேரடி தொடர் ஆதாரம் எதனையும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் சார்பில் சமர்ப்பிக்க முடியவில்லை.

ஆனால் மறைமுகமான தொடர் ஆதாரம் அரசுத் தரப்பு வழக்கறிஞர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது. நைன் சிங் என்பவரின் ஆதாரத்தின் படி (விசாரணைகள் பி-17, பி-24 ஆகியன ஆதரித்தபடி) மூன்று தேநீர்கள் சொல்லப்பட்டு, அறை எண் 40ல் வினியோகிக்கப்பட்டிருக்கின்றன.

“ஆதாரங்களை ஆராயும்பொழுது ஒரு விஷயம் எல்லோருக்கும் நன்றாக விளங்கும். அடுத்தடுத்த நிகழ்வுகளைக் கூறும்பொழுது அதன் வெளிச்சத்தில் முந்தைய நடப்புகளையும் நாம் கணித்துக்கொள்ளலாம். அப்ரூவரின் வாக்குமூலம் அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளுக்கு முழுமையாகப் பொருந்துகிறது. தொடராகவும் அமைந்துள்ளது. ஆனால் வி.டி. சாவர்க்கர் போன்ற சில குற்றவாளிகளை அடையாளப்படுத்தும் விஷயத்தில் அப்ரூவரின் ஆதாரம் தொடராக இல்லை.

“அப்ரூவர் (சாவர்க்கர் விஷயத்தில்) கூறிய ஆதாரம் என்னவென்றால்14.01.1948 அன்று நாதுராம் வி. கோட்சேயும், நாராயண் டி. ஆப்தேவும் அவரை தாதரில் உள்ள ஹிந்து மகாசபா அலுவலகத்திலிருந்து சாவர்க்கர் சதான் என்னும் சாவர்க்கரின் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். “விஷயத்தை”வைப்பதற்கு சில ஏற்பாடுகளைச் செய்யவேண்டியிருப்பதாக அவரிடம் சொல்லப்பட்டது. “விஷயம்” அடங்கிய பையைக் கையில் வைத்திருந்த கோட்சேவும், ஆப்தேவும் சாவர்க்கர் சதானின் வெளியில் அப்ரூவரை விட்டு விட்டு வீட்டின் உள்ளே சென்றனர். 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து அவர்கள் அதே பையுடன் வெளியே வந்தனர்.

“அதன் பிறகு அப்ரூவர் என்ன சொல்கிறார் என்றால், 15.01.1948 அன்று, தீட்சித் மகாராஜ் கோயிலின் சுற்றுச்சுவருக்கருகில் வைத்து நாராயண் டி. ஆப்தே அப்ரூவரிடம் இவ்வாறு கூறினார்: “காந்தி கொல்லப்படவேண்டும் என்று சாவர்க்கர் தீர்மானித்திருக்கிறார். அந்த வேலையை எங்களிடம் நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார்.”

“அதன் பிறகு அப்ரூவர் சொல்வது என்னவென்றால், 17.01.1948 அன்று கடைசியாக ஒரு தடவை சாவர்க்கரைப் பார்த்து விட்டு வரவேண்டும் என்று நாதுராம் வி. கோட்சே சொன்னார். அதன்படி அவர்கள் சாவர்க்கர் சதானுக்குச் சென்றனர். நாராயண் டி. ஆப்தே தரைத் தளத்திலுள்ள ஓர் அறையில் அப்ரூவரைக் காத்திருக்குமாறு கூறிவிட்டு, அவரும், கோட்சேவும் முதல் தளத்திற்குச் சென்றனர். 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து அவர்கள் கீழே வந்தனர். அவர்களுக்குப் பின்னால் சாவர்க்கரும் தொடர்ந்து வந்தார். நாதுராம் வி. கோட்சேவையும், நாராயண் டி. ஆப்தேவையும் நோக்கி சாவர்க்கர்“யஷஸ்விஹூன்யா” (சென்று வாருங்கள், வென்று வாருங்கள்) என்று கூறினார்.

“சாவர்க்கர் சதானிலிருந்து திரும்பி வரும்பொழுது நாராயண் டி. ஆப்தே அப்ரூவரிடம் சாவர்க்கர் தங்களிடம் இவ்வாறு கூறியதாகக் கூறினார்: “காந்தியின் 100 வருடங்கள் முடிந்துவிட்டன. இந்த வேலை வெற்றிகரமாக முடியும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை”.

