''தேவர்கள் என்றும் மண்ணின் கடவுள்கள் என்றும் தங்களைக் கூறிக்
கொள்பவர்களும்(பார்ப்பனர்கள்), ஆளும் வர்க்கமான
சத்திரியர்களும் தங்களுக்குக் கீழ்ப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்களுடன் முதல்
முதலில் உறவு கொள்ளும் உரிமையைக் கொண்டிருந்தனர் என்பது வரலாற்றுச் சம்பவங்கள்
மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
மனுவின் கூற்று படி பூமியின் எஜமானர்களாகிய உயர்சாதிப்
பார்ப்பனர்கள் கீழ்சாதிப் பெண்களை அனுபவிக்கும் உரிமையை மலபார் பகுதியில்
கொண்டிருந்தனர்.
கி.பி. 1502 இல், இந்தியாவுக்கு வந்திருந்த லூடோவிக்கோல்டி என்பவர் கள்ளிக் கோட்டை
பார்ப்பனர்கள் பற்றி கூறியது;
''அரசன் திருமணம் செய்யும் போது மிகவும்
மதிப்பும் மரியாதையும் உள்ள இந்தப் பார்ப்பனர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து,
தன் மனைவியுடன் முதலிரவைக் கழிக்க அவரை அனுப்பிவிடுவர்.!"
இது போல் ஹாமில்டன் என்ற எழுத்தாளர் எழுதியதில், ''சமோரின் (ஒரு சமூகப் பிரிவு) திருமணம் செய்யும்போது நம்பூதிரியோ அல்லது
முதன்மை மதக்குருவோ மணப்பெண்ணை அனுபவிக்கும் வரை இவனால் (மணமகனால்) அனுபவிக்க
முடியாது. இவர் (மதக்குரு) விரும்பினால் மூன்று இரவுகள் கூட அப்பெண்ணுடன்
கழிக்கலாம். ஏனெனின் அப்பெண்ணின் திருமண இரவில் முதல் கனிகள் அவள் வணங்கும்
கடவுளுக்கு நைவேத்தியம் செய்யப்படவேண்டும்.!"
''அரசக் குடும்பங்களிலும் பிரபு குடும்பங்களிலும் பெண்கள் பார்ப்பனர்கள்
மூலம் கருவுறுவதைப் புண்ணியமாகக் கருதினர். பார்ப்பனர்களுக்கு உடல், மன, காம வேட்கைகளில் சுகமளிப்பது சொர்க்கத்தை
அடைவதற்கான வழியென பெண்கள் நம்பினர். பார்ப்பனர்கள் விருந்தினனாக வீட்டிற்கு
வந்தால், அவன் முதியவனாக இருந்தபோதும், கன்னிகைகளான இளம் பெண்களை அவனுடைய படுக்கையறைக்கு அனுப்ப குடும்பத்
தலைவர்கள் ஆர்வம் காட்டினர். கன்னிப் பெண்கள் இல்லையென்றால், அந்த
வீட்டிலுள்ள மிகவும் வயது குறைந்த பெண், பார்ப்பனனின்
பணிவிடைக்காக நியமிக்கப்பட்டாள். அந்தப் பெண்ணுக்குக் கணவன் இருந்தால், அவன் இந்தச் சமயம் அறைக்கு வெளியே படுப்பது வழக்கம். ஐம்பது ஆண்டுகளுக்கு
முன்பு இத்தகைய ஒரு சமுதாய முறை இருந்தது.!"
பார்ப்பனிய மதம் மற்றைய மதங்கள் மீதான வெற்றிகளின் மீது
பக்தியின் பின்னால் அரங்கேறிய வடிவமிது.
மனு 2.213 இல்,
''இவ்வுலகில் ஆண்களை மயக்குவதே பெண்களின் இயல்பு. எனவேதான்
பெண்களிடம் பழகும்பொழுது விவேகிகள் எப்போதும் விழிப்புடனிருக்கிறார்கள்.!"
மனு 2.214 இல்,
''இந்த உலகில் முட்டாளை மட்டுமின்றி அறிவாளியையும் தவறான வழிக்கு
இட்டுச் செல்வதுடன், ஆசைக்கும், கோபத்திற்கும்
அவர்களை அடிமையாக்குவதில் வல்லவர்கள் பெண்கள்.!"
மனு 2.215 இல்,
''தாய், மகள், சகோதரி
எப்பெண்ணுடனும் தனியிடத்தில் அமர்தல் கூடாது. புலன்கள் ஆற்றல் வாய்ந்தவை, அவை அறிவாளியையும் வெற்றி கொள்ளும்.!"
மனு 9.14 இல், ''பெண்கள்
அழகைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. வயதைப் பற்றியும் அக்கறை கொள்வதில்லை. ஆணாக
இருந்தால்போதும், அழகாக இருப்பினும், அசிங்கமாக
இருப்பினும் உடலுறவு கொள்ளத் தயங்கார்.!"
மனு 9.15 இல், ''ஆடவருடன்
உறவு கொள்ளத் துடிக்கும் மோகத்தால், சலனப் புத்தியால்,
இயல்பாக அமைந்த ஈவிரக்கமற்ற தன்மையால் கணவர்கள் எவ்வளவு விழிப்பாக
இருந்தாலும் பெண்கள் துரோகிகளாகிவிடுவர்.!"
மனு 9.16 இல், ''படைப்பிலேயே
கடவுள் பெண்களுக்கு அமைத்துள்ள இயல்பை அறிந்து ஒவ்வொரு மனிதனும் பெருமுயற்சி
செய்து பெண்களைக் காத்துவரல் வேண்டும்.!" என்கிறது, இந்து
மதம். அதாவது பெண் ஆணின் அடிமை என்கின்றது. ஆண் அடித்தாலும், கொன்றாலும் எதிர்த்துப் போராடக் கூடாது என்கின்றது.
மனு 9.17 இல், ''படைப்பிலேயே
கடவுள் பெண்களுக்கு ஒதுக்கியுள்ள குணங்கள் படுக்கை மோகம், பதவி
தாகம், ஆபரண ஆசை, கேடான ஆசைகள்,
கோபம், நேர்மையின்மை, வஞ்சகம்,
தீயநடத்தை ஆகியவை.!"
மனு 9.2 இல், ''இரவும்
பகலும் பெண்களை அவர்தம் குடும்பத்து ஆடவர் தம் அதிகாரத்தின் கீழ் வைத்திருத்தல்
வேண்டும்;உடலுறவை நாடும் பெண்களை ஒருவர் கட்டுக்குள் வைத்தல்
வேண்டும்.!"
மனு 9.3 இல், ''குழந்தைப்
பருவத்தில் தந்தையின் பாதுகாப்பிலும், இளமையில் கணவன்
பாதுகாப்பிலும், முதுமையில் மகன்களின் பாதுகாப்பிலும்
பெண்கள் இருத்தல் வேண்டும். பெண் எப்பொழுதும் சுதந்திரமாக இருப்பதற்குத்
தகுதியற்றவள்.!"
மனு 9.5 இல், ''எவ்வளவு
அற்பமாகத் தோன்றினாலும் பெண்களிடம் தீயக் குணங்கள் தோன்றி வளர்வதைத் தடுத்தல்
வேண்டும், பாதுகாக்காவிட்டால் இரு குடும்பத்திற்கும்
துயரத்தை வருவிப்பார்கள்;!"
மனு 4.147 இல், ''சிறுமியாயினும்,
இளம் பெண்ணாயினும், ஏன் முதியவளாயினும்
தம்வீட்டில் கூடச் சுதந்திரமாக எதையும் செய்திட அனுமதித்தல் கூடாது.!"
மனு 11.45 இல், ''கணவனும்
மனைவியும் ஒன்றெனக் கூறப்படுவதன் பொருள் திருமணத்திற்குப் பின் மணமுறிவு, பிரிவு என்பதே கிடையாது.!"
மனு 9.46 இல், ''விற்றுவிட்டாலும்,
கைவிட்டாலும், கணவனின் பந்தத்திலிருந்து மனைவி
விடுபட முடியாது.!"
மனு 5.149 இல், ''தந்தையிடமிருந்தோ,
கணவனிடமிருந்தோ, மகன்களிடமிருந்தோ ஒரு பெண்
பிரிந்தால் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் பழியை ஏற்படுத்துவாள்.
விவாகரத்து உரிமை கிடையாது.!"
