பரிந்துரை
(Dr. G. சிரீவத்சா M.A., Ph.d,. London)
"இந்துக்களே! விழிமின்! எழுமின்!'' என்ற இந்நூலை எல்லா இந்து நண்பர்களுக்கும் பரிந்துரைப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்!
உண்மையை உலகுக்கு உரக்கச் சொல்லியாக வேண்டும். இந்த சீரிய கடமை இந்நூலின் மூலம் நிறைவேறியுள்ளது.
இந்நூலை நடுநிலையோடு படிக்கின்ற அனைவரும் இதில் அமிழ்ந்து கிடக்கின்ற உண்மைகணை அட்டியின்றி ஏற்றுக் கொள்வார்கள்.
நான் ஓர் இந்து! என்னால் இந்நூலை ஆரம்பத்தில் அப்படியே ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
ஆகவே, இந்த நூலில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள நூல்கள், ஒலி நாடாக்கள், ஒளி நாடக்கள் ஆகியவற்றை நான் நேரே படிக்க வேண்டும் - பார்க்க வேண்டும் என விரும்பினேன். இவற்றையெல்லாம் அதாவது இதில் ஆதாரமாகக் காட்டப்பட்டுள்ள அனைத்தையும் பார்வை இட்ட பிறகே, என்னால் இந்த நூலை ஏற்றுக் கொள்ள இயலும். அதன் பின்னரே இந்த நூலை ஏனைய இந்து நண்பர்களுக்கும் பரிந்துரைப்பது பற்றிச் சிந்திக்க இயலும் என்று கூறினேன். அத்தனை மூல நூல்களையும் ஆதாரங்களையும் கொண்டு வந்து தந்தார்கள்.
படித்தேன் - பார்த்தேன் - அதிர்ந்து போனேன். அதன் பின் இந்த நூலை எல்லோருக்கும் பரிந்துரைப்பது மட்டுமல்ல, எப்படியேனும் படிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
இந்த இந்தியத் திருநாட்டை ஆண்டு கொண்டிருக்கின்ற இனம் இந்த நாட்டுக்குச் சொல்லொண்ணா துரோகங்களை இழைத்துள்ளது.
இந்த நாட்டைத் தாய் நாடாகக் கொண்ட எந்தக் குடிமகனும் இதைப் பொறுத்துக் கொள்ளவே மாட்டான்.
மக்களுக்குச் செய்திகளைச் சொல்லுகின்ற அத்தனை செய்தி நிறுவனங்களையும் - பத்திரிக்கைகளையும் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்துக்கொண்டு, இவர்கள் இந்தியாவிலுள்ள இளைஞர்களின் உள்ளங்களில் விஷ வித்தை ஊன்றி வளர்த்து வருகின்றார்கள்.
R.S.S-ம் அதன் பரிவார அமைப்புகளும், முழுமையான இராணுவப் பயிற்சியைப் பெற்றிருக்கின்றன.
இவை இந்தியாவிலிருக்கின்ற ஏனைய குடிமக்களைக் கொலை செய்வதையே குறியாகக் கொண்டு திட்டம் தீட்டிச் செயல்படுத்தி வருகின்றன.
தீண்டாமை, இன துவேஷம், ஜாதி அமைப்பு இவை இந்த இந்தியத் திருநாட்டை அழைக்கழித்து அவமானப்படுத்தி வருகின்றன.
ஓர் இனம், கல்விச் செல்வம், அரசியல், செய்தித்துறை ஆகியவற்றில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி நாங்கள் தான் இந்த நாட்டை ஆதிக்கம் - அதிகாரம் செலுத்தத் தகுந்த இனம் என்பதை காட்டி வருகின்றது.
இந்த இனத்தைச் சார்ந்தவர்கள் ஏன் ஆங்கிலேயர்களை வெளியேற்றினார்கள் என்பதை இப்போது தான் நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.
ஹிந்துக்களாகிய நமது வேத நூல்கள் என்ற புனித நூல்கள் எதை நமக்குக் கற்றுத் தருகின்றன?