“வினாயக் டி. சாவர்க்கர் மேல் அரசுத்தரப்பு தொடுத்துள்ள வழக்கு அப்ரூவரின் ஆதாரத்தை மட்டுமே மையமாக வைத்து அமைந்துள்ளது. வினாயக் டி.சாவர்க்கருக்கெதிரான அப்ரூவரின் கூற்றே அரசுத் தரப்பு விளக்கத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. அப்ரூவர் கூறும் நிகழ்வுகளின் இடைத்தொடர்ச்சிக்கு செல்வி ஷாந்தாபாய் பி. மோடக், அய்தப்பா கே.கோடியான் ஆகிய இருவரின் ஆதாரங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் நீதிமன்றம் அந்த இருவரையும் அவ்வளவு முக்கியமாகக் கருதவில்லை.

“சாவர்க்கரின் இல்லத்தில் முதல் தளத்தில் நாதுராம் வி. கோட்சேவுக்கும், நாராயண் டி. ஆப்தேவுக்கும் இடையில் என்ன உரையாடல் நடைபெற்றது,அவ்விருவருக்கும், சாவர்க்கருக்குமிடையே என்ன உரையாடல் நடைபெற்றது என்பது குறித்த எந்த விவரமும் வழக்குப் பதிவில் இல்லை. ஆதலால் சாவர்க்கர் அப்ரூவர் முன்னிலையில் கோட்சேயிடமும், ஆப்தேவிடமும்(சென்று வாருங்கள், வென்று வாருங்கள் என்று) வாழ்த்துக் கூறியது மகாத்மா காந்தியின் படுகொலை சம்பந்தப்பட்டதுதான் என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.

“ஆதலால் அப்ரூவரின் கூற்றை வைத்து சாவர்க்கருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் முடிவுக்கு வருவது உறுதியில்லாததாக ஆகிறது.”

ஆக, அப்ரூவராக மாறிய பாட்கே உண்மையான ஒரு சாட்சிதான் என்று நீதிபதி ஒப்புக்கொண்டாலும், சாவர்க்கர் சம்பந்தப்பட்டு அவர் கூறிய நிகழ்வுகள் ஒப்புறுதிப்படுத்தப்படாததால் (uncorroborated), அதன் தொடர்ச்சி உறுதிப்படுத்தப்படாததால் சாவர்க்கருக்கு தண்டனை அளிப்பது“பாதுகாப்பற்றது” என்று நீதிபதி கருதுகிறார்.

ஆனால், ஏழு பக்கங்கள் கழித்து, அடுத்த அத்தியாயத்தில் (XXV), பாட்கே குறித்து நீதிபதி கூறிய கருத்துகளுக்கு அவரே முரண்படுகிறார். ஆதாரச் சட்டத்தின் அடிப்படையில் சாவர்க்கரை சிறைக்கு அனுப்புவது“பாதுகாப்பற்றது” என்றுதான் நீதிபதி கூறியுள்ளார். ஆனால் சாவர்க்கரின் பங்கு குறித்து நீதிபதி இவ்வாறு கூறுகிறார்:

“வினாயக் டி. சாவர்க்கர் அவரது வாக்குமூலத்தில் இந்தச் ‘சதி’யில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்று கூறுகிறார். தனக்கு கோட்சே, ஆப்தே ஆகியோர் மேல் எந்தக் கட்டுப்பாடும் கிடையாது என்றும் கூறுகிறார். மேலே குறிப்பிடப்பட்டது போல் அரசுத்தரப்பு வழக்கு அப்ரூவரின் ஆதாரத்தின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளது. அதற்கடுத்ததாக குறிப்பிடப்பட்டது போல் அப்ரூவரின் கூற்றை மட்டுமே வைத்து சாவர்க்கரின் மேல் நடவடிக்கை எடுக்கும் முடிவுக்கு வருவது பாதுகாப்பற்றது. ஆதலால் 20.01.1948அன்றும், 30.01.1948 அன்றும் டெல்லியில் நடந்த சம்பவங்களில் சாவர்க்கருக்குப் பங்கிருக்கிறது என்று கருதுவதற்கு எந்தவிதக் காரணமும் இல்லை.”