மனு 8.415 இல், ''மனைவி,
மகள், அடிமை, இம்மூவரும்
சொத்துரிமைக்கு அருகதையற்றவர்; அவர்கள் ஈட்டும் செல்வம்,
அவர்களை உடையவருக்கே போய்ச்சேரும்.!"
கணவன் இறந்தாலும் பெண் சொத்துக்கு உரிமை பெற முடியாது, மாறாக ஜீவனாம்சம் பெற முடியும் என்பதன் மூலம் கணவன் சார்ந்த
குடும்பத்துக்கு அடிமையாக இருக்கக் கோருவதுடன் கணவனின் தம்பி, அல்லது அண்ணனுக்கு அல்லது தந்தைக்கு வைப்பாட்டியாக இருக்க, இந்தச் சொத்துரிமை மறுப்பு நிர்ப்பந்திக்கின்றது.
மனு 8.299 இல், ''மனைவி,
மகன், அடிமை, மாணவன்,
இளைய சகோதரன் ஆகியோர் தவறு செய்யின் கயிறு அல்லது மூங்கில் கழியால்
அடிக்கலாம்" என்று கூறுகின்றது.
பெண்ணை விற்க, அனுபவிக்க, தூக்கி வீச, அடிக்க என எல்லாம் இந்து மதம் ஆணுக்கு
அனுமதித்துள்ளது. பெண் இதில் எதையும் ஆணுக்குச் செய்ய முடியாது.
மனு 2.66 இல், ''பெண்..
வேதமந்திரங்களை ஓதக் கூடாது.!"
மனு 9.36 இல், ''வேதங்களில் சொல்லப்பட்ட தினசரி வேள்வி நியமங்களைப் பெண் ஆற்றுதல் கூடாது.!"
மனு 9.36 இல், ''அவள்
அவ்வாறு செய்தால், நரகத்திற்குப் போவாள்.!"
மனு 4.205 இல் ''ஒரு
பெண் ஆற்றிடும் வேள்வியில், பிராமணன் உண்ணக்கூடாது.!"
மனு 4.206 இல்,''பெண்கள்
இயற்றும் வேள்விகள் அமங்கலமானவை. தெய்வச் சங்கல்பமற்றவை. அவற்றைப் பிராமணர்கள்
தவிர்த்தல் வேண்டும்.!"
மனு 5.151 இல், ''தன்
தந்தை யாருக்கு மணம் செய்து கொடுக்கிறாரோ, அல்லது தந்தை
இசைவுடன் சகோதரன் தன்னை யாருக்கு மணம் செய்து கொடுக்கிறாரோ, அக்கணவனுக்கு
வாழ்நாள்வரை அவள் கீழ்ப்படிதல் வேண்டும். இறந்த பிறகும் கணவன் நினைவைப்
பழித்தலாகாது.!"
மனு 5.154 இல், ''அறநெறி
பிறழ்ந்தவனாயினும், வேறொருத்தியிடம் இன்பம் கொள்பவனாயினும்,
நல்ல குணங்கள் இல்லாதவனாயினும் விசுவாசமுள்ள மனைவி கணவனை எந்நேரமும்
தெய்வமாக வழிபடுதல் வேண்டும்.!"
மனு 5.150 இல், ''அவள்
எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருத்தல் வேண்டும். வீட்டுக் காரியங்களைத் திறம்பட
ஆற்றுதல் வேண்டும்;. பாத்திரங்களைக் கவனமாகக் கழுவி வைத்தல்
வேண்டும். செலவில் சிக்கனத்தைக் கடைப்பிடித்தல் வேண்டும்.!"
மனு 5.155 இல், ''கணவனுக்குக்
கீழ்ப்படிந்து நடந்தாலே மனைவிக்குச் சொர்க்கத்தில் உயர் பதவி கிடைக்கும்.!"
மனு 5.153 இல், ''புனித
முழக்கங்களிடையே அவளை மணந்த கணவன்தான் எப்பொழுதும் இன்பம் தருபவன். இவ்வுலகிலும்
ஏன் அவ்வுலகிலும் கூட அவ்வண்ணமே.!"
அர்த்த சாஸ்திரம் (3,8) இல், ''சூத்திரப் பெண் உயர்சாதி ஆண்கள் இன்பம் அனுபவிப்பதற்கு உரியவள்.!"
''உயர் சாதிக்காரன் ஒரு சூத்திரப் பெண்ணோடு சேர்ந்து உடல் இன்பம்
பெறுவானேயானால் அதனை ஒரு குற்றமாகக் கருதக்கூடாது.!"
மகாபாரதத்தை எழுதிய வியாசர் கூட பராசரன் என்ற பார்ப்பன ரிஷிக்கு
காளியென்ற மீனவப் பெண்ணிடம் பிறந்த மகனே வியாசர். இந்த வியாசருக்கு க்ருதாசி என்ற
வேத மங்கை பிறந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.
கேரளத்தில் சென்ற நூற்றாண்டில் கூட ஈழவர் சாதிப் பெண்கள் தலைவரி
கட்டியதுடன், முலைவரியும் கட்ட ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமை
கோரியது. இந்த அவமானத்தை தாங்க முடியாது ''சேர்த்தலை"
என்ற இடத்தைச் சேர்ந்த ஓர் ஈழவப் பெண் தன் இரு முலைகளையும் அறுத்து வாழை இலையில்
வைத்து அதிகாரிகளிடம் கொடுத்தாராம். (அந்த இடம் இன்றும் முலைச்சிப் பறம்பு என்று
அழைக்கப்படுகின்றது) கிறிஸ்தவச் சாணார் பெண்கள் முலை மறைத்து உடை அணிந்ததால் ஆடை
களைந்து அவர்களது முலைகள் அறுக்கப்பட்டன."
தேவதாசி பிரதா என்ற சடங்கின் மூலம் கடவுளுக்குப் பெண்களைத் திருமணம்
செய்து வைப்பதன் மூலம், கோயில் விபச்சாரிகளை உருவாக்கியது.
சதிபிராரா என்ற சடங்கின் மூலம் கணவனின் சிதையில் பெண் ஏற்றி வைக்கப்பட்டாள்.
பெண் மறுத்தபோது பலாத்காரமாகத் தள்ளி எரியூட்டப் பட்டாள்.
கங்கா பிரவர் என்ற சடங்கின் மூலம் குழந்தை இல்லாத பெண்கள் கங்கையில்
நீராடியதுடன், அவர்களுக்குப் பிறக்கும் முதல் குழந்தையைக்
கங்கை நீருக்குப் பலிகொடுத்தனர்.
நரவதா என்ற சடங்கின் மூலம் ஒரு குழந்தையின் நலனுக்காக, ஏழைக் குழந்தைகள் அல்லது அநாதைக் குழந்தைகளைப் பிடித்து வந்து தேவதைக்குப்
பலி கொடுத்தனர்.
கன்யவதா என்ற சடங்கில் இராஜபுத்திரர்கள் தமது பெண் குழந்தைக்குத்
திருமணம் செய்யும் போது, உறவினர்க்கு முன் மண்டியிட்டு
வணங்கவேண்டும் என்பதால், இராஜபுத்திரர்கள் தமது பெண்
குழந்தைகளைக் கொன்றனர்.. இது போன்று காலத்தால் அழிந்தும், அழியாததுமான
பல நூறு காட்டுமிராண்டிச் சடங்குகள், 2000 விரதங்கள்,
அது சார்ந்த தானங்கள் என நீண்டு, இந்துமதம்
காட்டுமிராண்டித்தனமாக உள்ளது.
இன்று சிவசேனை முதல் இந்திய பாரதிய ஜனதாக் கட்சி ஈறாக இந்து மதச்
சிவில் சட்டத்தை இந்து மக்கள் மீது திணித்து பாசிசக் காட்டுமிராண்டித்தனத்தை அமுல்
செய்யத் துடிக்கின்றனர். இந்த இந்துச் சட்டம் என்பது பார்ப்பனியத்தின் ஆதாரமான
மனுவின் சட்டமே.
இந்துச் சூத்திரம் பெண்ணை ஆணின் போகத்துக்குரிய படைப்பாக இந்திரன்
படைத்தான் என்று கூறுவதன் மூலம் பெண் பாலியல் பண்டமாகின்றாள்.
