Pages

Tuesday, 29 March 2016

“பாரத மாதாஹி ஜே!’’ என்பதும் இந்தியாவை பாரதம் என்பதும் தப்பு!- மஞ்சை.வசந்தன்





“பாரத மாதாஹி ஜே!’’ என்பதும் 
இந்தியாவை பாரதம் என்பதும் தப்பு!
சாஸ்திர விரோதம்! 
மனுஸ்மிருதி ஆதாரம் இதோ!


- மஞ்சை.வசந்தன்

பொய்யை மெய்யாய்க் காட்டுவதும்; இல்லாததை இருப்பதாய்க் காட்டுவதும்; பிறருடையதைத் தன்னுடையது என்பதும்; பலதை ஒன்று என்பதும் ஒன்றை பலதாக்குவதும் ஆரிய பார்ப்பனர்களின் சூழ்சியாகும். இந்துமதம் என்று ஒரு மதமே இல்லை. இந்தியாவிலிருந்த பல கடவுள் நம்பிக்கைகளை ஒன்றாக்கி அதுதான் இந்துமதம் என்று பித்தலாட்டம் செய்து பிழைப்பபதோடு, அதை வைத்தே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

காலஞ்சென்ற காஞ்சி சங்கராச்சாரியாரே, இதை ஒத்துக்கொண்டு கீழ்க்கண்டவாறு கூறுகிறார்: “இப்போது ‘ஹிந்து மதம்’ என்று ஒன்றைச் சொல்கிறோம். இதற்கு உண்மையில் இந்தப் பெயர் கிடையாது. ‘ஹிந்து’ என்றால் ‘அன்பு’ என்று அர்த்தம்; ஹிம்சையைத் தூஷிப்பவன் ஹிந்தூ என்று சிலர் சொல்கிறார்கள். இது சமத்காரமாகச் சொல்வதேயாகும். நம்முடைய பழைய சாஸ்திரம் எதிலும் ‘ஹிந்து மதம்’ என்கிற வார்த்தையே கிடையாது. ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு வைத்த பெயர்தான்.” [தெய்வத்தின் குரல், பாகம்_1, பக்கம் 125]

கற்பனைகளையெல்லாம் புராணங்களாக்கி, அவை நடந்தவை என்று மக்களை நம்பச் செய்து முட்டாளாக்கி, பொழுதையும், பொருளையும் பாழாக்கச் செய்தனர். பிறருடைய கலை, மருத்துவம், மொழி, நாடு, பொருள் இவற்றைத் தன்னுடையது என்றனர். பிச்சையெடுத்துப் பிழைக்க வந்தவர்கள், மண்ணின் மக்களை இழிமக்கள் என்று தாழ்த்தி தாங்களே உயர்ந்தவர்கள், தங்களுக்கு அடிபணிந்தே மற்றவர்கள் வாழவேண்டும் என்றனர்.

அதேபோல் பல நாடுகளாக இருந்த இந்தியப் பகுதியை ஒன்று என்றனர். ஒன்றாக இருந்த திராவிடர்களைப் பல வருணங்களாகப் பல ஜாதிகளாகப் பிரித்தனர். இந்தியா என்று ஒரு நாடே இல்லை. இப்பகுதி பல குறு, சிறு, பெரு நாடுகளாய் இருந்தது. 54 தேசங்களாய் இருந்ததாய் பல்வேறு கதைகளில் சொல்லப்படுகின்றன. அரிச்சந்திரன் மயானத்தில் நின்று கலங்கியபோதுகூட இந்த 54 தேசங்களையும் வரிசையாய் சொல்வதை அரிச்சந்திரன் நாடகத்தில் கேட்கலாம்.

ஆரிய பார்ப்பனர்களின் உயிர்நாடியாய் விளங்கும் மனுதர்ம சாஸ்திரமே இந்தியா இல்லை என்கிறது. இது பல நாடுகளாய் (தேசங்களாய்) இருந்தது என்கிறது. பாரதம் என்பது பல தேசங்களுள் ஒன்று என்கிறது. இந்திய தேசங்களுள் ஒன்றான பாரதம் என்ற பகுதியை இந்தியா முழுமைக்கும், அதையும் தாண்டி பாகிஸ்தானையும் சேர்த்து பாரதம் என்பது அடாவடிச் செயல், அயோக்கியச் செயல் அல்லவா?

ஆர்.எஸ்.எஸ். தலைவர் பகவத் அண்மையில் பாரதத்தை ஏற்காதவர்கள் பாகிஸ்தானைப் பிரித்தனர் என்கிறார். பகவத்தும், ஆர்.எஸ்.எஸ்.ம், அவர்களின் பரிவாரங்களான பி.ஜே.பி. உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்களும் ஏற்றிப் போற்றும், நடைமுறைப்படுத்தத் துடிக்கும் மனுஸ்மிருதி என்ன சொல்கிறது? கீழே படியுங்கள்,

“பௌண்டாம், ஔண்டரம், திராவிடம், காம்போசம், யவநம், சகம், பாரதம், பால்ஹீகம், சீநம், கிராதம், தரதம், கசம். இந்தத் தேசங்களை ஆண்டவர்களனைவரும் மேற்சொன்னபடி சூத்திரனாய் விட்டார்கள்.
(மனுஸ்மிருதி 10ஆம் அத்தியாயம்--_44)

மனுஸ்மிருதியின்படி பாரதம் என்பது ஒரு சிறு பகுதி மட்டுமே. திராவிடம் போல, யவநம் போல, சகம் போல, தரதம் போல அது ஒரு தேசம். அப்படியிருக்க பல தேசங்களையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டு இந்தியா என்று பெயர் சூட்டப்பட்ட ஒரு நாட்டைப் பாரதம் என்பதும், அதை அகண்ட பாரதம் ஆக்குவோம் என்பதும், மனுஸ்மிருதிக்கும், உண்மைக்கும் எதிரானதல்லவா? சாஸ்திரத்திற்கு புறம்பான சாஸ்திரத்தில் சொல்லப்பட்டதற்கு எதிரான உண்மைக்கு மாறான ஒரு கொள்கையை அடையத் துடிப்பது அநியாயம் அல்லவா?

இதில், “பாரத மாதா’’ என்பதும், “பாரத மாதாஹி ஜே!’’ என்பதும், அதைச் சொல்லாதவர்கள் தேச விரோதிகள் என்பதும் இந்திய அரசியல் அமைப்பிற்கும், மனுஸ்மிருதிக்கும் எதிரானதல்லவா? எனவே, “பாரதம்’’ என்பவர்களும், “பாரத மாதா’’ என்பவர்களும், “பாரத மாதாஹி ஜே!’’ என்பவர்களுமே தேசத் துரோகிகள் என்றாகிறது!

மனுஸ்மிருதிபடி இதுதானே சரி! ஆக, பாரதம், அகண்ட பாரதம், பாரத மாதாஹி ஜே! என்பதெல்லாம் தேச விரோம், சாஸ்திர விரோதம் என்பது உறுதியாகிறது!


[][][]

Thursday, 24 March 2016

சந்திக்கு வந்த சாவர்க்கரின் தேசப்பற்று:





ஒருவரின் இழிசெயல்கள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்தாலும், எதைப் பற்றியும் அவர் அவமானம் கொள்வதே இல்லை என்று ஒரு பழமொழி உண்டு. வினாயக் ராம் சவார்க்கரைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆவணமும் அவரது ஏமாற்றுத்தனத்தை, அவரது மனதின் நச்சுத் தன்மை மற்றும் கொலை செய்வதில் அவருக்கு இருந்த தணியாத தாகம் ஆகியவற்றையே வெளிப் படுத்துகின்றன.

1966-இல் அவர் காலமானார். ஆனால் சவார்க்கர் இறந்ததற்கு அடுத்து ஆண்டில் 'காந்தியின் கொலையும் நானும்' என்ற தனது புத்தகத்தில் காந்தி கொலைக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நாதுராமின் சகோதரர் கோபால் கோட்சே, சவார்க்கரூக்கும் காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேயுக்கும் இடையே நிலவி வந்த நெருங்கிய உறவு பற்றிய செய்தியை வெளிப்படுத்தினார். மிகுந்த முயற்சியின் பேரில் காந்தி கொலை வழக்கு விசாரணையின் போது மறைக்கப்பட்டதாகும் இந்தச் செய்தி.

கொலை வழக்கில் அப்ரூவரான திகம்பர பாட்கேயின் சாட்சியம் நம்பத்தகுந்ததாக இருந்தபோதும், சவார்க்கர் செஷன்° நீதிபதியால் விடுவிக்கப்பட்டதன் காரணமே, திகம்பர பாட்கேயின் சாட்சியத்தை உறுதிப்படுத்த சட்டப்படித் தேவையான மற்றொரு தனிப்பட்ட சாட்சி இல்லை என்பதுதான். இத்தகவல் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜே.எல். கபூர் அவர்கள் 1970-ல் காந்தி கொலை பற்றி அளித்த அறிக்கையினால் வெளியாயிற்று. காந்தியைக் கொலை செய்ய சவார்க்கரும் அவரது கூட்டமும் ஒரு சதித்திட் டம் தீட்டி செயல்பட்டதைக் கண்டுபிடித்து அவர் கூறினார். சவார்க்கரின் மெய்க்காப்பாளர்களான அப்பா ராமச்சந்திரகாசரும், சவார்க்கரின் செயலாளர் கஜனன் விஷ்ணு தாம்லேயும் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கவில்லை.