இந்த இறுதி வாக்கியம் தீர்ப்பின் இடைக்கூற்று மட்டுமே. இதற்கு சட்டரீதியாக எந்த மதிப்பும் இல்லை. அப்ரூவர் பாட்கேயின் வாக்குமூலத்தில் 20.01.1948அன்றும், 30.01.1948 அன்றும் டெல்லியில் நடந்த சம்பவங்களில் சாவர்க்கருக்குப் பங்கிருக்கிறது என்பதற்கு போதிய ஆதாரங்கள் இருக்கின்றன.

அப்ரூவரின் கூற்றில் நம்பகத்தன்மைக்கு எந்தக் குறைவுமில்லை. ஆனால் ஒப்புறுதிப்பாடு (Corroboration) குறைபாடு மட்டுமே உள்ளது.

ஆதாரம் ஒப்புறுதிப்படுத்தப்பட்டது, ஆனால் மிகத் தாமதமாக!

சாவர்க்கரின் மரணத்திற்கு ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குப் பிறகு,அவரது உதவியாளர்கள் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எல். காபூர் கமிஷன் முன் காந்திப் படுகொலை குறித்து பேசினார்கள். அப்பொழுது அப்ரூவர் பாட்கேவின் கூற்றுகளுக்கு போதுமான அளவு ஒப்புறுதிப்பாட்டைக் கொடுத்தார்கள்.

நீதிபதி ஜே.எல். காபூர் கமிஷனின் அறிக்கை இவ்வாறு கூறுகிறது: “1948 மார்ச்4ம் தேதி பாம்பே போலீசில் பதிவு செய்யப்பட்டபடி, சாவர்க்கரின் மெய்க்காப்பாளரான அப்பா ராம்சந்த்ர காசரின் வாக்குமூலம் இவ்வாறு கூறுகிறது: 1946லேயே ஆப்தேவும், கோட்சேவும் சாவர்க்கரை அடிக்கடி சந்திக்க வருவர். கர்க்கரேயும் சில நேரங்களில் சாவர்க்கரைச் சந்திக்க வருவார்.

1947 ஆகஸ்ட் மாதம் சாவர்க்கர் ஒரு கூட்டம் சம்பந்தமாக பூனா சென்றிருந்தபொழுது கோட்சேயும், ஆப்தேயும் அவர் கூடவே எப்பொழுதும் இருந்தனர். அவர்கள் சாவர்க்கருடன் ஹிந்து மகாசபாவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்தாலோசித்தனர். தனக்கு வயதாகிக்கொண்டு வருவதாகவும், அவர்கள்தான் இந்தப் பணியை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் சாவர்க்கர் ஆப்தேவிடமும், கோட்சேயிடமும் கூறினார்.

1947 ஆகஸ்ட் 5 அல்லது 6ம் தேதி, டெல்லியில் அனைத்திந்திய ஹிந்து மாநாடு நடைபெற்றது. அதற்கு சாவர்க்கரும், கோட்சேயும், ஆப்தேவும் விமானத்தில் சென்றனர். அதேபோல் அங்கிருந்து பாம்பேக்கு ஒன்றாகவே விமானத்தில் திரும்பினர். 1948 ஜனவரி 13 அல்லது 14 அன்று, கர்க்கரே ஒரு பஞ்சாபி இளைஞனோடு சாவர்க்கரிடம் வந்தார். அவர்கள் சாவர்க்கரை 15முதல் 20 நிமிடங்கள் வரை பேட்டி கண்டனர்.

அதேபோல் 15 அல்லது 16ம் தேதி, ஆப்தேவும், கோட்சேவும் இரவு 9.30மணியளவில் சாவர்க்கரைச் சந்தித்தனர். அதற்கு ஒரு வாரம் கழித்து, 23அல்லது 24 தேதியாக இருக்கலாம், ஆப்தேவும், கோட்சேவும் மீண்டும் சாவர்க்கரைச் சந்திக்க வந்தனர். காலை 10 முதல் 10.30 மணியளவில் அவருடன் அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.”

இப்படிப் போகிறது அந்த அறிக்கை.