அத்துடன் யுத்தங்களில் வென்று வரும் வீரனுக்குப் பெண்கள்
பரிசளிக்கப்பட்டதுடன், பெண்கள் பலாத்காரமாக அவர்களின்
குடும்பத்தில் இருந்த மற்றைய பொருட்களுடன் சேர்த்து சூறையாடப்பட்டாள். இதற்கு
வேதங்களில் நிறையவே ஆதாரங்கள் உள்ளன. இங்கும் பெண் பண்டத்துடன் பண்டமாகக் கவரவும்,
கற்பழிக்கவும் இருந்த உரிமையை இந்து மதம் அங்கீகரித்தது.
போர் வீரர்களின் வெற்றியைப் பறைசாற்ற ரிக்வேதத்தில் 8.48.88 இல், ''ஸ்திரீகள் அலங்காரம் செய்யப்பட்டு வெற்றி வீரர்கள் தங்கியிருக்கும்
முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்"
மகாபாரதம் அனுஷானம் 28,12,25,29 இல்,
''பெண்ணாய்ப் பிறப்பதை விட கெட்டபிறப்பு வேறு எதுவுமில்லை. -
எல்லா கேடுகளுக்கும் வேர் பெண்களே! - எவ்வளவு விறகிட்டாலும் நெருப்பு திருப்தி
அடைவதில்லை. ஆறுகள் கொண்டுவரும் எந்த அளவு நீரினாலும் கடலுக்கு ஆசை தீருவதில்லை. எவ்வளவு பிராணிகளைக் கொன்றாலும்
கொலைகாரன் சமாதானம் அடைவதில்லை. இதுபோல் பெண்கள்
எவ்வளவு ஆண்களாலும் திருப்தியடைந்து விடமாட்டார்கள்.
நாச காலன், ஊழிக்காற்று, பாதாளக் கடவுளாகிய எமன், இடைவிடாமல் நெருப்பைக்
கக்குகின்ற அக்கினி, ஊற்றுவாய், சவரக்கத்தியின்
கூர்மை, கொடிய விஷம், பாம்புகள்,
நெருப்பு ஆகியவைகள் ஒன்று சேர்ந்தால் எத்தனை கேட்டை விளைவிக்கக்
கூடியதாகுமோ அத்தன்மை உடையவர்கள் பெண்கள்.!" என்று மகாபாரதம் பெண்கள் பற்றிக்
கூறுகின்றது. (பெரியார்
களஞ்சியம் தொகுதி: 6)
தொடர்ந்து மகாபாரதம் அனுஷன் பர்வதம் 39.8 இல்,
''அதாவது பெண்களின் அறிவு, கண்டு பிடிக்க
முடியாத ஆழமானது அல்லது தந்திரமுள்ளது.!" என்று உரைக்கிறது.
மகாபாரதம் அனுஷன் பர்வதம் 49.22 இல்,
''பெண்ணை விட பாவகரமான பிராணி வேறு இல்லை. பெண் எரிகின்ற நெருப்பு
போன்றவள். பெண் மாய்கை, வஞ்சகக் குணமுள்ளவள். சவரக்
கத்தியின் கூர்மையான பதம் போன்றவள். இவைகள் எல்லாம் உண்மையாகவே ஒரு பெண்ணின்
தன்மையில் இருக்கின்றன.
மகாபாரதம் அனுஷன் பர்வதம் 43.23 இல், பெண்கள் பயங்கரமானவர்கள். கொடிய சக்திகளை உடையவர்கள்;. தங்களுக்குப் போக இன்பத்தை அளிக்கிறவர்களிடத்தில் தவிர வேறு யாரையும்
அவர்கள் நேசிக்க மாட்டார்கள், விரும்ப மாட்டார்கள்.!
மகாபாரதம் அனுஷன் பர்வதம் 43.24 இல், உயிரைக் கொல்லும் அதர்வன மந்திரங்களை ஒத்தவர்கள் பெண்கள். ஒருவனுடன் கூடி
வாழ ஒத்துக்கொண்டாலும் பின்னர் மற்றவர்களுடன் கூடிக்கொண்டு, முன்னவனை
விட்டுப் பிரியவும் தயாராகவுமிருப்பார்கள்.! அவர்கள் ஒரு ஆணைக் கொண்டு எப்போதும்
திருப்தியடைய மாட்டார்கள்.
மகாபாரதம் அனுஷன் பர்வதம் 43.24 இல்,
''ஆண்கள் அவர்களை நேசமாகக் கொள்ளக்கூடாது. அவர்களிடம் பொறாமைப்படக்
கூடிய நல்ல தன்மை ஒன்றுமில்லை. அவர்களுடன் தொடர்பு இல்லாமலே, உண்மை அன்பு வைக்காமல் போகத்துக்காக மாத்திரம் ஆண்கள் பெண்களின்
சம்பந்தத்தை வைத்துக்கொள்ள வேண்டும். அந்தப்படிக்கு இல்லாமல் வேறுவிதமாக ஒருவன்
பெண்ணிடம் நம்பிக்கை வைத்துக் கொண்டால் அவன் நிச்சயமாக அழிந்து போவான்.!"
இராமாயணம் ஆரண்ய காண்டம் 13.5.6 இல்,
''உலகம் தோன்றுவது முதல் பெண்கள் நிலைமை சூது நிறைந்தது. பெண்கள்
தாமரை இலையில் தண்ணீர்போல் சலனப் புத்தியுடையவர்கள். வாள்போல் கூர்மையான கொடுந்தன்மையுடையவர்கள்.!"
பெண் உறுதியற்ற சலனத்தன்மை கொண்டவள். ஒன்றுக்குள் நிலை நிறுத்த முடியாதவள்,
எனவே, அடக்குங்கள் என்ற இராமனின் புகழ் பாடும்
இராமாயணம் சமூகத்துக்குக் கற்றுக் கொடுக்கின்றது.
பாகவத ஸ்கந்தம் 4-14,42.8-4-36 இல், ''ஒரு பெண்ணால் உண்மையாக நேசிக்கப்படுகிறவராக யாருமிருக்க முடியாது. ஒரு
பெண் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்குத் தனது கணவனையோ, குழந்தைகளையோ,
சகோதரர்களையோ யாரை வேண்டுமானாலும் கொலை செய்யத் தயங்கமாட்டாள்.!"
இதையே சுக்ரன் ''பெண்கள் நிலையற்ற
சுபாவமுடையவர்கள். அவர்கள் குற்றமுள்ளவர்கள்.!"
சுக்ரா 3.163 இல், ''பெண்
இனத்திற்கே கீழ்க்கண்ட 8 கணங்களும் உரிமையானவைகள். 1.பொய், 2.நிலையில்லாமை, 3.வஞ்சகம்,
4.மூடத்தனம், 5.பேராசை, 6.மாசு, 7.கொடுமை, 8.துடுக்குத்தனம்.!"
அர்த்த சாத்திரம் 3-3-59 இல், ''பெண்கள் தவறு செய்தால் மூங்கில் பட்டையினாலோ, கயிற்றினாலோ,
கையினாலோ, பெண்களின் வாயின் உதட்டில் மீது
அடிகள் கொடுக்கலாம்.!"
இதை இராமாயணம் 25-17 இல், ''ஒரு மனைவி தப்பிதம் செய்தால் கயிற்றினாலோ, மூங்கில்
பிளப்பினாலோ அடிக்கலாம். சமுதாயத்திற்கு அவர்கள் (பெண்கள்) கேடானவர்கள் -
அபாயமானவர்கள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களைக் கொன்று விடலாம். உலகத்தையே
விழுங்க எண்ணிய மந்தாரா என்ற பெண்ணைச் சக்ரா கொன்றிருக்கிறார். ஆஸ்ரமங்களில்
செய்யப்பட்ட யாகங்களை, சடங்குகளைத் தடுத்ததற்காகத் தாடகை
என்ற பெண்ணை இராமன் கொன்றிருக்கிறான்.!"
பார்ப்பனிய முட்டாள்தனம், மூடநம்பிக்கை,
அடிமைப்படுத்துதல், அவதூறுகள், வன்முறை ஆகியவை மீது கேள்வி எழுப்பிய பெண்கள் கொல்லப்பட்டனர்.