சவார்க்கர் இறந்த பின்பே அவர்கள் உண்மைகளை நீதிபதி கபூரிடம் கொட்டி விட்டனர். இவை மட்டுமன்றி, வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்துக்கு வராத மேலும் பல சாட்சியங்கள், உண்மைகள் அவர் கைவசம் இருந்தன.அரசு ஆவணக் காப்பகச் செய்திகளின் அடிப் படையில் மத்திய அரசின் கல்வி அமைச்சகம் 1875-ல் ஒரு புத்தகத்தை வெளியிட்டது. அந்தமானில் இருந்த தீவாந்திரச் சிறைகள் என்பது அந்த நூலின் பெயர். மதவேறுபாட்டுக் கண்ணோட்டம் கொண்டவர் என்று புகழ் பெற்ற ஆர்.சி. மஜும்தார்தான் அதனை எழுதிய ஆசிரியர்.

ஆவணங்களில் இருந்த ஒவ்வொன்றையும் சவார்க்கருக்கு ஆதரவாகவே அவர் மிகைப்படுத்திக் காட்டினார். ஆனால் ஆவணங்களை மறைக்க மட்டும் அவரால் முடியவில்லை. அந்த ஆவணங்களே சவார்க்கரின் குட்டை முழுமையாக அம்பலப்படுத்திவிட்டன. மாபெரும் தேசபக்தர் என்று சங்பரிவாரத்தால் போற்றி வணங்கப்பட்ட சவார்க்கர் அன்றைய ஆங்கிலேய அரசுக்கு தன் வாழ்நாள் முழுவதிலும் எழுதிய மன்னிப்புக் கடிதங்கள், உறுதி மொழிக் கடிதங்கள் பலவற்றைப் பற்றிய செய்தி முதன் முதலாக வெளிப்பட்டது. இவ்வாறு அன்னிய ஆட்சியிடம் கருணையும் மன்னிப்பும் கோரிய ஒருவரையே சங்பரிவாரம் வழிபடும் முன்னோடியாகக் கருதியது.

இந்தியர்களின் கோரிக்கைகள் பால் அனுதாபமும் ஆதரவும் கொண்ட நாசிக் மாவட்ட ஆட்சியர் ஏ.டி.எம். ஜாக்சனின் கொலைக்காக சிறை தண்டனை வழங்கப்பட்ட சவார்க்கர் 1911-ல் அந்தமானுக்குக் கொண்டு வரப்பட்டார். கொலை செய்யச் சதித் திட்டம் தீட்டிய குற்றத்திற்காக மட்டுமே அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை இது. 1909-ல் நிகழ்ந்த இந்திய அலுவலகத்தின் கர்சான் வைலியின் கொலை, மும்பை தற்காலிக ஆளுநர் எர்ன°ட் ஹாட்சனை 1931-ல் கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி, 1948 ஜனவரி 30 அன்று செய்யப்பட்ட காந்தியின் கொலை ஆகிய மற்ற மூன்று கொலை வழக்குகளில் இருந்தும் அவர் தப்பித்துக் கொண்டார். ஆனால் இந்த வழக்கில் துப்பாக்கியைக் கையாண்டவன் வேறு யாரோ; ஆனால் கொலை செய்யத் தூண்டிவிட்டவர் சவார்க்கர்தான். 1911 முதல் 1950 வரை சவார்க்கர் அளித்த மன்னிப்புகள் மற்றும் உறுதிமொழிகளின் பட்டியல் ஒன்று இங்கே அளிக்கப்படுகிறது. இந்த வீர தீரச் செயலுக்காகத் தான் அவரது உருவப்படம் நாடாளுமன்ற மய்ய மண்டபத்தில், அவர் எவரைக் கொலை செய்யச் சதிசெய்து தூண்டினாரோ அந்த காந்தியின் படத்திற்கு எதிராக அவரது அரசியல் வாரிசுகளால் வைக்கப்பட்டது.

1.அந்தமான் சிறையில் சவார்க்கர் 1911 ஜுலை 4 அன்று அடைக்கப்பட்டார். ஆறுமாத காலத்திற்குள் அவர் தனது கருணை மனுவை சமர்ப்பித்தார்.

2. 1913 அக்டோபர் மாதத்தில் அந்தமான் சிறைக்குப் பார்வையிடச் சென்ற வைஸ்ராயின் நிர்வாகக் குழுவின் உள்துறை உறுப்பினரான சர் ரெஜினால்ட் கிராடக் மற்றவர்களுடன் சவார்க்கரையும் சந்தித்தார். கருணை வேண்டிய சவார்க்கரின் கோரிக்கை பற்றிய குறிப்பு அவரது 1913 நவம்பார் 14 நாளிட்ட குறிப்பில் பதிவாகியுள்ளது. “அரசு விரும்பும் எந்த நிலையிலும் பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன். அரசு என்னும் பெற்றோரிடம் அடைக்கலம் தேடுவதைத் தவிர வழிதவறிப் போன மகன் வேறு எங்கு புகலிடம் தேட இயலும்?” புரட்சிக்காரராகவும், தேசப் பற்றாளராகவும் கருதப்படும் சவார்க்கரின் கடித வாசகங்கள் இவை. சவார்க்கரின் மனு கருணை காட்டத் தகுந்தது என்று கிராடக் குறிப்பாகப் பதிவு செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து அனுப்பப்பட்ட மனுக்களிலும் இது போன்ற வாசங்களே நிரம்பியிருந்தன.

3. 1920 மார்ச் 22 அன்று ஆங்கிலேய சட்ட மன்றத்தில் சவார்க்கரின் ஆதரவாளான ஜி. எஸ். கோபார்டே முன் வைத்த கேள்வி இதுதான்: “தாங்கள் விடுதலை செய்யப்பட்டால், ராணுவத்தில் சேர்ந்து ஆங்கில சாமாராஜ்யத்துக்கு போரில் நாங்கள் சேவை செய்வோம் என்றும், சிர்திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின், அதனை வெற்றி பெறச் செய்வோம் என்றும், சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட உறுதுணையாக இருப்போம் என்றும் சவார்க்கரும் அவரது சகோதரரும் 1915 மற்றும் 1918ம் ஆண்டுகளில் மனுக்கள் அனுப்பியது உண்மை தானா?” உள்துறை அமைச்சர் சர் வில்லியம் வின் சென்ட் பதிலளித்தார்: இரண்டு மனுக்கள் ஒன்று 1914-லும் மற்றொன்று 1917-லும் வினாயக் தாமோதர் சவார்காரிடமிருந்து போர்ட் பிளேர் கண்காணிப்பாளர் மூலம் வந்து சேர்ந்தன. முந்தைய கடிதத்தில் அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கினால் போரின் போது அரசிற்கு எந்த நிலையிலும் சேவை செய்யத் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார். இரண்டாவது மனுவில் பின்னர் கூறப்பட்டது மட்டும் இருந்தது. வின்சென்ட் 1914 என்று குறிப்பிட்ட 1913-ல் ஒரு விண்ணப்பமும் 1917-ல் இன்னொரு விண்ணப்பமும் அனுப்பப்பட்டன.