ஆக, சாவர்க்கர் காந்திப் படுகொலையில் சம்பந்தப்பட்டிருப்பது முழு முதல் உண்மை. வழக்கு நடந்த நேரத்தில் அப்ரூவரின் ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று நீதிபதி கருதியதால் சாவர்க்கர் குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அதற்குப் பின்னால் வந்த அனைத்து ஆதாரப்பூர்வ தகவல்களும் காந்தியின் படுகொலையில் சாவர்க்கருக்கு முழு பங்கிருக்கிறது என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

இதனை உணர்ந்து நாட்டையே களங்கப்படுத்தும் விதமாக பா.ஜ.க. அரசு பாராளுமன்றத்தில் சாவர்க்கருக்கு வைத்த சிலை அகற்றப்படுமா?


நன்றி: Frontlineதமிழில் (சுருக்கம்) : MSAH

இக்கட்டுரை விடியல் வெள்ளி ஏப்ரல் 2013 மாத இதழில் வெளியானது.

காந்தியின் கொலையில் சாவர்க்கரின் பங்கு - 1




இதுவரை வெளிவராத உண்மைகள்

.ஜிநூரானி

கடந்த 2012ம் ஆண்டு ஜூலை 12ம் நாள் அன்று மாலை ஸ்வபன் தாஸ் குப்தா தொலைக்காட்சியில் ஓர் உண்மையை வெளிப்படுத்தினார். வி.டி. சாவர்க்கருக்கு மகாத்மா காந்தியின் படுகொலையில் பங்குண்டு என்றும், ஆனால் அவர் தப்பித்து விட்டார் என்றும் மொரார்ஜி தேசாய் சொன்னதாக எல்.கே. அத்வானி தன்னிடம் கூறினார் என்பதுதான் அந்தச் செய்தி.


அன்றைய பாம்பே மாகாணத்தின் உள்துறை அமைச்சராக இருந்த மொரார்ஜிதேசாய் ஒருமுறை இவ்வாறு கூறினார்: “காந்தியின் படுகொலை குறித்தபுலன் விசாரணை பாம்பே மாகாணத்தில் நடந்து வருகிறது. அதில் நான்நேரடியாகத் தொடர்பு வைத்து கேட்டு அறிந்து வருகிறேன்.”


அவருக்கு உண்மை என்ன என்று தெரியும். பாம்பே குற்றவியல் புலனாய்வுத்துறை (CID) சிறப்புக் கிளையின் துணை கமிஷனராக இருந்த ஜாம்ஷெட்நகர்வாலாவுக்கும் அது தெரியும். அவர் உள்துறை அமைச்சர் மொரார்ஜிக்குமிக நெருங்கியவராக இருந்தார்.


1948ம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று மத்திய உள்துறை அமைச்சர் வல்லபாய்பட்டேல் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு இவ்வாறுஎழுதியனுப்பினார்:
“காந்தியின் படுகொலை வழக்கு விசாரணையின் முன்னேற்றத்தை நான்தினமும் கவனித்து வருகிறேன். சாவர்க்கரின் கட்டுப்பாட்டிலுள்ள ஹிந்துமகாசபாவின் தீவிரவாதப் பிரிவுதான் இந்தப் படுகொலைக்கான சதித்திட்டத்தைத் தீட்டி, அதனை நிறைவேற்றியது.”
(Sardar Patel’s Correspondence, Volume 6, Page 56)


அன்றைய மத்திய அமைச்சரவையில் ஓர் அங்கமாக இருந்த சியாம பிரசாத்முகர்ஜி சாவர்க்கருக்காக பட்டேலிடம் பொருத்தமற்ற முறையில் வக்காலத்துவாங்கி வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதினார். சிறப்பு நீதிமன்றம்அமைக்கப்பட்ட அதே நாளில் சாவர்க்கரின் சார்பில் முகர்ஜி பட்டேலிடம்பேசினார். சியாம பிரசாத் முகர்ஜிதான் சாவர்க்கருக்கு அடுத்தபடியாக ஹிந்துமகாசபாவின் தலைவரானார்.