ஆண் பரிசம் கொடுத்து பெண் பெற்ற முறைக்குப் பதில், பெண் சீதனம் கொடுக்கும் முறை பெண்ணைச் சுமையாக்கியது. சொத்துரிமை ஆணின்
கையில் இருந்த நிலையில் மேலும் சீதனமூடாக அவளது சொத்தைத் தனதாக்கும்
கண்ணோட்டத்தில், சீதனம் கொடுப்பது பெண் மீதான சுமையாக
மாறியது. எனவே, சொத்தற்ற பெண் சீதனம் கொடுக்க சொந்தக்
குடும்பத்தில் ஆணைச் சார்ந்து இருப்பது தவிர்க்க முடியாத ஒழுக்கமாக மாறியது.
இதனால் பெண்ணின் வாழ்வு மேலும் இழிநிலைக்குத் தரம் தாழ்ந்தது.
அதர்வண வேதத்தில் 6-2-3 இல், ''குடும்பத்தில் பெண் பிறந்தால் அச்சம்பவம் மகிழ்ச்சிக்குரியதல்ல, வருந்துவதற்குரியது, வியாகூலப்பட வேண்டியது. ஆண்
மகவை விரும்புகிறதேயல்லாது, பெண் மகவை விரும்புகிறதில்லை.
பெண் மகவு வேறு எங்காவது பிறக்கட்டும்; இங்கே ஆண் மகவு
பிறக்கட்டும். புக்கா கடவுளை வணங்குவதில் ஆண் மகவே பிறக்கட்டும், பெண் மகவு பிறக்க வேண்டாம்.!"
காதபாசன் ஹிதா 27ஏ யில், ''பெண் குழந்தைகள் சாக வேண்டியவர்கள்" (பெரியார் களஞ்சியம் தொகுதி: 6) என்று
சொத்துரிமை பறிக்கப்பட்ட பெண்ணை இழிவுபடுத்திய விளக்கத்தினூடாக வெறுக்கப்பட்டாள்.
ஆண் குழந்தை வேண்டி வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஆண் குழந்தைக்குப் பதில் பெண்
குழந்தை பெற்ற தாய், குழந்தைப் பேறு இல்லாத பெண் சமூகத்தால்
தூற்றுதலுக்கு உள்ளாக்கப்பட்டாள்.
ரிக்
வேதத்தில், ''யுத்தத்தில் எதிரியிடமிருந்து
பிடிபட்ட பெண்களோ அல்லது விவாகச் சம்பந்தமாகக் கட்டாயப்படுத்தப்பட்டவளோ, இவர்களில் எவரையும் மனிதப்பிறவி என்று கருதாமல் தட்டுமுட்டுச் சாமான்களைப்
போலவே நடத்தவேண்டும்.!" என்றே சொல்லப் படுகிறது.
நீதியின் ஒழுக்கத்தில் சிறந்த கதாநாயகர்கள் ஆக்கி மக்களுக்கு
ஒழுங்கமைத்த பாண்டவர் கதையில், பஞ்சபாண்டவர்கள் தமது
மனைவியைச் (இங்கு திரௌபதி ஐவருக்குப் பொது மனைவியைக் கூட) சூதாட்டத்தில் பணயமாக
வைத்தபோது பெண்ணை ஒரு பொருளாக, சரக்காகத் தரம்
தாழ்த்தப்பட்டதையே காட்டுகின்றது.
இதுபோல் இராமாயணத்தில் இராமன் பரதனுக்குத் தான் வகிக்கும் பதவி,
மனைவி என அனைத்தையும் கொடுத்தபோது, இங்கும்
பெண்ணை எப்படி இந்து தர்மம் சரக்காக்கிக் கைமாற்றியதைக் காட்டுகின்றது. இதை
வால்மீகி இராமாயணம் 2-19-14 இல், தெளிவாகவே
உணர்த்தி விடுகின்றது.
அரிச்சந்திர மயானகாண்டம் எந்தக் கட்டத்திலும் சந்திரமதியை விற்றதைக்
கண்டிக்கவில்லை.
இந்த இந்துப் புராணங்கள் இன்று மீண்டும் முன்னணிக்குக்
கொண்டுவரப்படும் நிலையில், இராமனின் ஆணாதிக்கக் கற்பு நோக்கு
சீதையை இழிவுபடுத்திய வக்கிரத்தைப் பார்ப்போம்.
ஒரு வண்ணான் சந்தேகப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு இறை அவதாரமாகக்
கருதப்படும் இந்து நாயகன் இராமன், தனது மனைவி சீதையை,
ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்த போதும் காட்டுக்குத்
துரத்திவிட்டான்.
இறை அவதாரம் பெற்ற இராமனாகப் புராணங்கள் புளுகிய போதும், இராவணன் இடம் இருந்து சீதையை மீட்டபோது, (முரண்பட்ட
பல வரலாற்றுக் கதைகள் இருந்தபோதும்) சீதை தனது கற்பை நிலை நாட்ட தீ மிதித்து ஒழுக்கத்தை நிறுவ வேண்டிய நிலை ஏற்பட்டது.
பஞ்சபாண்டவர்களின் ஒரே மனைவியான திரௌபதி தனது ஐந்து புருசனுக்கு
வெளியில் இன்னுமொரு ஆணை விரும்புவதாகக் கூறி விபச்சார நிலையில் நியாயப்படுத்தியது.
மனைவியை முன்நின்று கணவன் கூட்டிக் கொடுக்க ஆணாதிக்க இந்து தர்மம்
கோருகின்றது. அதாவது கடவுளின் தொண்டர்களான பார்ப்பனர்கள், பக்தர்கள்
இடம் கேட்டால், கேட்பதைக் கொடுக்கும்படி இந்து தர்மம்
கோரியது.
இயற்பகை நாயனாரிடம் ஒரு பக்தன் பெயரில் சிவபெருமான் அவரின்
மனைவியைப் பிச்சையாகக் கேட்டாராம். உடனே மனைவியை அவர் கொடுத்தார். பெண்ணின்
பெற்றோர்கள் இதைத் தட்டிக் கேட்க, தனது பெண்டாட்டியை
வெட்டிச் சாய்த்தார். உடனே பரமசிவன் கேட்ட உடனே கூட்டிக் கொடுத்ததுக்கும், மனைவி மறுபேச்சு இன்றி விபச்சாரம் செய்ததற்கும் அங்கீகாரம் வழங்கி,
அவரை முதல்தரப் பக்தன் ஆக்கி மோட்சத்துக்கு அழைத்துப் போனாராம் சிவன்.
இதேபோல் ஆழ்வார் வீட்டில் ஒரு பக்தன் சாப்பாட்டுக்குப் போனார். உணவு
சமைக்க உணவு இல்லாத நிலையில், கடையில் கடன் உதவி கேட்க,
அவன் இவன் மனைவியைக் கேட்டான். இதற்கு அவன் பெண்டாட்டியைப் படுக்க
விட்டு விருந்து வைத்தாராம்.
எவ்வளவு கேவலமான வகையில் பெண்களைப் பக்தியின் பின்னால்
படுக்கைக்குப் பயன்படுத்தியுள்ளனர். இன்றும் கேடிகள், பணக்காரக்
கும்பல்கள் இப்படித்தான் பெண்ணைப் பயன்படுத்துகின்றனர்.
இராமாயணத்தின் கதாநாயகன் இராமனின் பெயரில் ஒரு வானரக்கூட்டம் இன்று
இந்தியாவில்; ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றும், கற்பழித்தும் போடும் கூத்தின் பின்னால், இராமாயணப்
புராண இலக்கிய வரலாறு மண்டிக்கிடக்கின்றது.
கந்த புராணம் ஏற்பட காரணம் சிவன் உமாதேவியாருடன் நூறு வருடம்
விடாமல் புணர்ந்து கொண்டிருந்ததால், வீரியமும் கர்ப்பமும்
கொடுமை செய்துவிடும் என்று தேவர்கள் அஞ்சி முறையிட்டதால், கலவி
முற்றுப்பெறுமுன் சிவன் நிறுத்தியதால் இந்திரியம் நிலத்தில் விழுந்து நிறைய
ஆபாசமாகி இறுதியாகச் சுப்பிரமணியன் தோன்றவும், கந்தபுராணம்
உருவாகவும் காரணமாகி விடுகின்றது. இந்த
மாதிரியான இந்து மத வக்கிரத்தையா நாம்
போற்றுகின்றோம்;?!