4. முதன் முதலாக இங்கு வெளியிடப்பட்டுள்ள 1920 மார்ச் 30 நாளிட்ட ஆவணம் ஆசிரியர் தனது புத்தகத்தில் சொல்லத் தவறியதைத் தெரிவிக்கிறது. அது கோழைத்தனமானது. காலம் கடக்கும் முன் தனது வழக்கைக் கூற ஓர் இறுதி வாய்ப்பு அளிக்கும்படி அதில் சவார்க்கர் கெஞ்சிக் கேட்டிருந்தார். அய்ந்து மாதங்களுக்கு முன் சவார்க்கருக்கு ஏற்பட்ட வயிற்றுக் கடுப்பு நோய் குணமடைந்து விட்டது என்று வின்சென்ட் தெரிவித்தார். அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. அரவிந்த கோஷின் சகோதரர்கள் பாரின் மற்றும் இதரர்களின் வழக்குகளைக் குறிப்பிட்டு அவர் தன்னைத் தானே இழிவுபடுத்திக் கொண்டார். “ தீவிரமான சதித்திட்டம் ஒன்றிற்காக அவர்கள் போர்ட் பிளேரில் இருந்தார்களா என்றே அய்யப்பட வேண்டியுள்ளது.” என்று விசுவாசம் நிறைந்த சவார்க்கர் கூறினார். “இது போன்ற தீவிரவாத அமைப்பில் நம்பிக்கை கொண்டவனல்ல நான். குரேபாட்கின் அல்லது டால்ஸ்டாய் போன்றோரின் அமைதி நிறைந்த தத்துவரீதியிலான தீவிரவாதத்தைக் கூட ஏற்றுக் கொள்பவனல்ல நான். புரட்சி மனப்பான்மை கொண்ட எனது கடந்த காலத்தைப் பற்றி நான் கூறவருவது இதுதான்: மன்னிப்பைக் கோரி பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் இப்போது மட்டுமல்லாமல், 1914 மற்றும் 1918-ஆம் ஆண்டுகளிலும் கூட அரசமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்வேன் என்றும் திரு மாண்டேகு அத்தகைய சட்டம் ஒன்றை உருவாக்கத் தொடங்கியதும் நான் அதன் வழி நிற்பேன் என்றும் அரசுக்கு எனது கருத்துகளைத் தெரிவித்து கடிதங்கள் எழுதியுள்ளேன். அவரது சிர்திருத்தங்களும் மற்றும் அது பற்றிய பிரகடனமும் எனது கருத்துகளை உறுதிப்படுத்தின. ஒழுங்கு முறையிலான, அரசமைப்பு சட்டப்படியான முன்னேற்றத்திலும் நான் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அதற்கு ஆதரவாக நிற்க நான் தயாராக இருப்பதாகவும் சமீபத்தில் நான் வெளிப்படையாக சபதம் ஏற்றுள்ளேன்.”“அரசமைப்புச் சட்டப்படியான வழியைப் பின்பற்றி நடப்பது, ஆங்கில ஆட்சியின் கரங்களைப் பலப்படுத்தி, இருவருக்குமிடையே ஓர் அன்புப் பிணைப்பை உருவாக்கி, ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு வாழ்வதற்காக என்னால் இயன்ற அளவு பாடுபட முயல்வது என்னும் எனது திடமான நோக்கத்தை வெளிப் படுத்துவதில் நான் உண்மையானவனாக இருக்கிறேன். இந்தப் பிரகடனத்தின் மூலம் தனது பெருமையை வெளிப்படுத்திக் கொண்டுள்ள இந்த மாபெரும் ஆங்கிலப் பேரரசு எனது மனத்தை வென்று அதனை ஆதரிக்கச் செய்தது.” அவரது நாட்டுப் பற்றுக்கு இதனை விட வேறு சான்று வேண்டுமா ! இவ்வாறு சவார்க்கர் தன் கடிதத்தை முடிக்கிறார்: “அரசு நிர்ணயிக்கும் ஒரு குறிப்பிட்ட நியாயமான காலம் வரை அரசியலில் பங்கெடுத்துக் கொள்வதில்லை என்ற உறுதிமொழியை அளிக்க நானும் எனது சகோதரரும் விருப்பமுடன் தயாராக இருக்கிறோம். இதுவோ அல்லது வேறு எந்த ஒரு உறுதி மொழியோ எடுத்துக் காட்டாக, நாங்கள் விடுதலை செய்யப்பட்ட பின், ஒரு குறிப்பிட்ட மாகாணத்தில் இருப்பது அல்லது எங்களது நடவடிக்கை பற்றி காவல்துறைக்கு அவ்வப்போது தெரிவிப்பது என்பது போன்ற எந்த வகையான நிபந்தனைகளையும், அவை அரசின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் உண்மையான நோக்கம் கொண்டவை என்பதால், நானும் எனது சகோதரரும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறோம்.

5. 1995 ஏப்ரல் 7 அன்று ஃப்ரண்ட்லைனில் வெளியிடப்பட்டிருந்த அவரது 1924-ஆம் ஆண்டின் மன்னிப்புக் கடிதத்தில் அளிக்கப்பட்டிருந்த உறுதி மொழிகள் உள்ளிட்ட அனைத்திலும் இழவான வகையில் மன்னிப்பு கோருவது, எந்த வகையான நிபந்தனைகளுக்கும் உட்படுத்திக் கொள்வது என்ற ஒரு போக்கே காணப்படுகிறது.

6. காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப் படுவதைத் தவிர்க்க பம்பாய் காவல்துறை ஆணையருக்கு 1948 பிப்ரவரி 22 அன்று எழுதிய கடிதத்தில்: “அரசு விரும்பும் எந்த ஒரு காலம் வரையிலும் எந்த வித மத அல்லது அரசியல் செயல்பாடுகளிலும் நான் பங்கெடுத்துக் கொள்ளாமல் இருப்பேன்.”

7 . பம்பாய் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சாக்ளா மற்றும் நீதிபதி கஜேந்திரகட்கர் ஆகியோருக்கு 1950 ஜுலை 13 அன்று சவார்க்கர் எழுதியுள்ள கடிதத்தில்: “ஓராண்டு காலத்திற்கு எந்த ஒரு அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடாமல் பம்பாயில் உள்ள எனது வீட்டுக்குள்ளேயே இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார். இந்து மகா சபைத் தலைவர் பதவியில் இருந்து அவர் விலகினார். 1939 அக்டோபர் 9 அன்று வைஸ்ராய் லின்லித்கோ பிரபுவுக்கும் சவார்க்கருக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்பைப் பற்றி மர்ஜியா கசோலலி குறிப்பிடுகிறார்: இந்த தேசியவாதி அப்போது கூறுகிறார்: “இப்போது நம் இருவரது நோக்கங்களும் நலன்களும் ஒன்றாகவே உள்ளவை. இதனால் நாம் இருவரும் இணைந்தே செயலாற்ற வேண்டும்.” எவ்வாறு செயலாற்றவேண்டும்? காந்திக்கும் காங்கிரசுக்கும் எதிராகச் செயல்பட வேண்டும் என்ற கருத்தே இது என்பதில் எந்த வித அய்யமுமில்லை. (“1930-ஆம் ஆண்டுகளில் இந்துத்வாவின் அயல்நாட்டு ஒப்பந்தங்கள்” என்ற அவரது கட்டுரை 2000 ஜனவரி 22 எகனாமிக்ஸ்  அன்ட் பொலிடிகல் வீக்லி என்ற பத்திரிகையில் வெளிவந்துள்ளது.)

இது போன்ற சவார்க்கர் பற்றி வெளிவரும் தகவல்கள் அவரது வாரிசுகளையும் பெரும் கவலை கொள்ளச் செய்துள்ளது. பாபர் மசூதி இடிப்பதற்கு முன் 1992 டிசம்பர் 5 அன்று வாஜ்பேயி ஆற்றிய பேச்சு ஒன்று 2005 பிப்ரவரி 28 அவுட்லுக் இதழில் வெளியிடப்பட்டிருந்தது. அதே காலவாக்கில் வெளியிடப்பட்ட மலாய் கிருண்ஷ்ணதர் அவர்களின் ஓபன் சீக்ரட் (வெளிப்படையான ரகசியங்கள்) என்ற புத்தகம் பாபர் மசூதி இடிப்பில் அத்வானிக்கு உள்ள பங்கை வெளிப்படுத்துகிறது (பக்கம் 442௪43)இதுபோன்று ஒவ்வொரு ஆவணமும் வெளிச்சத்துக்கு வரும்போது, அவர்கள் அவமானத்தால் கூனிக் குறுகிப் போகிறவர்களாகவே இருக்க வேண்டும்.-

நன்றி: ஃப்ரண்ட் லைன் 8-4-2005தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.

Source: Unmaionline


[][][]

Monday, 21 March 2016

காவி பயங்கரவாதிகளுக்குத் தண்டனை எப்போது.? - கீ. வீரமணி


·          


மாலேகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப் பட்ட இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ்.காரர்களான ஜோஷி, லோகேஷ் சர்மா முதலிய பார்ப்பனர்கள் அதில் மட்டுமல்லாமல், அய்தராபாத்தின் மெக்கா மஜிஸ்த் ஆஜ்மீர் தர்கா குண்டுவெடிப்புகளிலும் சம்பந்தப்பட்டு, அதற்கு மேலும் குஜராத் கலவரத்தை திட்டமிட்டே அங்கே நிகழ்த்திவிட்டு, முஸ்லீம்கள்மீது பழியைப் போட்டு விட்டு செயலை மிகவும் பக்குவமாகச் செய்துள்ளார்கள்!

2002-ல் குஜராத்தில் நிகழ்ந்த சம்ஜுத்தா எக்ஸ்பிரஸ் கோத்ரா ரயில் எரிப்பில் 50 கரசேவகர்களைக் கொன்ற சதி நிகழ்விலும் இதே லோகேஷ் சர்மா, ஆர்.எஸ்.எஸ். முக்கியப் புள்ளியான ஜோஷியின் ஆணைப்படி அதிலும் கலந்து கொண்டு தனது பங்களிப்பைச் செலுத்திடத் தவறவில்லை என்ற திடுக்கிடும் தகவல் நேஷனல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி (ழிமிகி) மூலம் கிடைத்துள்ளதாக 13.1.2013 டைமஸ் ஆஃப் இந்தியா நாளேடு தெளிவாக வெளியிட்டுள்ளது.

டில்லி பாலியல் வன்கொடுமைக்கு உடன் தீர்ப்பு வர வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

மும்பை ஹோட்டலில் பாக். தீவிரவாதிகள் நடத்திய திட்டமிட்ட, உடனே தூக்கில் போட வேண்டும் என்பவர்கள், நாடாளுமன்றக் கட்டடம் தாக்கப்பட்ட வழக்கில் பிடிபட்டவர்கள் - கசாப்புகள் போன்றவர்கள் உடனே தண்டனையை நிறைவேற்றுங்கள் என்று துள்ளிக் குதிக்கும் பா.ஜ.க., மற்றும் வலது சாரி தீவிரவாதிகள் - இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ். படைகள் இந்த மாதிரி வழக்குகளில் சிக்கியவர்கள்மீது ஏன் நீதி விசாரணை - வழக்குகள் - நத்தை வேகத்தில் நகர வேண்டும்?

பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமான குற்றவாளிகளான பிரபல ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., முன்னணித் தலைவர்கள் குற்றப் பத்திரிக்கையில் இடம் பெற்று வழக்கு - விசாரணை ஜவ்வு மிட்டாய் மாதிரி ஏன் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆக வேண்டும்? வெள்ளி விழா வரட்டும் என்று மத்திய அரசு காத்திருக்கிறதோ என்ற கேள்வி பொதுநல ஆர்வலர்களிடமிருந்து நீண்ட காலமாகவே கிளம்பி நிலை கொண்டு, இன்னமும் விடை கிடைக்காதவைகளாக இருக்கிறது.