பட்டேல் சியாம பிரசாத் முகர்ஜிக்கு இவ்வாறு பதிலனுப்பினார்:
“இந்த வழக்கின் பொறுப்பாளரான பாம்பேயின் அரசுத் தரப்பு வழக்கறிஞர்,இன்னபிற சட்ட வல்லுனர்கள், புலனாய்வுத்துறை அதிகாரிகள் ஆகியோர்என்னை டெல்லியில் நடந்த ஒரு மாநாட்டில் சந்தித்தனர். நான் அவர்களிடம்ஒன்றைத் தெளிவாகச் சொன்னேன். சாவர்க்கரை இந்த வழக்கில் சேர்ப்பதுஎன்பது முழுக்க முழுக்க சட்டம், நீதிமன்றம் ஆகியவற்றின் நிலைப்பாட்டைப்பொறுத்துதான்.


இந்த விவகாரத்தில் அரசியல் வந்து விடக்கூடாது. சாவர்க்கரை வழக்கில்சேர்க்கவேண்டும் என்ற கருத்திற்கு அவர்கள் வருவார்களேயானால்நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு அதற்கான ஆவணங்கள் என் மேஜைக்குவரவேண்டும் என்று நான் மீண்டும் அவர்களுக்குத் தெளிவு படுத்தி விட்டேன்.


ஹிந்து மகாசபா ஓர் அமைப்பு என்ற ரீதியில் காந்தி படுகொலையின்சதிக்குக் காரணமில்லை என்பதில் நான் உங்களுடன் உடன்படுகிறேன்.ஆனால் அதே வேளை, அதன் கணிசமான உறுப்பினர்கள் காந்தி படுகொலைநடந்தவுடன் இனிப்பு வழங்கி கொண்டாடியதையும் நாம் கவனிக்காமல் கண்மூடி இருந்துவிட முடியாது. இந்த (இனிப்பு வழங்கப்பட்ட) விவகாரம்தொடர்பாக நம்பகமான தகவல்கள் நாட்டின் பல பாகங்களிலிருந்தும்வந்துள்ளன. அத்தோடு ஆபத்தான இன்னொன்றும் உள்ளது. அது தீவிரவாதவகுப்புவாதம்.


மகந்த் திக்விஜய் நாத், பேரா. ராம் சிங், தேஷ்பாண்டே போன்ற ஹிந்துமகாசபாவின் பேச்சாளர்கள் சில மாதங்களுக்கு முன்பு இந்த மதவெறி பிடித்ததீவிரவாத வகுப்புவாதத்தைப் பிரச்சாரம் செய்து வந்தனர். இதுபொதுமக்களின் பாதுகாப்புக்கு பெருத்த ஆபத்தை உண்டு பண்ணும்என்பதையும் நாம் மறுக்க முடியாது. இதே ஆபத்து ஆர்.எஸ்.எஸ்.அமைப்பிடமிருந்தும் உள்ளது. இராணுவ நடவடிக்கைகள் அல்லது பகுதிஇராணுவ நடவடிக்கைகளை அது மறைமுகமாக நடத்தி வருகிறது.”
(Sardar Patel’s Correspondence, Volume 6, Pages 65-66)


பட்டேல் முகர்ஜிக்கு மீண்டும் எழுதினார்:
“காந்திஜியின் படுகொலை குறித்த வழக்கு நீதிமன்ற விசாரணையில்நிலுவையில் இருக்கும் நிலையில், இந்தப் படுகொலையில் ஆர்.எஸ்.எஸ்.,ஹிந்து மகாசபா ஆகிய இரு அமைப்புகளின் பங்கு குறித்து நான் இப்பொழுதுகருத்து கூறக்கூடாது. ஆனால் ஒன்றை எனக்குக் கிடைத்த தகவல்கள்உறுதிப்படுத்துகின்றன. இந்த இரண்டு அமைப்புகள் எடுத்த நடவடிக்கைகளின்விளைவால், குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்.ஸின் நடவடிக்கைகளின் விளைவால்,நாட்டில் ஒரு சூழல் உருவானது. எப்படிப்பட்ட சூழல் என்றால் இப்படிப்பட்டகொடூரக் கொலைகள் நடப்பதற்கு சாத்தியப்படக்கூடிய அளவுக்கு மோசமானசூழல் உருவானது. 