இராமாயணம் இராமனின் வக்கிரத்தில் கட்டமைக்கப்பட்டது. இந்த இராமனின்
சொந்தத் தந்தை தசரதன் அல்ல. தசரதன் மூன்று பெண்டாட்டியையும், 60 ஆயிரம் வைப்பாட்டிகளையும் வைத்திருந்தவன்;. மூன்று
பெண்ணுக்கும் குழந்தை பிறக்காததால், சிரங்கன் இடம் மூன்று
பெண்ணையும் ஒப்படைத்து யாகம் செய்தான்.
இங்கு மூன்று பெண்களின் தந்தை சிரங்கன் என்பது, இன்று மரத்தைச் சுற்றி பிள்ளை பெறும் பக்தியின் பின்னால் வேறு ஆண்களுடன்
புணர்ச்சி நடப்பதும், கர்ப்பம் தரிப்பதுமே நிகழ்கின்றது.
தசரதன் அல்லாத சிரங்கனுக்குப் பிறந்த இராமனை, இராவணன்
தங்கை சூர்ப்பநகை தன்னைத் திருமணம் செய்யும்படி கேட்டதால், அவளின்
மூக்கு, முலை, முடி போன்றவற்றை வெட்ட
உத்தரவிட்டதன் மூலம் இராமன், பெண்களைக்
கொச்சைப்படுத்துகின்றான்.
வால்மீகி இராமாயணத்தில் அயோத்தியா காண்டம் சரகம் 8 சுலோகம் 12 இல், இராமன் பல
மனைவிமாரை வைப்பாட்டியாக வைத்திருந்ததை அம்பலப்படுத்துகின்றது.
இராவணனை வென்ற இராமன் சீதையைப் பார்க்க மறுத்த நிலையில், ''இராவணனால் ஏற்பட்ட அவமானத்தைத் துடைத்திடத் தான் நான் இங்கு வந்தேனே ஒழிய
உனக்காக நான் இப்பெருந்தொல்லையை மேற்கொள்ளவில்லை.!" என்று தனது வக்கிரத்தை
வெளிப்படுத்தினான்.
மேலும் அவன் ''உன் (சீதை) நடத்தையை நான்
சந்தேகிக்கிறேன். இராவணன் உன்னைக் களங்கப்படுத்தி இருக்கவேண்டும். உன்னைப்
பார்க்கிறதே எனக்குப் பெரும் எரிச்சலூட்டுகிறது. சகிக்கவில்லை. ஓ, ஜனகனின் மகளே! உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்ச்
சேரலாம்... அழகிய பெண்ணொருத்தியை இராவணன் சும்மா விட்டிருப்பானா.?" (இராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்
பி.ஆர். அம்பேத்கர்) என்று கேட்கின்றபோது, தனது நிலையில் நின்றே உரைக்கின்றான். தான் இராவணன் இடத்தில் இருந்தால்
கற்பழித்திருப்பேன்.! என்பதையே சொல்லாமல் சொல்லுகின்றான்;
இந்த இடத்தில் சீதை தெளிவாக அவனை நிர்வாணப்படுத்திக் கூறுவதைப்
பார்ப்போம். ''நானே தற்கொலை செய்து என்னை மாய்த்துக்
கொண்டிருப்பேனே.!" இந்த இராமன், இராவணனிடம் இருந்து
மீட்ட சீதை மீதான சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள அவளைத் தீக்குளிக்கும்படி
கட்டாயப்படுத்தினான்;
நாடு திரும்பிய பின் சீதை கர்ப்பமாக இருக்கும்போது, வண்ணான் ஒருவன் சீதையின் கற்பு ஒழுக்கத்தை சந்தேகப்பட்ட நிலையில், இராமன் அதன் வழியில் சீதையின் கண்ணைக்கட்டி, நடுக்காட்டில்
துரத்திவிட்டான்.
சீதையைக் காட்டுக்குத் துரத்திய இராமன் ஆட்சி எப்படி இருந்தது.?
உத்தர
காண்டம் சரகம் 42, 43 இல், முறையே
சுலோகம் 8,1 இல், ''குடி, கூத்துமாக மாமிசத்தை விழுங்கியபடி, பெண்களைக்
கூட்டம் கூட்டமாகக் கொண்டு வக்கிரமான காமப் பசியாற்றுவதில் காலத்தையோட்டினான். சீதை
அவனுடன் இருந்த போதும் இதையே செய்ததுடன், சீதையையும் இதில்
ஈடுபடுத்தினான். இதில் இயல், இசை, நாட்டியத்தில்
புகழ்பெற்ற கிண்ணரி, உதமா, அப்சரசுகள்
போன்றவர்களும், பல அழகிகளும் அந்தப்புரத்தில் சிக்கிக் கிடந்தனர்.
சர்கா 4,2 செய்யுள் 18.21 இல்,
''மதுபோதையில் மாமிசத்தைச் சுவைத்தபடி, சீதைக்கு
மதுவைக் கொடுத்தபடி, மோகம் கொண்ட இராமன் வனமோகினிகள்,
நாகா மன்னனின் புத்திரிகள், கின்னரின் கன்னிப்
பெண்கள், வேறு கன்னிப் பெண்களும் ஆபாசமாகப் பாலியல்
வக்கிரத்தை வெளிப்படுத்தினர்.
சீதையை மீட்ட இராமன் இராவணனின் மனைவி மண்டோதரியைத் துரோகி
வீபீஷணனுக்குக் கொடுக்கின்றான். இதுதான் இராமனின் நீதி. இதுபோல் வாலியின் மனைவி
தாரகையைச் சுக்ரீவனுக்குக் கொடுக்கின்றான்.
இராமன் சீதையைக் காட்டிற்குத் துரத்திய பின் சீதை வால்மீகியின்
ஆசிரமத்தில் வாழ்கின்றாள். அங்கு இரட்டைக் குழந்தைகளை அவள் பெறுகின்றாள்;.
12 ஆண்டுகளுக்குப் பின் இராமனைக் காணும் வரை, சீதையை
இராமன் சென்று பார்த்தது கிடையாது.
12 வருடத்திற்குப் பின் இராமன் செய்த யாகத்துக்கு அழைப்பு
திட்டமிட்டே கொடுக்க மறுத்த நிலையில், வால்மீகி சீதையின்
மகனை அழைத்துக் கொண்டு யாகத்துக்குச் சென்றான். அங்கு இராமன்
மகனைக் கண்டதுடன், சீதை மீதான சந்தேகத்தை மீளவும் சுட்டிக்
காட்டினான். அதை நிவர்த்திக்க விரும்பினால் சீதை பெரும் மக்கள் கூட்டம் முன்பு
மீண்டும் தனது கற்பை நிரூபிக்க வேண்டும் என்றான். சீதை அழைத்து வரப்படுகின்றாள்.
அங்கு இராமனின் அவமானகரமான அவதூறுகளைக் கேட்டுத் தன்னைத்தானே தற்கொலைக்கு இட்டுச்
செல்லுகின்றாள்; கடவுளாகக்
காட்டப்படும் இராமனின் யோக்கியதை இது.
பெண்களைப் பகவத்கீதை மூலம் இழிவுபடுத்தவும் பின் நிற்கவில்லை. அதைக் கிருஷ்ணன் தன் வாயால்
கூறுகின்றான்.
''மாம் ஹி பார்த்த! வ்யாபாஸ்ரித்ய
யே பிஸ்யூ பாபயோயை
ஸ்தரீயோ வைஸ்யஸ்ததாஸீத்ர
ஸ்தேபி யாந்தி பராம்கதி"
இதன் அர்த்தம் ''அர்ச்சுனா! பெண்களோ, வைசியர்களோ, சூத்திரர்களோ, நீச
குலத்தில் பிறந்தவர்களோ எவரானாலும் என்னைப் பணிவாராயின் அவர்கள் பரகதியை அடைவர்.!"
-என்று பெண்களைத் தாழ்ந்த சாதிக்கு, தாழ்த்தப்பட்டு
இழிவு படுத்துவதைக் கடவுள் செய்யத் தவறவில்லை. இந்த இழிந்த கடவுள்களை வழிபடுவது
சமுதாயத்தின் அறிவற்ற இழிநிலையால்தானே ஒழிய, அறிவியல்
பூர்வமாக அல்ல.
''தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்
தெருவில் பெண்களுக்கு ஓயாத தொல்லை"
-என்று கூறி நியாயப்படுத்தும் போது, பெண்கள்
மீதான ஆண்களின் ஆணாதிக்கச் சேட்டைகள் வரைமுறையின்றி அங்கீகரிக்கப்படுகின்றது.