தீவிரவாதம் என்றாலே இஸ்லாமி யர்கள்தான் என்பது போன்ற ஒரு படத்தை நாடு முழுவதும் ஊடகங்களும், இத்தகைய மதவெறி அரசியல்வாதிகளும் வரைந்து காட்டுவதில் பெரு வெற்றி அடைந் துள்ளார்கள்.

மத்தியில் உள்ள அதிகார வர்க்கம் முழுக்க இதில் காவி உணர்வு கொண்ட உயர் ஜாதியினராகவே உள்ளதால், காவல்துறை, விசாரணைத் துறையில் முன்பிருந்த பா.ஜ.க. ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்ட தங்கள் ஆதரவு, அனுதாபங் கொண்ட பலரும், அதே போல நீதித்துறையில் அந்த ஆட்சி பருவத்தில் இடம் பெற்றவர்களும், தற்போதுள்ள ஆட்சியின் கீழ் பணிபுரியும் பல உயர் அதிகாரிகள் நீதித்துறையில் உள்ளோரும், ஒரு வேளை அடுத்து அவர்கள் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வது என்று மனதிற்குள் கணக்குப் போட்டு, செயலை மந்தப்படுத்துவதும் தான் இந்த மெத்தனத்திற்கு முக்கியக் காரணங் களாக இருக்க வேண்டும்!

நீதி வழங்குவதில், குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்தி தண்டனை வழங்குவதில் ஏன் இரட்டை மனப்பான்மையான ஜாதிய மனுதர்மப் பார்வை இருக்க வேண்டும்?

தாங்களே முன்னின்று கலவரங்கள், தீ வைப்புகள், மக்களை அழிக்க வெடிகுண்டு களை நட்டு வைத்து வெடிக்கச் செய்து, பழியை பிற மக்கள்மீது போட்டு, மதக் கலவரங்களைத் தூண்டுவதில் மிகப் பெரிய தேசியக் குற்றம் - சமூக விரோத நடவடிக்கை வேறு உண்டா?

எனவே மத்திய அரசின் உள்துறை இந்த வழக்குகளை விரைந்து நடத்தி குற்றம் புரிந்தோரைத் தண்டிக்க ஆவன செய்ய உடனே முன்வர வேண்டும். ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவா அமைப்புகள் இந்து பயங்கரவாதத்தினை முன்னிறுத்தி நடத்துவதாகவும், அதற்காக பயிற்சிகள் அளிப்பதாகவும் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அவர்கள் கூறியிருப்பதை எதிர்த்து பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் வானத்திற்கும் பூமிக்குமாக குதித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்; அதற்கு அவர் மன்னிப்புக் கோர வேண்டும்; இல்லையேல் கடந்த 24ஆம் தேதி கிளர்ச்சி, கண்டன ஆர்ப்பாட்டம் செய்து ஷிண்டே பதவி விலக வேண்டும் என்றும் உடனே ஆர்ப்பரித்துள்ளனர்!

அவர் ஏதோ ஆதாரமில்லாமல் பேசியதைப் போல ஊடகங்கள் உயர்ஜாதி, பார்ப்பன, ஹிந்துத்வாவாதிகளின் ஆயுதங்களாக இருப்பதால், இதற்காக ஓங்காரக் கூச்சல் இடுகின்றனர்!

தங்களை சுத்த சுயம் பிரகாசிகளாகக் காட்டிக் கொள்ளும் இந்த வீராதி வீரர்கள், நமது சில கேள்விகளுக்கு விடை கூறட்டும்!

1. மாலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் எல்லாம் லேபிளை மாற்றிக் கொண்ட ஹிந்துத்துவா வாதிகள் அல்லாமல் வேறு யார்?

இந்திய இராணுவத்தில் ஊடுருவி, அங்குள்ள RDX என்ற சக்தி வாய்ந்த வெடி மருந்து, பொருள்களைக் கடத்தி, பயிற்சி தந்து பிறகு சிக்கிக் கொண்டு, சிறைவாசம் அனுபவிப்பதோடு, காவி அணிந்த சந்நியாசி வேடம் தரித்து தாங்கள் செய்த வன்முறைகளை - இஸ்லாமியர்கள் மீது பழி போட்டவர்கள் இவர்களைத் தவிர வேறு யார்?

2. அண்மையில் வெளியான செய்தியில் இவர்களின் முக்கிய புள்ளியான ஒருவர்தான் (உயர்ஜாதி பார்ப்பனர் அவர்) குஜராத் சம்ஜுத்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ வைத்து கொளுத்தியது (கோத்ரா ரயில் எரிப்பு) அய்தராபாத் குண்டு வெடிப்பு ஆகிய எல்லாவற்றுக்கும் சூத்திரதாரிகளாக இருந்தனர் என்ற செய்தி சென்ற வாரம் வரவேயில்லையா? (டைம்ஸ் ஆஃப் இந்தியா 13.1.2013).

புலன் விசாரணை செய்த ஆய்வு நிறுவனம் இச்செய்தியை வெளியிட்டு ஏடுகளில் வெளி வந்துள்ளதே!

3.பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளின் பட்டியலில் இவர்கள் அமைப்பினர் சம்பந்தப்பட்டுள்ளார்களா - இல்லையா?

4. அந்நாள் உ.பி. முதல் அமைச்சர் கல்யாண் சிங் தந்த ஒரு பேட்டியில், இவர்களை நம்பித்தான் நான் உத்தரவாதம் அளித்தேன்; ஆனால் இவர்கள் இடித்து தரைமட்டமாக்கி என்னை குற்றம் புரிந்தவர்கள் பட்டியலில் இடம் பெற வைத்தனர் என்று மனம் நொந்து கூறவில்லையா? அந்த இடிப்பின் எதிர்வினையாகத் தானே நாட்டில் 3000, 4000 பேர்கள் கொல்லப்பட்டதும், ரத்த ஆறு ஓடியதுமான கோரத் தாண்டவம்! இது நடைபெற்றதற்கு மூல காரணம் யார்? தென்காசியில் சொந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு - இந்து முன்னணியினர் ஒருவரைக் கொன்று, அதை முஸ்லீம்கள்மேல் பழி போட்டு, மதக் கலவரம் ஏற்பட்டு மோதல்களுக்குப்பிறகு, இவர்களே நடத்திய நாடகம் என்ற உண்மை ஒப்புதல் வாக்குமூலம் வரவில்லையா?

5. தேசப்பிதா காந்தியாரை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு பயிற்சிக்கூடம் ஆர்.எஸ்.எஸ். என்பதும், அவர் சம்பவத்திற்குமுன் விலகியிருந்தார் என்பது புறத்தோற்றம் அல்லவா! அதனை மறுத்த நிலையில், அவரது தம்பி கோபால் கோட்சே - பூனாவில் தனது அண்ணன் நாதுராம் விநாயக் கோட்சே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்தவர் என்பதை ஏன் இவர்கள் மறைக்கிறார்கள் என்று பிரண்ட் லைன் ஆங்கில ஏட்டிற்குப் பேட்டி அளித்த போது சொல்லவில்லையா?

6. ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் போல இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு வேறு உண்டா?

7. டெல்லியில் பச்சைத் தமிழர், அ.இ.காங்கிரஸ் தலைவர் காமராஜரை பட்டப் பகலில் அவர் வீட்டிற்குத் தீ வைத்து உயிருடன் கொளுத்த முயன்றவர்கள் ஹிந்துத்துவா தீவிரவாதிகளும், நிர்வாண சாமியார்களும், ஆன (பசுவதைத் தடுப்புப் போராட்டம் என்ற பெயரில்) இந்துத்துவா தீவிரவாதிகள் அல்லாமல் வேறு யார்?

8. டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த அன்றைய முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களை நேரில் சந்தித்து, விவாதித்துக் கொண்டு இருக்கையில் கையை முறுக்கி வன்முறையில், ஈடுபட்டு பிறகு விரட்டப்பட்டவர் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அல்லவா?

உண்மையை ஊடகங்களின் ஓங்காரச் கூச்சல் மூலமாக, மறைத்துவிட முடியாது.

திரு. ஷிண்டே அவர்கள் உள்துறை அமைச்சர்; ஆதாரங்கள் இல்லாமலா அவர் பேசுவார்? நடைபெற்ற நிகழ்வுகள் எதைக் காட்டுகின்றன? ஹிந்துத்துவா பேசுவோர்தானே! வழக்கு நீதிமன்றத்தில் மாலேகான் குண்டுவெடிப்பு சம்பந்தமாக நடக்கும் நிலையில் இதுபற்றி உள்துறை அமைச்சர் பேசலாமா? என்ற அருள் உபதேசம் செய்கிறது ஆர்.எஸ்.எஸ்.காரரை - உணர்வாளரை ஆசிரியராகக் கொண்டுள்ள தினமணி நாளேடு?

என்னே திடீர் ஞானோதயம்! ஏன் இதே வாதம் 2ஜி வழக்கு உச்சநீதிமன்றத்திலும், டில்லி தனி நீதிமன்றத்திலும் நடைபெற்று வருகிற நிலையில் இவர்கள் எவ்வளவு எழுதினார்கள் - பேசினார்கள் - விமர்சித்தார்கள்? பேசு நா இரண்டுடையாய் போற்றி போற்றி என்ற அண்ணாவின் ஆரிய மாயை வரிகள்தான் இவர்களைப்பற்றி நம் நினைக்கு வருகிறது.

