அறிவுக்கு ஒவ்வாத விவாதங்கள்
பிராமணர்கள் எதையும், எல்லா மூடப்பழக்கவழக்கங்களையும் விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்டது என்று வாதிடுவது வழக்கம். ஆனால் மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் இதில் முற்றாக மாறுபடுகின்றார்கள்.
இதோ சில எடுத்துக்காட்டுகள்:
பூமி தட்டையானது
நரசிங்கபுராணம் பக்கம் 169 அபிதான சிந்தாமணி கூறுகின்றது, பூமி தட்டையானது.
ஆனால் இன்று விஞ்ஞானம் ஐயத்திற்கிடமின்றி பூமி உருண்டையானது என்று நிரூபித்துள்ளது.
பூமி, சூரியன் - சந்திரன் இவற்றிற்கிடையேயுள்ள இடைவெளி தூரம்,
விஷ்ணுப்புராணம் கூறுகின்றது: சூரியன் 800,000 மைல்களுக்கப்பால் இருப்பதாகவும், சந்திரன் 2,200,000 மைல்களுக்குப்பால் இருப்பதாகவும் கூறுகின்றது.
ஆனால் விஞ்ஞானம், சந்திரன் தான் பூமிக்குப் பக்கத்தில் இருக்கின்றது என்றும் அதற்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரம் 240,000 மைல்கள் என்றும் சூரியன் 93,000,000 மைல்களுக்கப்பால் இருக்கின்றது என்றும் கண்டுபிடித்து நிரூபித்துள்ளது.
பூமியின் பரப்பளவு:
மார்கண்டேய புராணம் கூறுகின்றது: பூமியின் பரப்பளவு 4,000,000,000 சதுர மைல்கள். ஆனால் விஞ்ஞானம் அறுதி இட்டுக் கூறுகின்றது. பூமியின் பரப்பளவு 190,700,000 சதுர மைல்கள் மட்டுமே!
மாட்டுச்சாணம் - விபூதி
வேதங்கள் கூறுகின்றன. பசு புணிதமானது. ஆகவே அது வணக்கத்திற்குரியது.
பிராமணர்கள் இன்னொரு படி மேலே போய் மாட்டுச் சாணத்தில் எடுக்கப்படும் சாம்பல் புனிதமானது. அதற்கு நோய் நீக்கும் மருத்துவ குணங்கள் உண்டு என்றெல்லாம் பிரஸ்தாபிக்கின்றனர்.
ஆனால் விஞ்ஞானம் இது அப்பட்டமான பொய் என்று நிரூபித்துள்ளது.
மேற்கு ஜெர்மனியைச் சார்ந்த விஞ்ஞானக் கழகம் இதை நன்றாக ஆராய்ந்து பொய் என்று அறிவித்துள்ளது.
இந்த விஞ்ஞான உண்மைகளை அறியாத பாமர்கள் பலர் தங்கள் இல்லங்களை மாட்டுச்சாணத்தால் மெழுகிக் கொள்கின்றனர்.
பசியும் பட்டினியும் நிறைந்த நாடு இந்தியா. இங்கே மாட்டிறைச்சி மிகவும் மலிவாகக் கிடைக்கும் சத்தான உணவு. ஆனால் பிராமணர்களோ கீழ் ஜாதி ஹிந்துக்கள் மாட்டிறைச்சி உண்ணக்கூடாது என மார்தட்டிக் கொள்கின்றனர்.
வால்மீகியின் இராமாயணத்தில் இராமன் இறைச்சி உண்டான் என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.
உண்மை இப்படி இருக்க, இந்த பிராமணர்கள் மட்டும் ஏன் இறைச்சி உண்பதை இப்படி எதிர்க்கின்றார்கள்.?
சூரிய வணக்கம்
ஹிந்துக்கள் அனைவரும் தினமும் சூரியனை வணங்க வேண்டும். சூரியனை தினமும் நேராகப் பார்த்திட வேண்டும். ஹிந்துக்களின் வேதங்களும் புராணங்களும் இப்படிப் போதிக்கின்றனவாம். - கூறுகின்றார்கள் பிராமணர்கள்.
சூரியனை இப்படி வெறும் கண்களால் பார்த்தால் கண்பார்வை கூடுமாம்.
ஆனால் இந்தியா தான் உலகிலேயே மிகவும் அதிகமான குருடர்களைக் கொண்ட நாடாகவும், மாலைக்கண் நோய் உடையவர்களைக் கொண்ட நாடாகவும் இருக்கின்றது.
உண்மையில் சூரிய வணக்கத்தில் எந்த விஞ்ஞான உண்மையும் இல்லை. விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் சூரியனை வெறுங்கண்ணோடு பார்க்காதீர்கள். அது குருட்டு தன்மையை வளர்க்கும் என்றே போதிக்கின்றார்கள்.
இந்தியாவில் குருடர்கள் அதிகமாக இருக்கின்றார்கள் என்றால் அதன் நேரடி பொறுப்பு ஹிந்து மதத்தையே சாரும்.
புனித கங்கை
இந்த நதியில் தான் ஹிந்துக்கள் பாதி வெந்த பிணங்களையும் முழுசாய் வெந்த பிணங்களையும் சாம்பல்களையும் கரைக்கின்றார்கள்.
ஏனெனில் இப்படிச் செய்தால் தான் இறந்தவர்கள் மோட்சம் அடைவார்களாம். இதனால் கங்கையின் நீர் அசுத்தமாகி விட்டது.
மத்திய அரசு இதனை சுத்தம் செய்ய ருபாய் 350 கோடி செலவு செய்தும் சுத்தம் செய்ய இயலாமற் போயிற்று.
இன்னும் கங்கை புனிதமானது தான் என்று கதைக்கின்றார்கள் - இந்த ஹிந்து தீவிரவாதிகள்.
நன்றி:
By Dr. சாட்டர்ஜி M.A., Ph.d,. (USA)
(தொடரும்)
"இந்துக்களே!
விழிமின்! எழுமின்!'' -11
8ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கா்நாடகத்தில் உள்ள ஆலயத்தில் உள்ள வராக அவதார சிலையில் புமி உருண்டையாக செதுக்கப்பட்டுள்ளது. ஆக கலிலியோவிற்கு முன்பே இந்தியாவில்அ புமி உருண்டை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ReplyDelete