இன்று வீதியில் பெண்கள் செல்லும்போது, குரங்குகளாகக்
குந்தியிருக்கும் ஆணாதிக்கக் குரங்குகளின் சேட்டை எல்லையற்ற துன்பத்தைக் கொண்டவை
என்பதைப் பெண்கள் அறிவர். ஆனால் இந்துமதம்
இதை அங்கீகரிக்கின்றது.
இந்துமதத்தின் கீதை பெண்களை இழிவுபடுத்தியது.
''க்ருஹஸ்னேஹ வபத்தனம் நரனம் அல்பமேதஸம்
குஸ்திரீ கடாத்தி மம்ஸனி மகாமஸே கவம் இவா"
-இதன் அர்த்தம் ''வீட்டிற்குள்ளேயே தன்னை
அடைத்து வைத்துக் கொள்ளுகிற ஒரு கெட்ட மனைவியானவள், மகா மாதத்தில்
பசுக்களின் தசையை உண்ணுவதைப்போல, தன் கணவனின் தசையைத்
தின்னுகின்றாள்.!"
பிள்ளையார் வரலாறு பெண்கள் மீது சிவபெருமான் முதல் கொண்டு
கடவுள்களின் சேட்டைகளால் உருவானதே. இந்தப் பிள்ளையாரைக்
கொண்டே இன்று மதத்தின் பெயரில் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். பிள்ளையார் பிறப்பு வியக்கத்தக்க
ஆணாதிக்கப் பாலியல் வக்கிரங்கள் பல கொண்டது, பல வகை பிறப்பு
வரலாற்றையும் கொண்டதாகும். அவைகளைப் பார்ப்போம்.
1. சிவமகாபுராணத்தில், பார்வதியார்
குளிக்கப்போனபோது உள்ளே யாரும் வராது இருக்க, தனது உடலில்
இருந்த ஊத்தையைப் (அழுக்கு) பிராண்டி அதற்கு உயிர் கொடுத்து, அதைக் காவல் வைத்துவிட்டுச் சென்றார். சிவபெருமான் வந்து உள்ளேபோக
முற்பட்டபோது சிவபெருமானுக்கும், பிள்ளையாருக்கும் மோதல்
ஏற்பட, அதில் பிள்ளையாரின் தலை வெட்டப்படுகின்றது.
உமாதேவியார் தனது குழந்தையை வெட்டியதைக் கண்டு புலம்ப, சிவபெருமான்
யானைத் தலையை வெட்டிப் பொருத்தியதாகப் பிள்ளையார் வரலாறு கூறுகின்றது. இங்கு
தெய்வமான உமாதேவியாரின் குளிக்கும் அறைக்குள் போகும் அளவுக்குத் துணிவுள்ளவர்கள்
யார்.? இது ஆணாதிக்க ஆண் கடவுள்கள் என்பதும் தெளிவாகின்றது.
ஆண் தெய்வங்களிடம் தமது பாதுகாப்பை வேண்டி வழிபடும் பெண்கள்
எப்படிப் பாதுகாப்பைப் பெறமுடியும்.? ஏனெனில் அந்தத் தெய்வங்களே பல வக்கிரங்களில்
பிறந்ததுடன், கற்பழிப்புகளும் கூடிய வன்முறைகளில்
ஈடுபட்டவர்கள்.
பெண்கள் தமது உடுப்பை மாற்றும் அறையில் வைத்திருக்கும் ஆண்
தெய்வங்களும் சரி, தூண்துரும்பில் இருக்கும் தெய்வங்களும்
சரி, பெண்களின் நிர்வாணத்தை, ஆணாதிக்க
இரசனையில் இரசிக்கின்றன அல்லவா.? இதைத்தான் பிள்ளையார் கதை
தெளிவாக்குகின்றது.
பிள்ளையார் இன்று மதத்தின் ஆதிக்கச் சின்னமாகியுள்ளது.
ஆயிரக்கணக்கான மக்களைப் படுகொலை செய்யும் பலவிதமான கொண்டாட்டங்களைத்
தோற்றுவித்துள்ளது. இந்தக் கொண்டாட்டம் ஆணாதிக்க
வெறியர்களின் காமப்பசியைத் தீர்க்கும் கற்பழிப்புகளைச் செய்யும் ஊடகமாகியுள்ளது. பிள்ளையாரின் பெயரில் செய்யும் சதுர்த்தி இன்று மதக்
கலவரத்தின் தூண்டுகோலாக மாறியுள்ளது. சதுர்த்தி நான்காவது திதி (நாலாம் சடங்கு)
என்பது திருமணத்தின் பின் மணமகனும் மணமகளும் உடலுறவைக் குறித்துக் கூடும் நாளைக்
குறித்து உருவானது.
தேவகுருவாக இருக்க என்ன தகுதி வேண்டும்? மனு
இதை அழகாகவே இந்து மனுதர்மத்தில் கூறுகின்றார்.
''ஸீத்ருகொ மதனாவஸம் ப்ரஜபேன்மனும்;
அயுதம் ஸோசிராதேவ வாக்பதே; ஸமதாமியாத்" (அர்த்தமற்ற இந்துமதம் (பாகம் 1) மஞ்சை வசந்தன்
எம்.ஏ. பி.எச்டி.)
அதாவது ஓர் அழகிய பெண்ணின் பெண் உறுப்பைப் பார்த்துக் கொண்டு
பத்தாயிரம் முறை மந்திரம் சொல்லுபவன் தேவகுருவுக்குச் சமமாவான் என்கிறது இந்து
மதம். ஆணாதிக்க வக்கிரம் கொப்பளிக்கின்ற போது, எல்லா
ஆணாதிக்கக் கூத்துகளுமே இந்து மத ஆன்மீகமாகும். விரும்பிய பலன்கள் கிடைக்க
நிர்வாணமாக இரவில் தலைமயிரை அவிழ்த்து விட்டபடி, பதினாயிரம்
முறை ஜெபம் செய்யவேண்டும் என்று இந்துமத ஸ்மிருதிகள் கூறுகின்றன. இவர்கள் தான்
சாதியினதும், ஆணாதிக்கத்தினதும் தலைசிறந்த கொடுங்கோலராவர்.
அரசனாக விரும்புபவன் என்ன செய்யவேண்டும் என்று இந்த மத ''மஹோநதி" நூல் கூறுவதைப் பார்ப்போம்.
''சாவம் ஹ்ருதய மாருஹ்ய நிர்வாஸா, ப்ரேத பூகத்: அர்க்கபுஷ்ப ஸஹஸ்ரேணாப்யக்தேன ஸ்வீயரேதஸா தேவீம்ய: பூஜ யேத் மகத்யா ஜப்ன்னே கைக சோமனும் ஸோசிரேணைவ காலேன தரணீப்ரபுதாம் வ்ரஜேத்"
அதாவது, சுடுகாட்டில் நிர்வாணமாகப் பிணத்தின்
மார்பில் உட்கார்ந்து கொண்டு, தனது வீரியத்தில் (ஆண் விந்து)
தோய்க்கப்பட்ட ஆயிரம் எருக்கம் பூக்களினால் ஒவ்வொரு தடவையும் மந்திரஞ்சொல்லி
தேவியைப் பூசை செய்கிறவன் வெகு சீக்கிரத்தில் அரசனாவான். பாலியல் வக்கிரத்தில்
இருந்து வழிகாட்டும் இந்துமதம், எப்படிப்பட்டது என்பதற்கு
இவைகளே சாட்சிகள். இந்த ஆபாசமான கூத்துகளைப் பார்ப்பனர் அல்லாத மக்கள் புரிந்து
கொள்ளக் கூடாது என்பதால்தான், சமஸ்கிருத மொழியில் ஆணாதிக்க
ஆபாசமாக வக்கிர மந்திரம் சொல்லி மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிக்கின்றனர்.
சிவனுக்குச் சமமான தகுதியடைய என்ன செய்யவேண்டும்?