மாண்புமிகு ஷிண்டே அவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர் உள்துறை அமைச்சராக இருப்பது என்பது பார்ப்பன உயர் ஜாதி வர்க்கத்திற்கு உறுத்தலாகத் தானே இருக்கும்; அதற்காகத்தான் இந்தப் பதவி விலகல் கூச்சல் போலும்!

ஷிண்டேவின் கருத்துகண்டு இப்படிக் கூறுவது எதைக் காட்டுகிறது? நடுநிலையாளர்கள் ஆழ்ந்து சிந்திக்கட்டும்!

- கி.வீரமணி, 

ஆசிரியர்.







குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸ்.தொடர்பு

உறுதி செய்கிறார் உள்துறைச் செயலாளர்



பயங்கரவாதத் தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக, மத்திய உள் துறை செயலாளர் ஆர்.கே.சிங் ஜனவரி 22 அன்று அறிவித்துள்ளார். சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா ஷரீப் பில் நடந்த பயங்கரவாத குண்டு வெடிப்பு தாக்கு தல்களில், குறைந்தபட் சம் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 10 பேர் ஈடுபட்ட தற்கான ஆதாரங்கள் உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த சுனில் ஜோஷிக்கு (இவர் இப் போது உயிருடன் இல்லை) சம்ஜெதா ரயில் குண்டு வெடிப்பு மற்றும் அஜ் மீர் ஷெரீப் தர்கா குண்டுவெடிப்பில் தொடர்புள்ளது.இவர் 1990 முதல் 2003 வரை மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பணிகளை மேற்கொண்டவர். சந்தீப் தாங்கே என்பவருக்கு (தலைமறைவாக உள்ளார்) சம்ஜெதா, மெக்கா மசூதி, அஜ்மீர் ஷெரீப் தர்கா குண்டு வெடிப்பில் தொடர்புள்ளது. இவர் இந்தூர் உள் ளிட்ட பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராகச் செயல்பட்டவர். அதே போன்று லோகேஷ் சர்மா, சுவாமி அசீமானந்த், ராஜேந்தர் என்ற சமுந்தர், முகேஷ் வாசனி, தேவேந்தர் குப்தா, சந்திரசேகர், கமல் செகான், ராம்ஜி கல்சங்ரா ஆகியோருக்கு இந்த மூன்று குண்டு வெடிப்பு சம்பவங்களிலோ அல்லது ஏதாவதொன்றிலோ தொடர்புள்ளது. இவர்களில் ராம்ஜியை தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார் ஆர்.கே. சிங்.





[][][]

Wednesday, 16 March 2016

சாதி மயிர் -கவிதை



சாதி மயிர்
____________


வெட்டியவனும் இந்து
வெட்டுப்பட்டவனும் இந்து...
"அதானாலென்ன
வாயை மூடிக்கொள்
நாமெல்லாம் ஒரே மதம்".

வெட்டியவனும் தமிழன்
வெட்டுப்பட்டவனும் தமிழன்...
"அதனாலென்ன
கண்ணை மூடிக்கொள்
நாமெல்லாம் ஒரே இனம்".

இஸ்லாமியனுக்கு எதிராய்
தீக்கொளுத்த வேண்டுமா?
வெட்டியவனையும்
வெட்டுப்பட்டவனையும்
ஒன்றாய் உசுப்பி விடு ...
"இந்துவே எழுந்துவா".

தெலுங்கனுக்கு எதிராய்
கொம்புசீவ வேண்டுமா?
வெட்டியவனையும்
வெட்டுப்பட்டவனையும்
ஒன்றாய் சீண்டி விடு ...
"தமிழனமே பொங்கி எழு".

உசுப்பேற்றும் போது
"இந்துவாக இரு"
சீண்டிவிடும் போது
"தமிழனாய் இரு"
மற்ற நேரம்
"சேரியில் இரு".

இந்துவோடு இந்துவாய்
கலக்கலாம் என்கிறாய்...
தமிழனோடு தமிழனாய்
கலக்கலாம் என்கிறாய்...
மனிதரோடு மனிதராய்
கலந்து வாழ்ந்தால்
அரிவாள் எடுக்கிறாய்.

'ஆண்ட பரம்பரைகளின்'
சாதி மயிர்
ஆண்குறியில்தான்
இருக்குமென்றால்
வெட்ட வேண்டியது
தலையை அல்ல...
மயிரை.

---தோழர் வெண்புறா சரவணன்

Tuesday, 15 March 2016

மனுதரும சாத்திரம்



மனு தர்ம சாத்திரம் (சமசுகிருதம்:मनुस्मृति, மனுஸ்மிருதி)இந்துக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள், அற ஒழுக்க விதிமுறைகளை ஒழுங்குபடுத்திக் கூறும் நூல் ஆகும். இதனை சுவாயம்பு (மனு) எனும் பண்டைய வேத கால முனிவர் தொகுத்தார். இது 2685 செய்யுட்களாகவும், 3 பகுதிகளாகவும், 12 அத்தியாயங்களாகவும் அமைந்துள்ளது. இந்நூலை முதலில் கல்கத்தா உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் சர்.வில்லியம் ஜோன்ஸ் என்பார் 1794ல் சமசுகிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். தமிழில் திருலோக சீதாராம் என்பார் மொழி பெயர்த்துள்ளார். தனி மனித மற்றும் சமுதாய வாழ்க்கையை நெறிப்படுத்திக் கூறும் ஒரு சட்டக்கோவையாக இது. இந்தியாவில் நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வந்தது. மனுநீதிச் சோழன்இதனை முழுமையாகப் பின்பற்றி ஆட்சி செய்ததாக போற்றப்படுகிறான். இந்து தத்துவத்தினுள் சாதியம் சார்ந்த கருத்துக்களை வலியுறுத்தும் மேட்டுக்குடியினரின் உத்தியாக இதனை விமர்சிப்பவர்களும் உள்ளனர்.

இந்நூலுக்கு மானவ தர்மம்(சமசுகிருதம்:मानवधर्मशास्त्र) என்ற பெயரும் உள்ளது. அதற்கு மானுட அறம் என்று பொருளாகும்.


மனுவின் காலமும் வாழ்ந்த பகுதியும்.

மனு வாழ்ந்த காலம் கி.மு 1500 என்பதை சதபத பிராமணத்திலும், சொராஷ்ட்டிர மத வேதநூலானஜெண்ட் அவஸ்தாவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.[சான்று தேவை] ரிக் வேத கால நதிகளான சரசுவதி மற்றும் திருட்டாதுவதி நதிக்கரை பகுதிகளான பிரம்மவர்த்த பகுதிகள் [இன்றைய வடக்கு இராசபுதனம் மற்றும் தெற்கு அரியானா] பெருமழையால் அழிந்த பின்பு ஆரியர்கள்,விந்தியமலைக்கு வடக்கு பகுதிகளில் [தற்கால நேபாளம், உத்தர பிரதேசம்,பிகார்,மத்திய பிரதேசம்,வங்காளம், குசராத் மற்றும் கிழக்கு இராசபுதனம்] குடியேறினர். அப்பகுதி பின்பு ஆரிய வர்த்தம் எனற பெயரால் அழைக்கப்பெற்றது.அப்போது மற்ற முனிவர்கள் சுவாயம்பு மனுவையும் அணுகி இயற்கைச் சீற்றங்களை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் சமூக வாழ்க்கை நெறி முறைகளை எவ்வாறு மக்கள் வகுத்து கொண்டு வாழ்வது என்று கேட்டதற்கு, மாமுனி மனு வகுத்து கொடுத்ததே மனுஸ்மிருதி என்று நம்பப்படுகிறது.
சிறப்பம்சங்கள்.

"மநு தர்ம சாஸ்திரம்" என்பது நமது மதத்திற்கே ஆதாரமாக கையாண்டு வருவதும், நடைமுறையில் அநுஷ்டிக்கப்பட்டு வருவதும், அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கிற சிவில் கிரிமினல் சட்டதிட்டங் களால் அநுசரிக்கப்பட்டதுமாகும். இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் இந்திய குடியுரிமை சட்டங்கள் இயற்றுவதற்கு முன்பு இந்தியாவை ஆண்ட இசுலாமியர்களும் பிரித்தாணியர்களும் இந்து மக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளிலும், குடி உரிமை வழக்குகளிலும் மனு தரும சாத்திரத்தின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கினர். மேலும் இந்நூலை பின்பற்றி சந்திரகுப்த மௌரியரின் தலைமை அமைச்சர்கௌடில்யர் என்ற சாணக்கியர் படைத்த அர்த்த சாஸ்திரம் என்ற அரசு நிர்வாகம் தொடர்பான நூலை எழுதி புகழ் பெற்றார்.
தாக்கங்கள்.

மனு தர்ம சாத்திரத்தின் தாக்கம் இந்தியா முழுவதும் காணக்கிடைக்கிறது. வருண மற்றும் சாதிப் பாகுப்பாடுகளின் மூல கருத்தாவாக மனுதர்மம் கருதப்படுகிறது.

தந்தைபெரியார் - “குடி அரசு” கட்டுரை 10.03.1935 இல் பின்வருமாறு மநு தர்ம சாஸ்திரத்தை விளக்குகிறார்....