ஹிந்து மகாசபாவின் மதவெறி பிடித்த தீவிரவாதப் பிரிவுதான் இந்தப்படுகொலையைச் செய்தது என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமுமில்லை.ஆர்.எஸ்.எஸ்.ஸின் நடவடிக்கைகள் அரசின் இருப்புக்கே பெரும்அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அது தடை செய்யப்பட்ட பின்பும், அதன்இத்தகைய நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை என்று எனக்குக் கிடைத்ததகவல்கள் கூறுகின்றன. மாறாக, உண்மையில் சொல்லவேண்டும் என்றால்,அதன் கீழறுப்பு நடவடிக்கைகள் அதிகமாகத்தான் ஆகியிருக்கின்றன.”
(Sardar Patel’s Correspondence, Volume 6, Page 323)


“மகாத்மா காந்தியின் வாழ்வும், மரணமும்” (The Life and Death of Mahatma Gandhi) என்ற நூலை ராபர்ட் பெய்ன் (Robert Payne) என்பவர் எழுதி 1969ல்வெளியிட்டார். அதில் சாவர்க்கர் குறித்து அவர் இவ்வாறு எழுதுகிறார்:


“காந்தி படுகொலை செய்யப்பட்டு 8 மணி நேரத்துக்குள் சாவர்க்கர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அவர்தான் இந்தப் படுகொலையின் முதல்சந்தேகத்திற்குரியவர். ஆனால் ஆச்சரியப்படவேண்டிய விஷயம்என்னவென்றால் அவர் ஆரம்பத்தில் கைது செய்யப்படவில்லை. அவர்லண்டனில் வசித்திருந்தால் உடனே அவர் மீது சந்தேகம் பாய்ந்திருக்கும்.
நாதுராம் வினாயக் கோட்சேதான் சதித் திட்டம் தீட்டுவதற்கு ஒருங்கிணைப்புசெய்தவர் என்று காட்டுவதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு எந்தக்கஷ்டமும் இருந்திடவில்லை.


ஆனால் சாவர்க்கர் நேரடியாக இதில் ஈடுபட்டார் என்பது நிரூபிக்கப்படுவதற்குமிகுந்த கஷ்டம் இருந்தது. படுகொலை நடப்பதற்கு முன்பாக பல மாதங்கள்தான் நோய்வாய்ப்பட்டு இருந்ததாகவும், சொற்ப நபர்களே தன்னை வந்துசந்தித்ததாகவும், கோட்சேயோ, நாராயண் டி. ஆப்தேயோ தன்னை ஒருவருடத்திற்கும் மேலாக சந்திக்கவேயில்லை என்றும் சாவர்க்கர் கூறினார்.


காந்திப் படுகொலைக்கு மூன்று நாட்களுக்கு முன்னர், அதாவது ஜனவரி 17ம்நாள், திகாம்பர் பாட்கே என்பவர் கோட்சேவையும், ஆப்தேவையும் பாம்பேயில்சாவர்க்கர் இல்லத்திற்கு காலை 9 மணிக்கு அழைத்துச் சென்றார். பாட்கேகீழ்த்தளத்தில் காத்திருக்க, தங்கள் அரசியல் குருவான சாவர்க்கரைகடைசியாக ஒரு முறை பார்க்கவும், இறுதிக் கட்ட அறிவுரைகளைக் கேட்டுவிட்டுப் போகவும் கோட்சேவும், ஆப்தேவும் மேல் தளத்திற்குச் சென்றுசாவர்க்கரைச் சந்தித்தனர்.


ஐந்திலிருந்து பத்து நிமிடங்களுக்குள் கோட்சேவும், ஆப்தேவும் திரும்பிகீழ்த்தளத்திற்கு வந்தனர். அவர்களுடன் சாவர்க்கரும் வந்தார். “வெற்றியுடன்திரும்பி வாருங்கள்” என்று சாவர்க்கர் அவர்களிடம் சொன்னார். இந்தப்படுகொலைக்கு தார்மீக ரீதியான அதிகப் பொறுப்பு சாவர்க்கருக்கே உள்ளது.”
(Sardar Patel’s Correspondence, Volume 6, Page 323)


1975ம் ஆண்டு லாரி காலின்ஸ், டொமினிக் லேப்பியர் ஆகியோர் எழுதிய மிகப் பிரபலமான “நள்ளிரவில் சுதந்திரம்” (Freedom at Midnight) என்ற நூல் வெளிவந்தது. அந்த நூல் காவல்துறை ஆவணங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. மேற்கு பாகிஸ்தானிலிருந்து இங்கே வந்த அகதியான மதன்லால் கே. பஹ்வா 1948ம் ஆண்டு ஜனவரி 20 அன்று காந்தி பிரார்த்தனைக் கூட்டத்தில் ஒரு குண்டை வெடிக்கச் செய்தான். அவனுடன் கூட வந்த கோட்சேயும், இன்னும் சிலரும் தப்பி ஓடி விட்டனர்.