''... சவஸ்ய ஹ்ருதி ஸமஸ்திதாம்; மஹாகாலேன தேவனே
மாரபுத்தம் ப்ரயூர் வதீம், தாம் த்யாயேத்
ஸ்மோவதனாம்
விதத்ஸீரதம் வையம் ஜபேத் ஹைஸ்ரம்மிய: ஸசங்கரஸமோ
பவேந்"
-என்று இந்துமத நூலான மஹோநதி
கூறுகின்றது. இதன் அர்த்தம், பிணத்தின் மார்பில் இருந்து
மகாகாலனைப் புணர்ந்து கொண்டிருப்பவளும், புன்சிரிப்போடு
கூடிய முகத்தையுடையவளுமான தேவியைத் தியானித்தபடி, ஒரு
பெண்ணுடன் புணர்ந்தபடி ஆயிரம் உருவேனும் ஜெபிக்கின்றவன் சிவனுக்கு ஒப்பாவான்.!
இந்து மத சிவன் பக்தர்கள் முதல் அனைத்து பக்தர்கள் ஈறாக இதை
எப்படிப் போற்றமுடிகின்றது.?
கிருஷ்ண பட்சத்து சதுர்த்தசி நடு இரவில் நீராடி, சந்தனம் இட்டு, சிவந்த மாலை அணிந்து, சிவந்த உடையணிந்து தனியிடத்தில் இருந்து கொண்டு, இளமையும்
அழகும் நிறைந்த ஐந்து ஆண்களைப் புணரக் கூடிய புன்சிரிப்பும் அவிழ்த்துவிட்ட
கூந்தலையுமுடைய பெண்ணுக்கு, ஆடை அணிகள் கொடுத்து, மகிழ்ச்சியுண்டாக்கி, பின் அவளின் ஆடைகளை, அகற்றி நிர்வாணமாக்கிப் பூசிக்கவேண்டும். பின் அவளைப் புணர்ந்து
பத்தாயிரம் மந்திரம் சொல்பவனுக்குச் செல்வம், ஆயுள், புத்திரப்பேறு, சுகம், நல்ல
மனைவி கிடைக்கும். பாவங்கள் அவனை அணுகாது. ஆறுமாதம் காலையில் எழுந்து நூறு உரு
ஜெபித்தால் சுக்கிராச்சாரியை விடச் சிறந்த கல்விமான் ஆவான்.! இவ்வாறு பூசா
விதியையும் அதன் பலன்களையும் இந்து மதம் கூறுகின்றது.
புணர்வதற்கு, அதுவும் வக்கரித்து இவ்வாறு
செய்வதன் ஊடாக நல்ல மனைவியை அடைவான் என்று கூறும் இந்துப் புரவலர்களின் ஆணாதிக்க
வக்கிரங்கள்தான் இவை. சுக்கிராச்சாரி போன்ற மண்டைக் கிறுக்கர்களின் அறிவு
உளறல்தான் இவை என்று இந்தக் கூத்தின் மூலம் அம்பலமாகின்றது. அதாவது அழகுராணி
போட்டி போன்றனவற்றின் தோற்றத்துக்கு இந்துமதமே மூலமாகின்றது அல்லவா.? ஆடை கொடுத்து, அதை விதவிதமாக அவிழ்த்துவிட்டு,
இரசித்துப் புணருவதே இன்றைய ஏகாதிபத்திய அழகுராணிப் போட்டி. இதையே
இந்து மதம் செய்து புணரும்போது அங்கு செல்வம், ஆயுள்,
புத்திரப்பேறு, சுகம், நல்ல
மனைவி கிடைப்பாள் என்பதன் ஊடாக இருக்கும் ஒற்றுமைதான், அண்மையில்
இந்தியாவில் நடந்த அழகுராணிப் போட்டிகளும் தெரிவுகளும்.
குழந்தை பெற வேண்டுமா.? அதற்கும் வழியை இந்துமதம் கூறுகின்றது.
வேதங்கள் இதிகாசங்கள் கூறும் புத்திரக் காமேஷ்டி யாகத்தின் மூலம் எதைச் செய்யச்
சொல்லுகின்றது எனப் பார்ப்போம்;. புத்திரன் வேண்டுபவன் தனது
மனைவியைக் குதிரையின் அருகில் அனுப்பிவைப்பான். அவள் அதனருகில் சென்று,
''1. கணானாம் த்வா, கணபதிம் ஹவாமஹே (வஸோமம)
2. ப்ரியாணாம் த்வா: ப்ரியாபதிம் ஹவாமஹே (வஸோமம)
3. நதீனாம் த்வா நிதிபதிம் ஹவாஹமஹே (சோமம)" (அர்த்தமற்ற இந்துமதம் (பாகம் 1) மஞ்சை வசந்தன்
எம்.ஏ. பி.எச்டி.)
-என்று கூற வேண்டும். இதன் அர்த்தம், ''ஓ
குதிரையே! கணங்களின் தலைவனும், விருப்பத்தை நிறைவேற்றும்
தலைவனும், பொருட்களின் தலைவனும் ஆகிய உன்னை அழைக்கின்றேன்.
நீ எனது கணவனாக இருக்கவேண்டும். பிறகு பெண் குதிரைக்கு அருகில் படுத்துக் கொண்டு,
''ஓ குதிரையே! கர்ப்பத்தை உண்டு பண்ணுகிற வீரியத்தை இழுத்து
யோனியில் இடுகிறேன். அதேபோல் நீயும் செய்ய வேண்டும்." இப்படி சொன்னவுடன்
பெண்ணைத் துணியொன்றால் மூடிவிடவேண்டும். அவள் அதன்பின் ''விந்துவைத்
தன்னுள் வைத்துக் கொண்டிருக்கின்ற குதிரை அதை என்னிடத்தில் வைக்கட்டும்;"
பிறகு ஆண் குறியைத் தனது கையால் பெண் குதிரையின் யோனியில் வைப்பாள்.
பின் ஆண் குதிரையிடம் சென்று, நான் செய்யும் காரியத்தை
எனக்குப் பதிலாக நீ செய்ய வேண்டும் என்று வேண்டுவாள். இதையே யஜீர் வேதத்தில்
புத்திரக் காமேஷ்டி செய்யக் கோருகின்றது.
இராமனைப் பெற்ற மலட்டுத் தசரதன் செய்த யாகமும் இதுதான்.
இன்று குழந்தை வரம் வேண்டிக் கோயில் செல்லும் பெண்கள், மலட்டுக் கணவன் ஊடாக அல்லது ஆணாதிக்க வக்கிரத்தில் முன்கூட்டியே விந்தை இழக்கும் கணவனுக்குக்
குழந்தையைப் பெற முடியாது. அவர்கள் கோயில் பூசாரிக்கு மட்டுமே குழந்தையைப்
பெற்றுப் போடமுடியும்.
குழந்தை பெற இந்து மதம் மிருகத்துடன் புணரும்படி முன்வைக்கும் இந்து
வேத வக்கிரங்களில், உண்மையில் யாகம் செய்யும் முனி
பார்ப்பனர்களின் ஆணாதிக்கக் காம இச்சையை அப்பெண்களிடம் தீர்க்கும் மாற்று
வழியாகும். இந்தப் பார்ப்பனர்கள் திருமணத்துக்கு முன் பெண்ணை அனுபவிக்கும்
உரிமையைக் கொண்டிருந்ததுடன், பார்ப்பனர்களைப் புணர்வது
பெண்களின் புண்ணியத்தைக் குறிக்கும் என்ற இந்துப் பண்பாடுகளும் சமுதாயத்தில்
இருந்துள்ளது.
ஆணாதிக்கச் சிவன் தனது மனைவியைத் தாண்டி மற்றைய பெண்களைப் புணரும்
தன்மையும், வக்கிரமும் நியாயப்படுத்தும்போது உரிமை
மறுக்கப்பட்ட பெண் கவர்ச்சியால் எதையும் சாதிக்க முடியும் என்கின்றது.
பெண்கள் தமது மார்பை இந்தா பிடி என அழைப்பவர்கள் என்று கருதும்
ஆணாதிக்க ஆண்கள் சிவனின் அதே வாரிசுகள்தான். இன்று சினிமா முதல் ஆணாதிக்கப்
பண்பாட்டுத் தளம் பெண்ணின் மார்பைச் சிவனைப் போல், மோகித்து
காட்டும் எல்லா விளம்பர மற்றும் கலை இலக்கியக் கோட்பாடுகள் வக்கிரத்தின் உச்சமான பன்றித்தனமாகும்;
இந்து மதத்தை வழிபடும் மானம் வெட்கமற்ற ஆண்கள், குறிப்பாகப் பெண்கள் இதைச் சகித்துக் கொள்ளலாம்;. ஆனால்
அறிவுள்ள மானவெட்கம் உள்ளவன் இதை எப்படி சகித்துக் கொள்வது.? இதை வேரறுக்க இந்து மதத்தையே
நொறுக்கவேண்டும்.