1. "பிராமண குலத்தில் பிறந்தவன் ஆசாரமில்லாதவனாயினும், அவன் நீதி செலுத்தலாம். சூத்திரன் ஒரு போதும் நீதி செலுத்தலாகாது" அத்தியாயம் 8. சுலோகம் 20.

2. "சூத்திரர் நிறைந்த தேசம் எப்பொழுதும் வறுமை யுடையதாயிருக்கும்" அ.8. சு.22.

3. "சூத்திரனாகவும், மிலேச்சனாகவும், பன்றியாகவும் பிறப்பது தமோ குணத்தின் கதி" அ.8.சு. 22.

4. "ஸ்தீரிகள் புணர்ச்சி விஷயத்திலும், பிராமணரைக் காப்பாற்றும் விஷயத்திலும் பொய் சொன்னால் குற்றமில்லை" அ.8. சு.112.

5. "நீதி ஸ்தலங்களில் பிரமாணம் செய்ய வேண்டிய பிராமணனை சத்தியமாகச் சொல்லுகிறேன் என்று சொல்ல செய்ய வேண்டும். பிரமாணம் செய்ய வேண்டிய சூத்திரனை பழுக்கக் காய்ச்சின மழுவை எடுக்கச் சொல்ல வேண்டும்; அல்லது தண்ணீரில் அமிழ்த்த வேண்டும். சூத்திரனுக்கு கை வேகாமலும், தண்ணீரில் அமிழ்த்தியதால் உயிர் போகாமலும் இருந்தால் அவன் சொன்னது சத்தியம் என உணர வேண்டும்" அ. 8. சு. 113115.

6. "சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கையறுக்க வேண்டும்" அ.8. சு. 270.

7. "சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவைகளை சொல்லித் திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும்" அ.8. சு.271.

8. "பிராமணனைப் பார்த்து, "நீ இதைச் செய்ய வேண்டும், என்று சொல்லுகிற சூத்திரன் வாயிலும் காதிலும் எண்ணெயைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்" அ.8. சு.272.

9. "சூத்திரன் பிராமணனுடன் ஒரே ஆசனத்திலுட்கார்ந்தால் அவனது இடுப்பில் சூடு போட்டாவது அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது அறுத்தாவது ஊரை விட்டுத் துரத்த வேண்டும்" அ.8. சு.281.

10. "பிராமணனைக் காப்பாற்றும் பொருட்டு பிராமணரல்லாதாரைக் கொன்றவனுக்கு பாவமில்லை" அ.8. சு.349.

11. "சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால் அவனது உயிர்ப் போகும் வரையும் தண்டிக்க வேண்டும்."

"பிராமணன் கொலைக் குற்றம் செய்தாலும் அவனைக் கொல்லாமலும், எத்தகைய தண்டனைக்கும் ஆளாக்காமலும் பொருளைக் கொடுத்து அனுப்பிவிடவேண்டும்." அ.8. சு.380.

12. "அரசன் சூத்திரனை பிராமணர் முதலிய உயர்ந்த சாதிக்கு பணி விடை செய்யும்படி கட்டளையிட வேண்டும். சூத்திரன் மறுத்தால் அவனைத் தண்டிக்க வேண்டும்." அ. 8. சு.410.

13. "பிராமணன் கூலி கொடாமலே சூத்திரனிடம் வேலை வாங்கலாம்; ஏனென்றால் பிராமணனுக்குத் தொண்டு செய்யவே கடவுளால் சூத்திரன் படைக்கப் பட்டிருக்கிறான்" அ. 8. சு.413.

14. "பிராமணன் சந்தேகமின்றி சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்றலாம். ஏனென்றால் அடிமையாகிய சூத்திரன் எவ்விதப் பொருளுக்கும் உடையவனாக மாட்டான்" அ. 8. சு.417.

15. "சூத்திரன் பொருள் சம்பாதித்தால், அது அவனுடைய எஜமானனாகிய பிராமணனுக்குச் சேர வேண்டுமேயன்றி சம்பாதித்தவனுக்குச் சேராது" அ. 9. சு.416.

16. "பிராமணனால் சூத்திர ஸ்திரீக்கு பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்கு தந்தை சொத்தில் பங்கில்லை" அ. 8. சு.155.

17. "பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனை சித்தரவதை செய்து கொல்ல வேண்டும். ஆனால் சூத்திரனுடைய பொருளை பிராமணன் தம் இஷ்டப்படி கொள்ளையிடலாம்." அ.9. சு.248.

18. "பிராமணன் மூடனானாலும் அவனே மேலானதெய்வம்" அ. 9. சு. 317.

19. "பிராமணர்கள் இழி தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் பூஜிக்கத்தக்கவர்கள் ஆவர்கள்." அ. 9. சு.319.

20. "பிராமணனிடமிருந்து சத்திரியன் உண்டானவனாதலால் அவன் பிராமணனுக்கு துன்பஞ் செய்தால் அவனை சூன்னியம் செய்து ஒழிக்க வேண்டும்." அ.9 சு. 320.

21. "சூத்திரனுக்கு பிராமணப் பணி விடை ஒன்றே பயன் தருவதாகும். அவன் பிராமணனில்லாதவிடத்தில் க்ஷத்திரியனுக்கும், க்ஷத்திரியனில்லா விடத்தில் வைசியனுக்கும் தொண்டு செய்ய வேண்டும். அதிகமான செல்வமும், பசுக்களும் வைத்திருக்கிறவன், பிராமணன் கேட்டுக் கொடுக்காவிட்டால், களவு செய்தாவது, பலாத்காரம் செய்தாவது அவற்றை பிராமணன் எடுத்துக் கொள்ள உரிமையுண்டு." அ.11. சு.12.

22. "சூத்திரன் வீட்டிலிருந்து கேளாமலும் யோசிக்காமலும் தேவையான பொருளைப் பிராமணன் பலாத்காரத்தினால் கொள்ளையிடலாம்." அ.11. சு.13.

23. "யோக்கியமான அரசன் இவ்விதம் திருடிய பிராமணனைக் தண்டிக்கக் கூடாது." அ.11. சு.20.

24. "பெண்களையும் சூத்திரரையும் கொல்லுவது மிகவும் குறைந்த பாவமாகும்." அ.11. சு.66.

25. "ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் ஏதோ, அதைத்தான் சூத்திரனைக் கொன்றாலும் செய்ய வேண்டும்." அ.11. சு.131.

25(அ). "அதுவும் முடியாவிடில் வருண மந்திரத்தை 3 நாள் ஜெபித்தால் போதுமானது." அ.11. சு.132.

26. "க்ஷத்திரியன் இந் நூலில் (மநுதர்ம சாஸ்திரத்தில்) சொல்லப்பட்டபடி ராஜ்யபாரம் பண்ணுவதே தவமாகும். சூத்திரன் பிராமண பணி விடை செய்வதே தவமாகும்." அ.11 சு.285.

27. "சூத்திரன் பிராமணனுடைய தொழிலைச் செய்தாலும் சூத்திரனே யாவன். பிராமணன் சூத்திரனுடைய தொழிலைச் செய்யின் பிராமணனேயாவன். ஏனெனில் கடவுள் அப்படியே நிச்சயம் செய்துவிட்டார்." அ.10. சு.75.

28. "பிராமணரல்லாதவன் உயர்குலத்தோருடைய தொழிலைச் செய்தால் அரசன் அவனது பொருள் முழுவதையும் பிடுங்கிக் கொண்டு அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும்." அ.10. சு.96.

29. "சூத்திரன் இம்மைக்கும், மோட்சத்திற்கும் பிராமணனையே தொழ வேண்டும்." அ.10. சு.96.

30. "பிராமணன் உண்டு மிகுந்த எச்சில் ஆகாரமும், உடுத்திக் கிழிந்த ஆடையும், கெட்டுப் போன தானியமும், சூத்திரனுடைய ஜீவனத்துக்கு கொடுக்கப்படும்." அ.10. சு.125.

31. "சூத்திரன் எவ்வளவு திறமையுடையவனாகயிருந்தாலும் கண்டிப்பாய் பொருள் சேர்க்கக் கூடாது. சூத்திரனைப் பொருள் சேர்க்கவிட்டால் அது பிராமணனுக்கு துன்பமாய் முடியும்." அ.10. சு.129.

32. "மனுவால் எந்த வருணத்தாருக்கு இந்த மனுதர்ம சாஸ்திரத்தால் என்ன தர்மம் விதிக்கப்பட்டதோ, அதுவே வேத சம்மதமாகும். ஏனென்றால், அவர் வேதங்களை நன்றாய் உணர்ந்தவர்." அ.2. சு.7.

இன்னும் இதைப் போன்று ஆயிரக்கணக்கான அநீதியானதும், ஒரு சாராருக்கு நன்மையும், மறுசாரருக்குக் கொடுமையும் செய்வதுமான விதிகள் மனுதர்மத்தில் நிறைந்திருக்கின்றன. சுருங்கச் சொல்லுங்கால் "பிராமணன்" என்ற வகுப்பாரைத் தவிர, வேறு எந்த வகுப்பாருக்கும் அதில் யாதொரு நன்மையும் இல்லை என்றே கூறலாம். ஆகையால் தோழர்களே! இந்நூலை "மனுதர்மம்" என்று கூறுவதா? அல்லது "மனு அதர்மம்" என்று கூறுவதா? சற்று யோஜித்து முடிவு செய்யுங்கள்.