நமக்கு எத்தனை கடவுள்கள்?
வேதங்கள், புனிதங்கள் என்றெல்லாம் போற்றப்படுகின்ற நமது புனித நூல்கள் ஏதேனும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவைகளா? அல்லது அத்தனையும் கற்பனையில் கரைபுரண்டோடிய கட்டுக்கதைகளா?
நமது மனிதக் கடவுள்களான இராமன், சீதை, சிவன், பார்வதி, பிரம்மா, கணேசன், கிருஷ்ணன் அவர்களைப் பற்றி இவை என்ன சொல்லுகின்றன?
இவர்களுடைய கதைகளில் பிரவாகமெடுத்து ஓடும் ஆபாசங்களைச் சகிக்க இயலுமா?
இவற்றைப் படியுங்கள் - அல்லது படிக்கும் போது பக்கத்தில் நின்று கேளுங்கள். பரலோகம் புகுவீர்கள் என்றெல்லாம் போதித்தால் புத்திக்கு பொருத்தமானதாக இருக்கின்றனவா?
நிச்சயமாக என்னால் இவற்றை என்னுடைய தாயாரிடமோ, மகனிடமோ, சகோதரியிடமோ படித்துக் காட்டிட இயலாது.
நிச்சயமாக இதை உங்களாலும் செய்திட இயலாது என்றே நினைக்கின்றேன்.
வெளிநாட்டைச் சார்ந்த ஒருவன் நம்மிடம் லிங்கம், யோனி இவை என்ன? என்று கேட்டால் என்ன சொல்வது? விபூதி, சூரிய வழிபாடு, சிறுநீரைக் குடிக்கப் பரிந்துரைப்பது இவையெல்லாம் நமது அறியாமையின் அடையாளச் சின்னங்கள்.
மதம் என்பது மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள உறவு பற்றியது. அது மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ள உறவு பற்றியோ, கீழான நிலைகளைப் பற்றியோ விரித்துரைப்பதில்லை.
இறைவனை அடைவதற்கு சிறந்த வழி நம்மோடு வாழுகின்ற ஏனைய மனிதர்களை அன்போடு நடத்துவது, மதிப்பது, நியாயம் வழங்குவது - சமஉரிமைகளைக் கொடுப்பது என்பவையே!
உலகிலுள்ள பெரும்பாலான மதங்கள் இவற்றையே போதிக்கின்றன.
ஆனால் ஆரியர்களிடமிருந்து அவதாரம் எடுத்த ஹிந்து மதம் இவற்றிற்கு நேர் எதிரானவற்றையே போதிக்கின்றது.
உயர் ஜாதியினராகிய பிராமணர்களிடம் அடுத்தவர்களை அடிமைப்படுத்தவும் - ஏமாற்றவும் பணிக்கின்றது இந்த ஹிந்துமதம்.
ஹிந்து வேதங்கள் - அன்று முதல் இன்று வரை பிராமணர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்துள்ளது. ஏனெனில் 95 சதவீதம் இந்திய குடிமக்களை இவர்கள் தாம் இத்தனை நாட்களாக ஆண்டு வந்திருக்கின்றார்கள்.
நீங்களும் நானும் நமது தாய் நாட்டின் தலையெழுத்தை ஒரே இரவில் மாற்றிட இயலாது. ஆனால் நமது தாய்நாட்டின் மீதுள்ள பற்றை அடிப்படையாகக் கொண்டு தாய்நாட்டைத் தகாதவர்களிடமிருந்து காப்பாற்றியே ஆக வேண்டும். இதற்காக நாம் நம்மால் இயன்ற அனைத்தையும் அவசியம் செய்தாக வேண்டும்.
Dr. சாட்டர்ஜி M.A., Ph.d,. (USA)
கண்ணியமிக்க வாசகர்கள் கவனத்திற்கு!
இந்நூலில் இடம்பெற்றுள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்தவை.