பட்டினத்தாரின் ஆணாதிக்கம் பற்றிப் பார்ப்போம். ஒருநாள்
பட்டினத்தார் விபச்சாரி வீட்டுக்குச் சென்றாராம்;. விபச்சாரியின்
மகள் மேல் ஆசைப்பட்டு, அவளைப் புணர அழைத்தாராம். அவள்
அம்மாவிடம் கேட்டு வருவதாக உள்ளே செல்ல, பட்டினத்தாருக்கு
விந்து வெளியேறி விட்டதாம். அந்த விந்தை ஒரு எருக்கந்தொன்னையில் பிடித்து
வைத்திருந்தாராம். தாயின் சம்மதம் பெற்று வந்த மகள் புணர அழைத்தாளாம். அதற்குப்
பட்டினத்தார் கோபத்தோடு ''உன்னை அழைத்தவன் தொன்னையிலே,
என்னிடம் வந்தால் இடுப்பை ஒடித்து விடுவேன்" என்று கூறிவிட்டுச்
சென்றாராம். அப்பெண் விந்து வீணாகக் கூடாது என்று நினைத்து, வாயினூடாக
எடுத்து விழுங்கினாளாம்; இதனால் அப்பெண் கருத்தரித்து
குழந்தையைப் பெற்று எடுத்ததாக இந்துமத வரலாறு கூறுகிறது. நம்புங்கள்;
திருமணம் செய்யாது கருத்தரிக்கும் பெண்களே, உங்கள் நிலையை இந்துப் பண்பாட்டு
ஆணாதிக்கத்திடம் சொல்லிப் பாருங்களேன்..என்ன நடக்கின்றது எனப் பார்ப்போம்.!
பார்ப்பனிய ஆணாதிக்க இலக்கியம் புகழும். பெண்களே என்ன
செய்யப் போகின்றீர்கள்.? எதிர்த்து நிற்க போகின்றீர்களா? அல்லது இணங்கிப் போகப் போகின்றீர்களா.? மனைவியைக்
கூட்டிக் கொடுப்பதும் பதிவிரதைக்கு உயர் பண்பாடாகும்.
இயற்பகை நாயனார் தனது மனைவியையே கூட்டிக் கொடுத்ததால் 63 நாயன் மார்களில் ஒருவரானார். இதை நீங்கள் செய்யப் போகின்றீர்களா.? பெண்கள் இதற்கு இணங்கப் போகின்றீர்களா.? இன்று தேசங்களை ஏகாதிபத்தியத்துக்குக்
கூட்டிக் கொடுக்கும் ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமை அரசுகளை மௌனமாக அனுமதிக்க
போகின்றோமா.? சிந்தியுங்கள். எதைச் செய்யப் போகின்றோம்.?
பெண்கள் ஏன் பூச்சூடுகின்றனர் தெரியுமா? ஆண்களின் காமத்துக்கு, பெண்கள் தாங்களாகவே திரிவதாகக் காட்டி, அதற்குத்
துணை போவதற்குமே. இந்தியப்
பண்பாட்டின் சின்னமாகக் காட்டும் பெண்களின் தலையில் வைக்கும் பூ, ஆண்களின் காமத்தைத் தூண்டும் ஓர் ஊடகமாகும். மல்லிகை, முல்லைப் பூ காமத்தை ஏற்படுத்தும் மணம் கொண்டது என்ற அடிப்படைக்
காரணத்தைக் கொண்டே, அவை பெண்கள் தலையில் அணிவிக்கப்பட்டது.
ஆண்கள் படுக்கையை நாடி வீடு வரும்போது, பெண்ணின் கடமையை
ஊக்குவிக்க, பூ கொடுக்கும் அதேநேரம் ஆணின் காமத்தை ஏற்படுத்த
உதவுவதாகவே இந்த ஆணாதிக்கப் பண்பாடு காணப்படுகின்றது. இதில் இருந்தே கன்னிப்
பெண்கள் மல்லிகை, முல்லைப்பூ சூடக்கூடாது என்ற வழக்கமான
கட்டுப்பாடுகளும் காணப்படுகின்றது.
கடவுள்களின்
கற்பழிப்பை இந்து மதம் நியாயப்படுத்தும்போது, பெண்கள் எப்படி இந்து இராஜ்ஜியத்தில் கற்புரிமையைப் பாதுகாக்க முடியும்.?
எதிரியைத் தோற்கடிக்க எதிரியின் மனைவியைக்
கற்பழிக்குமாறு சிவன் வழிகாட்டுகின்றார்.
சொந்தக் குழந்தைகளைப் பலியிட இந்து மதம் இதைத் தனது புராண
இதிகாசங்கள் ஊடாக நியாயப்படுத்தி ஊக்குவிக்கின்றது.
பெண்களின் இயற்கையான பாலியல் தேவைகளை மறுத்து, வைப்பாட்டித்தனம் ஆண்களின் வக்கிரத்தில் உருவாகி இருப்பதற்கு இந்தியாவில்
இந்து மதம் காரணமாகும்;
இந்து மதம் ஆண்களுக்குக் கூறும் போதனை, பெண்களைக் கடத்திச் சென்று ஆணாதிக்கச்
சுவைகளை அனுபவியுங்கள் என்பதே.
சமஸ்கிருத திருமண தேவ பாஷையான மந்திரத்தில் கூட வக்கிரப் புத்தியால்
பெண் புணரப்படுகின்ற காட்சி சர்வ சாதாரணமாக எல்லா திருமணத்திலும் ஓதப்படுகின்றது.
''ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ருத்யோ அக நிஷ்டேபதி:
துரீயஸ்தே மனுஷ்யஜா"
-என்ற
தேவ பாஷையின் தமிழ் விளக்கம் ''ஸோமன் முதலில்
இந்த மணப் பெண்ணை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது
கணவன் அக்னி. உன்னுடைய நான்காவது கணவன்தான் இந்த மனித ஜாதியில் பிறந்தவன்.!"
என்று பெண்ணை விபச்சாரியாகப் பட்டம் (பெண்ணின் கற்புரிமையைச் சூறையாடியபடிதான்)
சூட்டியே மந்திரத்தின் வடிவங்கள் உருவாகின்றன.
தொடர்ந்து இந்த தேவ பாஷை மந்திரத்தைப் பார்ப்போம்.
''உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸோ நம ஸேடா
மவேறத்வா, அந்யா மிச்ச ப்ரபர்வ்யகும் ஸ்ஞ்ஜாயாம் கத்யா
ஸ்குஜ! என்றதன் தமிழ் விளக்கம் ''விசுவாவசு என்னும் கந்தர்வனே,
இந்தப் படுக்கையிலிருந்து எழுந்திருப்பாயாக உன்னை வணங்கி
வேண்டுகிறோம். முதல் வயதிலுள்ள வேறு கன்னிகையை நீ விரும்புவாயாக. என் மனைவியைத்
தன் கணவனுடன் சேர்த்து வைப்பாயாக" என்று கூறும்போதே பெண் தொடர்ச்சியாகப்
புணர்ந்தபடி வாழ்வதாக இழிவுப் படுத்தப்படுகின்றாள்.
இந்தத்
திருமண மந்திரத்தில் தொடரும் வரிகள் அருவருப்பான தொடர்ச்சியாக நீடித்து
செல்லுகின்றன. பெண்ணின் பிறப்பு முதலே பெண் உறுப்பை மையமாக வைத்து மந்திர, தந்திர, சடங்குகள், பண்பாடுகள்
எல்லாம் புணர்ச்சியை உள்ளடக்கி அடிமைப்படுத்துகின்றன.
"ஆணாதிக்கமும் பெண்ணியமும்"
ஆசிரியர்: இரயாகரன்,பி.
வெளியீட்டாளர்: கீழைக்காற்று
வெளியீட்டகம்.
வெளியீட்டாண்டு: 2001 பக்கங்கள்: 272
இந்த நூலில் உள்ள "இந்து
மதத்தில் ஆண் பெண்ணின் வக்கரித்த உறவுகள்" கட்டுரை சுருக்கப்பட்டுள்ளது. .
No comments:
Post a Comment