உள்ளடக்கம்

பரம் பொருளாகிய பகவான் தமது விருப்பத்தின் காரணமாக பிரம்மா மூலம் அண்ட சராசரங்களை படைத்தார்.மனித குலத்தை பெருக்கவே மரிசி, ஆங்கிரசர், அத்திரி, புலத்தியர், புலகர், கிருது, பிரசேதகர், வசிட்டன், பிருகு மற்றும் நாரதர் எனும் பத்து பிரசாபதிகளை படைத்தார். இந்த பிரசாபதிகள் மூலம் சுவாயம்பு மனு உட்பட எழு மனுக்களும், தேவர்கள், சுவர்க்கலோகம், மாமுனிகள், யட்சர்கள், காந்தர்வர்கள், கிண்ணரர்கள், கிம்புருடர்கள், அசுவனிகுமாரர்கள், அட்டதிக்கு பாலகர்கள், அசுரர்கள், அப்சரசுகள், மருத்துக்கள், இராக்கதர்கள், பைசாசர்கள், நாகர்கள், கருடர்கள், சர்ப்பங்கள், பிதுர்கள், தாவரங்கள், விலங்கினங்கள், நீர் வாழ் பிராணிகள் தோன்றின. பின்னர் மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க சமூகம் கட்டுக்கோப்பாக இயங்க வர்ண மற்றும் ஆசிரம தருமங்களை மனு வகுத்து கொடுத்தார். இது ஆசாரப்பகுதி, விவகாரப்பகுதி, பிராயச்சித்தப் பகுதி என மூன்று பகுதிகளையும் 12 அத்தியாங்களையும் கொண்டது.

1வது அத்தியாயம்

உலகத் தோற்றம்:-அண்ட சராசரங்களின் தோற்றம், தேவர்கள்,மானிடர்கள், அசுரர்கள், தோற்றம் , காலக்கணக்கீடு, நால்வகை வர்ண சமூகம், நால்வகை ஆசிரமம் மற்றும் அதன் கடமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றி விவரிக்கிறது.

2வது அத்தியாயம்

பிரம்மச்சர்யம்:- பூணுல் அணிதல் (உபநயனம்), குருபக்தி, வேதம் படித்தல், வழிபாட்டு முறைகள் மற்றும் குருகுல நிலை பற்றி விவரிக்கிறது.

3-5 அத்தியாயங்கள்

அந்தணர் தருமம்:-இல்லறத்தின் மேன்மைகள், திருமண உறவுகள், யக்ஞம், விருந்தோம்பல், பலியிடுதல், இறந்த முன்னேர்களுக்கு செய்ய வேண்டிய பிதுர் கடன்கள், தகாத உறவுகள், கலப்புத் திருமணங்கள், விலக்க வேண்டியவைகள், வேதம் ஒதுதல், ஒதுவித்தல், ஒழுக்க நெறிகள்,உணவு முறைகள், தூய்மை, பெண்டிர் தொடர்பான விதிகள், உண்ணத்தக்கவை, தகாதவைகள், விசேட காலங்களில் புலால் உண்ணல், பிறப்பு-இறப்பு தீட்டு விதிகள், பெண்களுக்கு உகந்தவைகளும், விலக்கத்தக்கவைகளும் தொடர்பான விதிகள்.

6வது அத்தியாயம்

வானப்பிரத்தம் & துறவறம்:-காட்டில் வாழ்தல், உணவு முறைகள் ,ஒழுக்க விதிகள், செபம்,தவம் செய்தல்,வேத வேதாந்த விசாரம் செய்தல் தொடர்பான விதி முறைகள்.

7வது அத்தியாயம்

சத்திரிய தருமம்:-மன்னர்களின் மாண்புகள் & பண்புகள், கடமைகளும் பொறுப்புகளும்,அரசின் நீதிநெறி சட்டங்கள்,அரசியல் சிந்தனைகள்,அரசின் அதிகாரிகள்,தலைநகரம்,போர் அறம்,உள்நாட்டு நிர்வாகம்,வரி விதித்தல்,பகை அரசர்களின் பலம் பலவீனம் அறிதல்,பகை நாட்டை முற்றுகையிடல்,போர் செய்யும் முறைகள்,வெற்றி வாகை சூடல்,புலவர்களுக்கு பரிசு வழுங்குதல்,வேதம் அறிந்த அந்தனர்களுக்கு தானம் வ்ழங்குதல்,வேள்விகள் செய்தல்,சமூகத்தில் வர்ணாசிரம தரும நெறிகள் காத்தல் பற்றி விவரிக்கிறது.

8வது அத்தியாயம்

நீதிநெறிசட்டங்கள்:-குடிவகுப்பு, நீதிமன்றம், உடைமைகள், புதையல், களவுகள், கடன்கள், வட்டி, கொதுவை, காப்பு பொருள், பொருள் விற்பனை, பொருள் விற்பனை விலை நிர்ணயம்,அடிதடி கலவரம், பலாத்காரம், நிலத்தகராறு, நட்ட ஈடு,மான-நட்ட ஈடு, உடன்படிக்கைகள், நம்பிக்கை துரோகம், செய்கூலி, கலப்படம் தகாத செயல்கள் பற்றி விவரிக்கிறது.

பாலியல் பலாத்காரம் என்று அழைக்கக் கூடிய ஒரு குற்றத்தை ஒருவன் செய்தால் அவன் எந்த வருணத்தைச் (சாதி) சேர்ந்தவன் என்ற அடிப்படையிலேயே அவனுக்கு அளிக்கப்பட வேண்டிய தண்டனையை மனுதர்ம சாத்திரம் தீர்மானிக்கிறது.


மேல்வருணத்தார் மூவரின் (அதாவது பிராமணன், சத்திரியன், வைசியன்) மனைவியையும் ஒருவன் (சூத்திரன்) தனது வலிமையாற் கூடினால் உயிர்போகும் வரை அவனை தண்டிக்கவும்
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 8. செய்யுள் 358


கற்பினளான பிராமணப் பெண்ணைக் கூடும் வைசியனக்கு ஒரு வருட காவலும் ஆஸ்திப் பறிமுதலும் தண்டனைகள். இவ்விதம் குற்றமிழைத்தவன் சத்திரியனாயிருப்பின் ஆயிரம் பணம் தண்டம் விதித்து கழுதை மூத்திரத்தை விட்டு அவன் தலையை மொட்டை இடுக!
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 8. செய்யுள் 374

ஒரே குற்றத்திற்கு சூத்திரருக்கு மரண தண்டனை, வைசியருக்கு ஒரு வருடம் சிறையும் ஆஸ்திப் பறிமுதலும், சத்திரியருக்கு ஆயிரம் பணம் அபராம் மொட்டையடித்தல், பிராமணருக்கு காயமின்றி பொருளுடன் ஊரைவிட்டு துரத்துதல்.

9வதுஅத்தியாயம்

வைசியர், ஆடவர் & பெண்டிர் அறம்:-திருமணம்,மகப்பேறு,பாகப்பிரிவினை,கவறாடல் முதலிய குற்றங்களுக்கு தண்டனைகள் மற்றும் வைசியர்களின் கடமைகள் பற்றி விவரிக்கிறது.

10வது அத்தியாயம்

சூத்திரர் & வர்ண கலப்பு சாதிகள் மற்றும் ஆபத்து தர்மம்:-சூத்திரர்களின் கடமைகள், கலப்பு சாதிகளின் தோற்றமும் சமூகத்தில் அவர்களுக்குரிய தகுதிகளும், கல்வி ஞானத்தால் கீழ்ப்பிறப்பாளர்கள் உயர்நிலை அடைதல், ஆபத்து காலங்களில் உயர்குடி மக்களுக்கு விதி விலக்குகள் தொடர்பான விதிகள் பற்றி விவரிக்கிறது.

11வது அத்தியாயம்

குற்றங்களும் அதற்க்கான கழுவாய்களும் :- தெரிந்தும் தெரியாமலும் செய்த குற்றங்களுக்கு செய்ய வேண்டிய கழுவாய்கள், யாகம், பாவங்களின் விளைவுகள், குற்ற வகைகள், உண்ணத்தகாதவைகள், மறுபிறப்பு, முக்குணங்கள் பற்றி விளக்குகிறது.

12வது அத்தியாயம்

வினைப் பயன்கள்:- நல்வினை தீவினைகளும் அதன் விளைவுகளும், முக்குணங்கள், வேதங்கள் மற்றும்வேதாந்தங்களின் வாய்மை, ஆன்ம ஞானம், முக்திக்கு வழிகள் முதலியவைகளை விவரிக்கிறது.

மனுதரும சாத்திரமும் பெண்களும்

பெண்களுக்கு தனி அடையாளங்களையோ சுயேச்சையான செயல்பாடுகளையோ மனு தர்மம் நிராகரிக்கிறது. அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை அது அனுமதிக்கவில்லை.


இளமையில் தந்தையாலும் பருவகாலத்தில் கணவனாலும் முதுமையில் மைந்தராலும் காக்கப்பட வேண்டியவர். ஆதலால் மாதர் எஞ்ஞான்றும் தம்மிச்சையாக இருக்கக் கூடாதவர்
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 3


எந்தப் பருவத்தினளாயினும் தனது இல்லத்தில் கூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச்செயலும் இயற்றலாகாது.
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 5 செய்யுள் 147

பெண்களை ஒழுக்கக் கேடானவர்களாகவும் மயக்கும் குணம் கொண்டவர்களாகவும் மனுதர்மம் சித்தரிக்கிறது. பாலியல் ரீதியில் ஒழுக்கக் கேடுகள் எவையாவது நடந்தால் அதில் ஆணுக்கு பொறுப்பு எதுவுமில்லை என்பது போலவும் அவனை ஒரு அப்பாவியைப் போலவும் கருதி பெண்களை மனுதர்மம் இழிவுபடுத்துகிறது.