அடுத்த நாள், இந்த வழக்கு விசாரணையை பாம்பே மாகாண உள்துறை அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் காவல்துறை அதிகாரி நகர்வாலாவிடம் ஒப்படைத்தார். “நள்ளிரவில் சுதந்திரம்” நூலில் அதன் ஆசிரியர்கள் எழுதுகிறார்கள்:


“நகர்வாலா மதன்லாலைப் பிடிக்க அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டார்.காந்தியைக் கொல்ல முனைந்தவர்கள் பனை மரங்களுக்கிடையில் அமைதியாக இருந்த வீடுகளைக் கடந்து பாம்பேயின் கெலுக்சர் சாலையில் அமைந்துள்ள சாவர்க்கரின் வீட்டிற்குச் சென்றார்கள் என்பதைக் கண்டறிய அந்த இளம் அதிகாரிக்கு வெகு நாட்கள் பிடிக்கவில்லை. மதன்லால் அந்தக் கொலை முயற்சிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு சாவர்க்கரை அவரது வீட்டில் வைத்து சந்தித்ததை அடிப்படையாக வைத்து சாவர்க்கரைக் கைது செய்ய நகர்வாலா மொரார்ஜியிடம் அனுமதி கேட்டார்.


மொரார்ஜி கோபத்துடன் அதற்கு மறுத்ததுடன் இவ்வாறு அந்த அதிகாரியிடம் எரிந்து விழுந்தார்: “உமக்கென்ன பைத்தியமா? இந்த மொத்த மாகாணமும் தீக்கிரையாகிப் போக வேண்டும் என்று நீர் எண்ணுகிறீரா?”


நகர்வாலாவால் சாவர்க்கரை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால்தான் போட முடியவில்லை. ஆனால் ஒரு காரியம் செய்தார். பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட அதிபுத்திசாலிப் பிரிவான ‘கண்காணிப்பாளர் பிரிவு’ (Watchers’ Branch) என்ற பிரிவுக்கு சாவர்க்கரைக் கண்காணிக்கும் பொறுப்பை ஒப்படைக்க முடிந்தது.”
(நள்ளிரவில் சுதந்திரம், பக். 417)


சாவர்க்கர் தீவிரக் கண்காணிப்பின் கீழ் வந்தார். ”ஜிம்மி நகர்வாலாவின் பாம்பே புலன் விசாரணை முதல் 48 மணி நேரத்தில் கொஞ்சம் புதிய செய்திகளைக் கொண்டு வந்தது. பாம்பே கண்காணிப்பாளர் பிரிவு சாவர்க்கர் சதான் என்னும் சாவர்க்கர் இல்லத்தின் முன்பு தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டது. ஆனால் அதிபுத்திசாலியான சாவர்க்கர் தன் உள்ளத்தில் உள்ளதை வெளிப்படுத்தவில்லை. சில ஆபத்தான மர்ம அலை அந்த இல்லத்திலிருந்து வெளிவருவது போலிருந்தது.


சாவர்க்கரின் வீட்டைச் சுற்றி அவரின் சீடர்களின் நடமாட்டங்களில் நகர்வாலாவுக்கு சந்தேகம் பிறந்தது. அவரது போலீஸ் மூளை ஏதோ ஒரு விபரீதம் நடக்கப்போவது குறித்து அவருக்கு எச்சரிக்கை விடுத்தது. டெல்லி காவல்துறைத் தலைவரிடம் நகர்வாலா இவ்வாறு கூறினார்: “ஏன் என்று கேட்காதீர்கள். இன்னொரு கொலை முயற்சி நடக்கவிருக்கிறது. இங்கு நிலவும் சூழ்நிலையை வைத்து நான் இதனை உணர்கிறேன்.”
(நள்ளிரவில் சுதந்திரம், பக். 429-430)



நன்றி : Frontline
தமிழில் (சுருக்கம்) : MSAH

விடியல் வெள்ளி மார்ச் 2013