ஆதாரங்கள் பட்டியல்கள், நூல்கள், நூல்களின் விபரங்கள் அனைத்து முகவரியுடன் பின்னால் தரப்பட்டுள்ளன.
இந்நூலுக்கு பதிப்புரிமை இல்லை. இதை மொழி பெயர்த்துக் கொள்ளலாம். அச்சிட்டுக் கொள்ளலாம். முன் அனுமதியின்றி விற்பனை செய்து கொள்ளலாம்.
நீங்கள் ஓர் உண்மையான ஹிந்துவாக இருந்தால்..
இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்..
ஏனைய ஹிந்து சகோதரர்களையும் இந்த நூலைப் படிக்கத் தூண்டி - உண்மையை ஊரறியச் செய்யுங்கள்.
இந்த இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
நீங்கள் இந்தக் கடமையில் தவறுவீர்கள் என்றால் உங்கள் குழந்தைகள், உங்கள் குழந்தைகளின் குழந்தைகள், அவர்களின் சந்ததிகள் அத்தனை பேரும் தொடர்ந்து கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவார்கள்.
இதை ஆங்கில அறிஞன் எட்மண்ட்பர்க் இப்படிச் சொன்னான்:
"அநீதியைக் கண்ணெதிரே கண்டும் (போராடாமல்) அமைதியாக அமர்ந்திருப்பவர்கள் ஆபத்தானவர்கள்"
தாயகத்தை தற்காக்க வாருங்கள்.
நாம், நமது தாய் நாட்டை நேசிக்கின்றோம்! நாம் யாரையும் வெறுப்பதில்லை!
இந்தியர்கள் என்ற அளவில் நாம் நமது தாய் நாட்டை, அதைத் தொற்றிக் கொண்டிருக்கும் - தொடர்ந்து கொண்டிருக்கும் தொல்லைகளிலிருந்து காப்பாற்றுவோம்!
அதன் குடிமக்களுக்கிடையே ஒற்றுமையைப் போற்றி வளர்ப்போம். இவற்றை மனதிற் கொண்டே இந்நூல் எழுதப்பட்டது.
மதம் என்பது என்ன?
மதம் என்பது ஒரு வாழ்க்கைநெறி - நடைமுறை வழக்கம்.
அதன் நோக்கம்:
இந்த உலகிலும் - அடுத்த உலகிலும் வெற்றி!
மதம் என்பது நீதி, அன்பு, மனிதம் - சம உரிமைகள் என்பவற்றின் அடிப்படையில் அமைந்ததாய் இருந்திடல் வேண்டும். மதம் மனிதனின் இயல்புகளோடு பொருந்திப் போக வேண்டும். மனிதர்கள் அனைவரும் இறைவனால் படைக்கப்பட்டவர்களே! இறைவன், தான் படைத்த மனிதர்களுக்கிடையே, வேற்றுமை பாராட்டுவதில்லை. இறைவன், வலியவன், மெலியவனை ஆக்கிரமிப்பதை - அடிமைப்படுத்தி அநியாயம் செய்வதை அனுமதிப்பதில்லை, ஆதரிப்பதில்லை. காரணமின்றி தண்டிக்கப்படுபவர்கள் மீது இறைவன் அனுதாபம் கொள்கிறான். அடுத்தவர்களை மதத்தின் பெயரால் அடிமைப்படுத்துவது - அடிமுட்டாள் ஆக்குவது, ஏய்ப்பது - கொலை பாதகங்களைச் செய்வது - இவற்றின் மூலம் எந்த மனிதனும் இறைவனை அடைந்திட இயலாது.
இந்தியாவில் எராளமான மதங்கள் இருக்கின்றன. ஒரு மதத்தைப் பின்பற்றுபவர்கள் ஏனைய மதங்களைப் பின்பற்றுபவர்களையும் - மதங்களையும் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
வருந்தத்தக்க அளவில், உயர்ஜாதி பிராமணர்கள், பாமர ஹிந்துக்களின் உள்ளங்களில், ஏனைய மதங்களின் பால் வெறுப்பையும் துவேஷத்தையும் வளர்த்து வருகின்றார்கள்.