தங்கள் அலங்காரத்தால் மனிதரைக் கவரும் தன்மை பெண்களின் இயல்பாகையால் அறிந்தோர் பெண்களிடம் கவனக் குறைவாக நடந்து கொள்ளமாட்டார்கள்.
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 2 செய்யுள் 213


புலன்களை அடக்கியவனாயினும் அறிவிலியாயினும் அவர்களைத் தங்களது தொடர்பால் காமக்குரோதமுள்ளவனாகச் செய்வர் மாதர்.
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 2 செய்யுள் 214


பெரும்பாலும் மாதர் கற்பிலார் என்றே பெரிதும் பல நூல்களிலும் குறப்படுவனவற்றையும் கேட்பீராக.
—மனுதரும சாத்திரம் 9, அத்தியாயம் செய்யுள் 19

இவ்வாறு பெண்களை இழிவுப்படுத்தும் மனுதர்மம் மாதரைக் காப்பாற்றுவதற்கான காரணத்தையும் விளக்குகிறது .


வீட்டிற்கு வேண்டிய பாத்திரம் முதலியவற்றை தேடிப் பெறுவதற்காக பொருளை அவளிடம் கொடுத்தும் அதனைக் காப்பாற்றி வைத்து வேண்டிய போது செலவிடும்படி செய்தும் தட்டு முட்டுச் சாமான்களை சுத்தமாக வைத்துக் கொள்ளச் செய்தும் வீட்டை துப்புரவாக்கி வைத்தல், தேவ பூசைக்கான ஏற்பாடுகளைச் செய்தல், அடுக்களைப் பொறுப்பு, பாத்திரம் படுக்கை முதலியவற்றைச் சரியாக கவனித்துக் கொள்ளல் போன்ற இன்றியமையாத இல்லத்துக் காரியங்களை மனைவிக்குக் கற்பித்து அவற்றை அவளைக் கொண்டு செய்வித்தல் போன்றவற்றாலும் அவளது மனம் வேறிடம் செல்லாமற் காக்க!
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 11

கணவன் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும் பெண் அவனுக்கு அடங்கி நடக்க வேண்டுமென்று விதிக்கிறது மனுதர்மம்.


கணவன் சூதாடுகிறவனாயினும் குடிகாரனாக இருந்தாலும் பிணியாளனாயினும் மனைவி அவனுக்கு செருக்குற்று பணிபுரியாமலிருந்தால் அவளுக்கு அழகு செய்தல், ஆடை, படுக்கை இவற்றை மறுத்து மூன்று மாதம் விலக்கி வைக்கவும்.
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 9 செய்யுள் 78


இழிநடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணமின்மை இவற்றையுடையவனாயினும் கற்பினாளான பெண் தன் கணவனை தெய்வமாகப் பேணுக.
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 5 செய்யுள் 154


மறுமையின் பத்தில் நாட்டமுள்ள பெண்மணி தன் கணவன் இருப்பினும் இறப்பினும் அவன் கருத்துக்கு மாறுபாடாக நடக்கக் கூடாது.
—மனுதரும சாத்திரம், அத்தியாயம் 5 செய்யுள் 156

குறிப்புதவி நூல்கள்
Manusmriti:The Laws of Manu. 



[][][]

Wednesday, 9 March 2016

மார்புக்கு வரி: கொங்கைகளை வெட்டி எறிந்து மரணமடைந்த வீரப் பெண்!- (விகடன் பதிப்பு)






கேரளத்தில் குறைந்த ஜாதியை சேர்ந்த பெண்கள் மார்புக்கு வரி விதிக்கும் முறை இருந்த கொடுமையான காலக்கட்டம் அது. நாஞ்செலி, ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த அழகான பெண். 30 வயதினை நெருங்கிக் கொண்டிருந்தாள். இந்த கொடுமையான வரி விதிப்பை எதிர்த்து கடுமையாக போராடிக் கெண்டிருந்தாள். திருவாங்கூர் அரசுக்கு மார்பு வரி செலுத்தவும் மறுத்து விட்டாள். பல மாதங்களாக ஆகியும் அவள் வரி கட்டவில்லை. பல முறை அரசு கேட்டும் வரி கட்டவில்லை. அதாவது மார்பை மறைக்க விரும்பும் பெண்கள் கட்ட வேண்டிய வரி இது. மறைக்க விரும்பவில்லையென்றால் வரி கிடையாது.


ஒரு நாள் அரசின் வரிவிதிப்பாளர் அவளைத் தேடி வீட்டுக்கே வந்து விட்டார். உனது மார்புக்கு வரி கட்டிவிட்டாயா? என்று கோபமாக கேட்டார். கொஞ்ச நேரம் காத்திருக்கவும் என்றார் நாஞ்செலி . '

சரி, ...பொருளை எடுத்து வருவாள் ' என்பது வரிவிதிப்பாளரின் எதிர்பார்ப்பு. உள்ளே சென்றவள் கையில் வாழை இலைகளை அறுக்கும் அரிவாளுடன் வெளியே வந்தாள்.

இது இருந்தால்தானே வரி கேட்பாய்? என்றவாரே தனது இரு கொங்கைகளையும் வரி விதிப்பாளர் கண் எதிரிலேயே வெட்டி எறிந்தாள். அவளது இரு மார்புகளும் உடலை விட்டு பிரிந்தன. உயிரும் பிரிந்தது.

அந்த காலத்தில் கேரளத்தையே அதிர வைத்த சம்பவம் இது. அது மட்டுமல்ல நாஞ்செலியின் இந்த செயலால் அதிர்த்து போன திருவாங்கூர் அரசு, இந்த வரிவிதிப்பை ரத்து செய்யவும் வைத்த சம்பவம் அது. கேரளத்தில் சேர்தலா அருகே 'முலைச்சிபுரம் 'என்ற இடத்தில் இந்த துயரம் நிறைந்த வரலாற்று சம்பவம்
நடந்துள்ளது.

ஊரின் பெயர்க்காரணமும் இதுதான். ஆனால் நாஞ்செலியை நினைவு கூறும் வகையில் சேர்தலா உள்ளிட்ட கேரளத்தின் எந்த பகுதியிலும் ஒரு நினைவுச்சின்னமோ சிலையோ கூட கிடையாது.

தற்போது நாஞ்செலியின் பரம்பரையில் ஒரே ஒருவர்தான் உயிரோடு உள்ளார். அவர் நாஞ்செலிக்கு பேத்தி முறை. 67 வயதாகும் அவரது பெயர் லீலாம்மா. இந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில்,

'' நாஞ்செலி தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. நாஞ்செலியின் சகோதரியின் பேத்தி நான். எனது முன்னோர்கள் நாஞ்செலியின் அழகை பற்றி கூறியுள்ளனர். அந்த துயரச் சம்பவம் குறித்தும் விளக்கியுள்ளனர்.

துணிச்சலான அவரது செயல் அப்போதையை திருவாங்கூர் அரசையே அதிர வைத்ததாகவும் கூறுவார்கள்'' என்றார்.

கோட்டயத்தை சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் அஜே சேகர், '' மனித உரிமைக்கே சவால் விடுகின்ற இது போன்ற வரிவிதிப்புகளை எதிர்த்து போராடிய அந்த பெண்ணை தற் காலத்தவர்கள் மறந்து விட்டனர்.

இவர்களை போன்றவர்களை மறப்பது மனசாட்சியற்ற செயல்'' என்கிறார்.
எத்தனையோ மகளிர் தினம் கொண்டாடிவிட்டோம். எத்தனை மகளிருக்கு நாஞ்செலியின் துணிச்சல் மிக்க இந்த செயல் தெரியும் என்றும் தெரியவில்லை. வரலாற்றையும் வீரப்பெண்களையும் அடையாளப்படுத்த சமூகம் மறந்து விடக் கூடாது!



[][][]

Wednesday, 2 March 2016

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே..!






“குங்குமம்’’ இதழ் பக்கம் 17இல் (7.4.2000) இராஜாஜி குறித்த செய்தியொன்று வெளியானது.

1973_74 ஆம் ஆண்டில் ஆச்சாரியாரின் பென்ஷன் முதலியன குறித்த கோப்புகளைக் கண்ணுறும் வாய்ப்புள்ள ஒருவர் கூறியது:


“ராஜாஜி அவர்கள் கவர்னர் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்றார். தான் நெடுங்காலம் வாழப் போவதாகவும், அக்காலம் முழுவதும் தனக்கு வரவேண்டிய பணி ஓய்வு காலத் தொகைகளைக் கணக்கிட்டால் கிண்டி ராஜ்பவனத்தின் மதிப்பைவிடக் கூடுதலாக வரும் என்றும்; எனவே, அரசே கிண்டி ராஜ்பவன் நிலம் முழுதும் தனக்குக் கொடுத்துவிடவேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்தக் கோரிக்கையை அரசு நிராகரித்துவிட்டது’’ என்பதுதான் குங்குமம் வெளியிட்டிருந்த அந்தத் தகவல்!

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே.... காசு

காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே!

[] [] []