இதனால் சுமுகமான வாழ்க்கைக்குப் பெருமளவில் பங்கம் ஏற்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் - கிருஸ்துவர்கள் - கீழ்ஜாதி ஹிந்துக்கள் - இவர்களின் இரத்தங்கள் ஆறாக ஓட்டப்படுகின்றன.
கீழ்ஜாதி ஹிந்துக்களின் இரத்தத்தை ஆறாக ஓட்டுபவர்கள் - அவர்களின் பெண்களைக் கற்பழித்து - அவமானப்படுத்தி - அல்லல்களுக்கு உள்ளாக்குபவர்கள் - இந்த உயர்ஜாதி ஆணவ பிராமணர்களே!
இந்தப் பிராமணர்கள் இந்த இனக் கலவரங்களை என்றென்றும் நிரந்தரமாக ஆக்கிக் கொள்ள - அதில் ஆதாயம் தேடிக் கண்டெடுத்த யுக்திதான்:
6000 கிறிஸ்துவ ஆலயங்கள் - (இதில் மண்டைக்காடு - நீலக்கால் ஆகிய இடங்களிலுள்ள கிறிஸ்துவ ஆலயங்களும் அடங்கும்)
3000 பள்ளிவாயில்கள். இவையெல்லாம் ஒரு காலத்தில் கோயில்களாக இருந்தன என்ற பொய்ப்பிரச்சாரம்.
இவர்கள் திட்டமிட்டு அதிவேகமாகப் பரப்பி வரும் இந்தப் பொய்ப் பிரச்சாரங்களுக்கு எந்த விதமான வரலாற்று ஆதாரங்களோ - விஞ்ஞான ஆதாரங்களோ இல்லை.
பத்திரிக்கைகளின் எந்தப் பக்கம் பார்த்தாலும் - ஹிந்துக்கள் முஸ்லிம்களைக் கொன்றார்கள் - ஹிந்துக்கள் கீழ் ஜாதியினரைக் கொன்றார்கள் - என்றே செய்திகள். இவைகள் யாரால் - எப்படி நடக்கின்றன என்பதை நீங்கள் எப்போதாவது ஆழ்ந்து கவனித்தது உண்டா?
இவற்றை தூண்டுபவர்களும் - திட்டம் போட்டுத் தருபவர்களும் உயர்ஜாதி பிராமணர்கள் தாம்.
பிரமாணர்கள் இந்த நாட்டின் குடிமக்களது மதங்களை குறை கூறியும் கிண்டல் செய்தும் வருகின்றார்கள். ஆனால் அவர்கள் தங்களின் சொந்த மதத்தை - அதன் விதிமுறைகளை - அதே விமர்சன கண்களோடு பார்க்க மறுக்கின்றார்கள். ஆகவே தான் நாம் இந்த நூலை எழுதிட வேணடிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.
விருப்பு வெறுப்பின்றி நாம் ஓர் அறிவுப்பூர்வமான ஆராய்ச்சியை மேற்கொள்வோம்.
இந்த ஆராய்ச்சியில் பிராமணர்கள் வேதம் என்று சொல்லுபவற்றில் என்னென்ன இருக்கின்றன என்பதைக் கண்டறிவோம். அவற்றை உலக மக்களின் பார்வைக்குக் கொண்டு வருவோம்.
அன்புடன் தாயகப் பணியில்
Dr. சாட்டர்ஜி M.A., Ph.d,. (USA)
(தொடரும்..)
"இந்துக்களே!
விழிமின்! எழுமின்!'' -2
இந்த புத்தகம் கிடைக்குமிடம்:
அறிவுலகம், 32, 3வது அவின்யூ, அசோக் நகர், சென்னை - 600 083
அச்சிட்டோர்: கலைவாணி அச்சகம், மதுரை 625 020
No comments:
Post a Comment